திருநாளைப் போவார் நாயனார் இறையருளால் நந்தி விலக இறை தரிசனம் பெற்றவர். அப்படி அவர் தரிசனம் பெற்ற தலம் திருப் புன்கூர்.வைதீசுவரன் கோயில் அருகே உள்ளது.திருநாளைப் போவார் நாய னாரின் இயற்பெயர் நந்தனார் என்பதாகும். இவர் ஆதனூர் என்னும் ஊரில் பிறந்தார். ஆதனூர் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. நீர் வளமும், நிலவளமும் மிக்கதாய் வயல்கள் நிறைந்த அவ்வூரில் உழவுத் தொழில் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களில் நந்தனார் என்பவரும் ஒருவர். சிவபெருமானின் மீது மாறாத அன்பு கொண்டி ருந்தார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோவி லுக்கு செல்ல இயலாது.சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோவிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை.ஆனாலும் நந்தனார் கோவில்களில் இசைத் தொண்டு புரிபவர்களுடைய யாழ், வீணை போன்ற இசைக்கருவிகளுக்கு வேண்டிய நரம்பினை வழங்குவார்.கோவில்களில் ஆராதனைக்கு தேவையான கோரோசனையைக் கொடுப்பார்.சிவாலயங்களில் ஒலிக்கப்படும் பேரிகை, முரசு ஆகியவற்றின் இசையையும், யாழ், வீணை போன்ற இசைக் கருவி களின் நாதங்களையும் கேட்டதும், நந்தனார் மகிழ்ந்து இன்புறுவார்; குதிப்பார்; பாடுவார்; கூத்தாடுவார்; கொண்டாடுவார். ஒருசமயம் நந்தனார் மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூரை அடைந்தார். அக்கோவி லின் உள்ளே செல்ல அக்கால கட்டுப்பாடுகள் தடுத்ததால் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார்.
சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி நந்தனாருக்கு மறைத் தது.மனம் நொந்த நந்தனார் இறை தரிசனம் கிடைக்க அருள்புரியுமாறு இறைவனை மனம் உருகி வேண்டினார்.இறைவனார் தம் பக்தனின் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்தியம்பெரு மானுக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகி யதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. அந்த இறையடியாரின் குரு பூஜை தினம் இன்று.(புரட்டாசி ரோகிணி )
