
யாழ் கம்பன் கழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டின் தலைவர் கே. அண்ணாமலை சென்று பேசியிருக்கின்றார். பொதுவாகவே அரசியல் தலைவர்கள் கம்பன் மகாநாட்டில் பேசுகின்ற பொழுது கம்பனை பற்றிப் பேசாமல் மற்ற மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் கே அண்ணாமலை கிட்டத்தட்ட எங்கு உரை செய்தாலும் அதிலே சிந்திக்கக் கூடிய பல புதிய செய்திகள் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி பேசுகிறார்.
அவர் யாழ் கமபன் விழாவில் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் போது நல்ல முறையில் தயாரிப்பு தெரிகிறது..கொஞ்சம் அரசியலும் உள்ளது.
சென்னையில் இருந்து இப்பொழுது யாழ்ப் பாணத்திற்கு நேரடியாக விமானத்தில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பினை இந்திய அரசு சாத்தியமாக்கி இருக்கிறது .
சென்னை திருச்சி பயணத்தை விட இது குறைந்த நேரம்.
இலங்கை நல்லூர் என்கிற ஊரில் புகழ்பெற்ற கந்தசாமி கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் மிக அற்புதமாக பராமரிக்கப்படுகின்றது. அந்தக் கோயிலை எப்படி பராமரிக்கின்றார்களோ, அப்படி தமிழ்நாட்டினுடைய கோயில்களை பராமரித்தால் நன்றாக இருக்கும். அறம் சார்ந்து என்கிற வார்த்தையைப் போடுகிறார்.
அந்தக் காலத்தில் ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் பெரிய அளவு தொடர்பு இருந்தது. ஏன் ஒரு 70, 75 ஆண்டு காலத்துக்கு முன்பு வரை நம்முடைய மக்கள் இலங்கையில் சென்று வியாபாரம் செய்தார்கள். இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கி அவர்களும் மிக எளிதாக வர முடிந்தது. தனுஷ்கோடி வரை சென்று அங்கே இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக தலைமன்னாருக்கு சென்று யாழ்ப்பாணத்துக்கு போவது எளிதான விஷயமாக இருந்தது.
அக்காலத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் இலங்கையில் இருந்து வரும் என்கின்ற ஒரு செய்தியையும் அவர் சொன்னது வியப்பாக இருந்தது.
