Composed By S.Gokulachaari
பங்குனி உத்திரம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் நடைபெறும் திருமண வைபவம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆண்டாளினுடைய புகழ் எப்படிப்பட்டது தெரியுமா? பங்குனி உத்தர நன்னாளில் கீழ்காணும் பாடலை கும்மி கொட்டி குதுகலமாகப் பாடுங்கள். ஆண்டாளின் பேரருளைப் பெறுங்கள். பஜனைக்காகவே உருவாக்கப்பட்ட இந்த பக்தி பாடல்களை நீங்கள் பாடப் பாட ஆண்டாளின் மனம் குளிரும். அவள் பேரருள் சுரக்கும்.
ராகம் ;பிருந்தாவன சாரங்கா ,ஆதி தாளம்
ஆண்டாளின் புகழைப் பாடுவோம் –
ஆடிப்பூர நாயகியைத் தொழுது வாழுவோம்
ஐந்து வயதாகும் முன்னே அச்சுதனே தன் மணாளன் என்று
அருந் தமிழ் பாடிய (ஆண்டாளின்)
அக்கார அடிசில் வெண்ணெயும்
வாய் நேர்ந்து
அரங்கனுக்கு மாலை சூட்டிய (ஆண்டாளின்)
கண்ணனை மனதில் கட்டியவள்
காதல் பிரேமையில் விஞ்சியவள்
திண்ணம் அவன் கரம் பிடிக்க
வாரணம் ஆயிரம் பாடிக்கொடித்த நம்(ஆண்டாளின்)
திருப்பாவை தினமும்
சொல்லி சொல்லி
நம்மை உருப்பட வைத்த (ஆண்டாளின்)
மேகம் குயில் என்று தூதனுப்பி-அந்த
மேக சியாமலனை தேடிய (ஆண்டாளின்)
ஸ்ரீ வில்லிபுத்தூர் நாச்சியார் -அவள்
ஜீவன்களுக்கு ஆச்சியார்
கையில் பச்சைக் கிளி
காலில் சதங்கை ஒலி
கொஞ்சும் பார்வை விழி
கோடிப் பிரகாச ஒளி (ஆண்டாளின்)
