இன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று சூரிய னுக்குரிய ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவது சூரியனுக்குரிய சப்தமி திதி. இப்படி மூன்று விஷயங்களும் பொருந்தி வருவது என்பது அபூர்வம். அது இன்றைக்கு வந்திருக்கிறது .
இன்றைக்கு காலையில் எழுந்து நீராடி, சூரிய பகவானை வணங்குவதும், சூரிய நாராயணரை வணங்குவதும், மிகச்சிறந்த நற்பணிகளைத் தரும்.
குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்குவது மிகவும் சிறப்பு. முன்னோர்களிடம் ஆசி பெற வேண்டும்..
இன்று முருகனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரம் என்பதால் நேற்று சஷ்டி விரதம் இருந்தவர்கள், இன்றும் அந்த முருகனை எண்ணி விரதத் தை இருக்கலாம்..
வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை(கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திரு மங்கையாழ்வார் சன்னதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ் வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளை யில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.
மின்னுமா மழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே
108 திவ்ய தேசங்களில் ஒன்று ,மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோயில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.
