நவராத்ரி 108 போற்றி – Navaratri 108 Potri with Tamil Lyrics
மூன்று தேவிகளையும் ஒரு சேர அர்ச்சனை செய்து வழிபட வசதியாக இந்த அருமையான மந்திரங்கள் வரிகளோடு….

துர்கே போற்றி ( Durga Potri )
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆதிசக்தியே போற்றி
ஓம் இன்னல் நீக்கு பவளே போற்றி
ஓம் ஆறுமுகன் தாயே போற்றி
ஓம் ஈசனின் துணையே போற்றி
ஓம் உண்மையின் உருவே போற்றி
ஓம் உலகத்தின் அன்னையே போற்றி
ஓம் உமாமஹேஸ்வரியே போற்றி
ஓம் அகிலாண்டநாயகியே போற்றி
ஓம் அசுரரைவதைப்பவளே போற்றி
ஓம் நாராயணன் சோதரியே போற்றி

ஓம் ஐங்கரனின் அம்மையே போற்றி
ஓம் மகிஷாசுரமர்தினியே போற்றி
ஓம் உன்னடி பணிந்தோம் போற்றி
ஓம் மங்களஸ்வரூபியே போற்றி
ஓம் வைஷ்ணவி தேவியே போற்றி
ஓம் ப்ரஹ்மச்சாரிணி போற்றி
ஓம் ஷைலபுத்ரி போற்றி
ஓம் சந்திரகாந்தா போற்றி
ஓம் குஷ்மந்தா தேவியே போற்றி
ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் உலகத்தின் ஆதாரமே போற்றி
ஓம் அருள் மழை பொழிபவளே போற்றி
ஓம் ஊழ்வினையைஅறுப்பாய் போற்றி
ஓம் காளியே தேவியே போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் கிரியாசக்தி நாயகியே போற்றி
ஓம் சண்டிகேஸ் வரிதாயே போற்றி
ஓம் சாமுண்டிதேவி போற்றி
ஓம் சங்கடம்தீர்ப்பவளே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் ஜோதி சொரூபமே போற்றி
ஓம் ஸ்கந்தமாதா போற்றி
ஓம் காத்யாயினி போற்றி
ஓம் மகாகௌரி போற்றி
ஓம் மஹா துர்கே போற்றி போற்றி
மஹாலக்ஷ்மி போற்றி (Mahalakshmi Potri)

ஓம் ஐஸ்வர்யத்தை தருபவளே போற்றி
ஓம் அமிர்தம் ஆனவளே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் வெற்றியை தருபவளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் மங்களவடிவே போற்றி
ஓம் எந்திரவடிவே போற்றி
ஓம் மந்திரவடிவே போற்றி
ஓம் அந்தாமரை பேதை போற்றி
ஓம் அரவிந்த் பாவை போற்றி
ஓம் அலர்மேல் மங்கை போற்றி
ஓம் அணிமாமலர் மங்கை போற்றி
ஓம் ஒண்தாமரையாள் போற்றி
ஓம் ஒளிவடி வேதிருவடி போற்றி
ஓம் சூடிக்கொடுத்த சுடர்கொடியே போற்றி
ஓம் சீடர்வடிவே ஒளிநிறையே போற்றி
ஓம் திருமகளே நல்வடிவே போற்றி
ஓம் திகட்டாத மலர்பதமே போற்றி
ஓம் அருள்வடிவே ஆரணங்கே போற்றி
ஓம் அற்புதமே பொற்பதமே போற்றி போற்றி
ஓம் அன்புருவானவளே போற்றி
ஓம் ஆணவம் அகற்றுபவளே போற்றி
ஓம் துளசியில் உதித்தவளே போற்றி
ஓம் தாமரையில் அமர்பவளே போற்றி
ஓம் ஊழ்வினை நீக்குபவளே போற்றி
ஓம் உலகாளும் அரசியே போற்றி
ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
ஓம் ஏழுலகிற்கும் தலைவியே போற்றி
ஓம் குங்கும உருவே போற்றி
ஓம் குறைவிலாவரமளிப்பவளே போற்றி
ஓம் ரங்கநாயகியே போற்றி
ஓம் விஷ்ணுபத்னியே போற்றி
ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி
ஓம் கனகலக்ஷ்மியே போற்றி
ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி போற்றி
சரஸ்வதி போற்றி (Saraswathi Potri)
ஓம் அன்பின்வடிவேபோற்றி
ஓம் அன்னவாகினியேபோற்றி
ஓம் அகிலலோகநாயகியேபோற்றி
ஓம் இசையின்வடிவானவளேபோற்றி
ஓம் ஞானத்தின் வடிவமே போற்றி
ஓம் கல்வியின் கடவுளே போற்றி
ஓம் கலைவடிவானவளே போற்றி
ஓம் சித்தியை தருபவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி

ஓம் நவராத்திரிநாயகியே போற்றி
ஓம் நான் மறைநாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் வடிவே போற்றி
ஓம் ப்ரஹ்மனின் துணைவியே போற்றி
ஓம் கல்விக்கு அதிபதியே போற்றி
ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி
ஓம் வெண்தாமரை அமர்ந்தவளே போற்றி
ஓம் வீணையை இசைப்பவளே போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் பூரணவடிவே போற்றி
ஓம் மஹாமாயே போற்றி
ஓம் வரப்ரதாயினி போற்றி
ஓம் சாரதாதேவியே போற்றி
ஓம் தாமரைமுகத்தாளே போற்றி
ஓம் இன்னலை போக்குபவளே போற்றி
ஓம் பிறைவடிவானவளே போற்றி
ஓம் சாவித்ரி தேவியே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் காயத்ரிதேவியே போற்றி
ஓம் சாந்தஸ்வரூபியே போற்றி
ஓம் உண்மையின் பொருளே போற்றி
ஓம் நான் முகநாயகியே போற்றி
ஓம் மோஹனரூபிணியே போற்றி
ஓம் கூத்தனூர் நாயகியே போற்றி
ஓம் சரஸ்வதிதேவியே போற்றி போற்றி (108)
- தெளிவு பெறுவோம் (1.6.2025)

- மெரினா மாசி மகம் (Masi magam at Marina and other places)
- மாசி மகம் (Masi Magam)
- கிருபானந்த வாரியார் வாழ்வும் வாக்கும்

- உள்ளம் உருகுதையா !”

- இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?
