ஆவணி தேய்பிறை ஏகாதசி.
நம்முடைய வீட்டுக்கு கிருஷ்ணர் வந்து விட்டு சென்ற கிருஷ்ண ஜெயந்திக்கு அப்புறம் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி.
காமிகா ஏகாதசி (kamika ekadashi) என்று பெயர்.
பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடியது.
ஒரு சின்ன கதை.
பிரம்மஹத்தி தோஷம் என்ன என்று தெரிஞ்சுக்கணும்.அதற்கு இந்த கதை
ஒரு செல்வந்தர் இருந்தார். நல்ல மனிதர்.
கோயில் குளம் என்று நிறைய செலவு பண்ணுவார்.
ஏழைகள் வந்தால் அவர்களுக்கு உதவி செய்வார்.
பசியோடு வந்தவர்களுக்கு உணவு அளிப்பார். அன்னதானங்கள் செய்வார்.
யார் யாருக்கு என்னென்ன உதவி செய்யணுமோ எல்லாவற்றையும் பண்ணுவார்.
நல்லாவே இருந்த அவர் தெரியாமலேயே வேதம் படிச்ச ஒரு பிராமணருக்கு ஒரு சின்ன தப்பு பண்ணிட்டார்.
அது எப்படியோ நடந்து போச்சு.
அவர் பாதிக்கப்பட்டார்.
ஒரு ஏழைப் பிராமணர், இவர் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இவருடைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு விட்டார். இறந்தும் போய்விட்டார்.
பிரம்மஹத்தி தோஷம் வந்து விட்டது.
அது வலுவானது.
அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து வெளிவர முடியாது .அந்த தோஷம் இவரைப் பற்றிக் கொண்டது.
செல்வாக்கோடு தொட்டதெல்லாம் துலங்கிய இவருடைய வாழ்க்கையிலே தொட்டதெல்லாம் பட்டுப் போனது.
கடன் கொடுக்க வேண்டியவர், ஒரு பெரிய கடன் வாங்கி விட்டு இறந்து விட்டான். அந்த கடன் வசூலாகவில்லை.
வியாபாரம் படுத்தது. ஏதோ ஓர் பிரச்சினை.குடும்ப சிக்கல்கள்.
வியாபாரத்தில் ரொம்ப பின்னடைவு ஏற்பட்டு விட்டது. ஜாதகம் பார்த்து பரிகாரம் பண்ணிப் பார்த்தார். ஏதேதோ செய்து பார்த்தார். அந்த பிரம்ம தோஷம் பாடாய்ப் படுத்தியது.
எந்த பிராயசித்தமும் பலிக்கவில்லை.
சரியான பிராயசித்தம் யார் சொல்றது?
பகவானே நினைச்சால் ஒரு வழி காட்டுவார்.
இவர் ரொம்ப வருத்தப்படுவார். கண்ணுக்கெட்டிய தூரம் எந்த வழியும் தெரியவில்லை.
அந்த ஊருக்கு பெரியவர் ஒருவர் வந்தார்.
இவர் நிலமையைப் பார்த்தார்.அவருக்கும் பரிதாபமாக இருந்தது.
இருந்தும் சொன்னார்.
“உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது .உங்கள் பிரச்சனைக்கு மட்டு மல்ல, எல்லார் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. ஆனால், அதை முறையாக நாம் தெரிந்து கொள்வதில்லை. பின்பற்றுவதில்லை” என்று சொன்ன அந்தப் பெரியவர்,” இந்த விரதத்தை நீங்கள் இருந்தால் உங்கள் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்”என்றார் .
“என்ன செய்ய வேணும். சொல்லுங்கள்.?”
“இது ஆவணி மாதம். தேய்பிறை. இப்பொழுது வருகின்ற ஏகாதசியை கடைபிடித்தால். மன உளைச்சல் நீங்கும். நிம்மதி ,தெளிவு வரும்.அது வந்தால் எல்லாம் பின் தொடரும்.இழந்த செல்வத்தையும் பெறலாம்”
இதைக் கூறியவுடன் அந்தச் செல்வந்தருக்கு நிம்மதியும் ஆறுதலும் பிறந்தது.
பெரியவர் வழிகாட்ட தசமி மதியம் ஆரம்பித்து , ஏகாதசி விரதத்தை மிகவும் பக்தி யோடு கடைபிடித்தார்.
துவாதசி பாரணைக்கு வைணவ சாதுக்களையம் மகன்களையும் வர வழைத்து பாதபூஜை செய்து ததிஆராதனையும், அன்னதானமும் நடத் தினர்.
பெரிய பந்தலைப் போட்டு, ஏகாதசி இரவு முழுக்க, நாம சங்கீர்த்தனம், சத்சங்கமும் ஏற்பாடு செய்து, தானும் உட்கார்ந்து பூரணமாக அனுபவித்தார்.

இரவு முழுக்க சொர்க்க லோகம் போல பக்தி நிகழ்ச்சிகள் நடந்தன.
அடுத்த நாள் காலை துவாதசி.
ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் சிறப்பாக நடத்தினார்.
ஏகாதசி விரதம் பூரணமாக இருந்த திருப்தி அவருக்கு ஏற்பட்டது.
உடல் உற்சாகம் அடைந்தது.
மனம் முழுக்க குதூகலம் நிறைந்தது.
அவர் மனதில் உற்சாகம் பிறந்தது. மனத்துன்பம் விலகியது.
அன்று முதல் அவர் உடல்நலமும் மன நலனும் சீரடைந்து.
புதிய முறையில் கவனம் செலுத்தினார்.
பழையபடி வியாபாரங்கள் நல்ல முறையில் நடந்து, செல்வம் சேர ஆரம்பித்தது.
அதோடு அவரும் ஏகாதசி விரதத்தை நிறுத்திவிடாமல் தொடர்ந்தார்.
இந்த ஏகாதசி குறித்து பிரமாதமாக நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு “காமிகா ஏகாதசி” (kamika ekadashi) என்று பெயர். இந்த ஏகாதசியில் பகவான் ஸ்ரீஹரியை ஸ்ரீதரனாக எண்ணி பூஜிக்க வேண்டும்.
இந்த விரதத்தின் பலனாக சப்த புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் , சப்த புண்ணிய தலங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.ஆத்ம குணங்களும் வேத ஞானமும், இந்த ஏகாதசி விரதத்தால் கிடைக்கும்.
ஏகாதசி விரதத்தை தூய மனதோடு பகவான் நாமங்களைச் சொல்லி கடைபிடிக்க வேண்டும்.
இதனால் பாபங்கள் நீங்கும். அடியோடு தீரும்.
அரசர்கள் அஸ்வமேத யாகம் செய்து பூலோகத்தில் சக்கரவர்த்தி ஆவார்கள் .
அவர்கள் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்யும் பொழுது மற்ற உலகங்கள் அவர்கள் வசப்படும்.
ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் புறநானூற்றிலே, இப்படிப்பட்ட யாகம் ஒன்றிலே கலந்து கொண்டது குறித்து பாடியிருக்கிறார்.
- பயிலும்சுடரொளி விளக்கம் மற்றும் பாசுரங்கள் (திருவொய்மொழி 3.7)

- வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்(periyalarThiruozhi pasuram 1)-By S.Gokulachari)

- திருமங்கை ஆழ்வாரும் திருவேங்கடமும் -1

விண்ணுலகையும் தரக்கூடிய வாஜபேய யாகத்தின் பலனை மிக எளிதாக தரக்கூடிய ஒரு வழி உண்டா என்றால் உண்டு. அதுதான் காமிகா ஏகாதசி விரதம்.
ஆவணியில் தேய்பிறையில் வரக்கூடிய காமிகா ஏகாதசி விரதத்தின் பலன், வாஜபேய யாக பலனுக்கு நிகரான பலனைத் தருகிறது என்கிறது ஏகாதசி மகாத்மியம்.
முறையாக கடைபிடித்து ,ஏகாதசி இரவு முழுக்க எரியும்படியாக தீபம் ஏற்றி , “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லுங்கள்.அந்த மந்திரம் எல்லாம் தரும். இதோ ஆதாரம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
“பெற்ற தாயினும் ஆயின செய்யும்”
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
Kulam Tharum Selvam Thandhidum
Adiyaar Paduthuyar Aayinavellaam
Nilandharam Seyyum Neel Visumbarulum
Arulodu Perinilam Alikkum
Valam tharum mattrum thandhidum Petra
Thaayinum Aayina Seyyum
Nalam Tharum Sollai Naan
Kandukondaen Narayana Ennum Naamam”




