பதில்: இரண்டும் வெவ்வேறு தான். பயன்பாட்டில் ஒரு உதாரணத்தோடு சொல்கின்றேன். ஒரு தந்தை தன்னுடைய பிள்ளையைப் படிக்க வைப் பதும், ஒரு குறிப்பிட்ட வயது வரை காப்பாற்றுவதும், கட்டிய மனை வியை காப்பாற்றுவதும் , அதேபோல மனைவி ஒரு கணவனுக்கு வேண் டிய உதவிகளை செய்வதும், அதேபோல வளர்ந்த பிறகு வயதான பெற் றோர்களை பிள்ளைகள் காப்பாற்றுவதும் கடமைகள். ஆனால் கடன் என்பது நாம் செய்தே ஆக வேண்டியது. அப்படி இல்லாவிட்டால், கடன் எப் படி வட்டியோடு வளர்ந்து விடுமோ, அதைப்போல செய்யாததால் வரும் குற்றங்களும் தோஷங்களும் வளர்ந்து விடும். உதாரணமாக, நம்முடைய சமயத்தில் மூன்று கடன்களைச் சொல்லி இருக்கின்றார்கள். தேவர் களுக்குச் செய்ய வேண்டிய “தேவ கடன்” ரிஷிகளுக்கு செய்ய வேண்டிய “ரிஷி கடன்” அதைப்போலவே முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய நீத்தார் வழிபாடு (பிதுர் கடன்) . இவைகள் செய்யாவிட்டால் அதனால் வருகின்ற பாவங்கள் கடனோடு சேர்ந்த வட்டி போல வளர்ந்து விடும்.
கேள்வி:இயற்கையை வணங்கினால் கடவுளை வணங்கியது போல என்கிறார்களே?
பதில்: உண்மைதான். நம்முடைய சமய உண்மைகள் இதைத்தான் தெரி விக்கின்றன. நாம் மழையை வணங்குகின்றோம். மண்ணை வணங்கு கின்றோம். காற்றை வணங்குகின்றோம். மரங்களை வணங்குகின்றோம். பல திருத்தலங்களில் தல விருட்சமாக பல்வேறு மரங்களை வளர்க் கின்றோம். பூக்களை வணங்குகின்றோம். நீரை வணங்குகின்றோம் .அதற் கென்று தனியாக மாசிமகம் போன்ற திருவிழாக்களைக் கொண் டாடுகின்றோம். நிலவை வணங்குகின்றோம். சூரியனை வணங்கி பொங் கல் வைத்துப் படைக்கின்றோம். மாடுகளை கோ பூஜை செய்து வணங் குகின்றோம் .யானையை கஜ பூஜை செய்து வணங்குகின்றோம். தீயை வணங்குகின்றோம் .ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனமாக ஒவ்வொரு விலங்கை வைத்திருக்கின்றோம். காக்கைக்கும் நாய்க்கும் உணவளிக்கின்றோம். சிற்றுயிரான எறும்புக்கு அரிசிமாவால் கோலமிட்டு உணவு அளிக்கின்றோம். அவ்வளவு ஏன், விஷமுள்ள நாகங்களைக் கூட நாகசதுர்த்தி என்று ஒரு தினம் வைத்து வணங்குகின்றோம். இவைகள் எல்லாம் சகல உயிர்களிடத்திலே நாம் கொண்டிருக்கின்ற அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் செயல்கள். அதை அப்படியே சடங்குகள் ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் இயற்கையை வணங்குகின்றவர்கள் நாம்.
கேள்வி:வெறும் ஏட்டுப் படிப்பு கடவுளை அடைய உதயமா?
பதில்:ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. கடவுளைப் பற்றிய படிப்பு கடவுளைக் கொண்டு வந்து சேர்க்காது. இனிப்பு என்று எழுதிய காகிதத்தை எத்தனைதான் நாக்கில் வைத்தாலும் இனிக்காது. அதனால் தான் சுய அனு பவமாக நம்முடைய ஆன்றோர்கள் தங்களுடைய தெய்வ அனுபவத்தை எழுதி வைத்தார்கள். அதற்கு உதாரணமாகத்தான்,” நான் கண்டு கொண் டேன்” “என் நாவுக்கே” என்று சுய அனுபவமாக சொல்லி வைத்தார்கள். காரணம், முயற்சி செய்யாமலேயே ,சில பேர் எனக்கு அந்த அனுபவம் இல்லையே என்று சொல்வார்கள். அது மட்டும் இல்லை. தெய்வீக அனு பவம்கூட அவரவர்களுக்கு வேறுபடுவது உண்டு.
