ஒருவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அக்காலத்தில் ஒரு பாட்டு உண்டு . இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வையகம் இதுதானடா …..
வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும்)
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே பகைமையை வளர்க்கும் (வாழ்ந்தாலும்)
படம்: நான் பெற்ற செல்வம்
இசை: ஜி.இராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
பாடல்: கா.மு.ஷெரீப்
பொதுவாக இதனை நினைத்துக்கொள்ளுங்கள். கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம். ஆனால் கழுகுகள் தங்களை எதிர்த்து வரும் காகங்களை எதிர்த்து சண்டை போடுவதில்லை .மாறாக உயரே பறந்து செல்லும் .காகம் உயரே போகமுடியாது. மூச்சு விட திணறும். தானாக கீழே வந்துவிடும்.
அதுபோல் நம் நிலையை கண்டு கேலி செய்வோர் செய்யட்டும். கண்டுகொள்ளாமல் இருந்தால் நம் குறிக்கோளில் வெற்றி அடைவது உறுதி .நம்மை கேலி செய்தவர்கள் உயரே போகமுடியாமல் சில்லறைகளை போல தானாக சிதறி விடுவார்கள்.
