உருத்திர பசுபதி நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். காவிரி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத் தலை யூரிலே அந்தணர் குலத்திலே அவதரித்தார் பசுபதியார். சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ் செல்வமெனக் கொண் டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தை நொடி நேரமும் வீணாக்காது ஓதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் வழக்கத்தில் இருந் தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதி யையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.அவர் குருபூஜை இன்று(புரட்டாசி அஸ்வினி).
