கருட புராணம் ,பாவங்கள் எது புண்ணியங்கள் எது என்பதைப் பற்றி மிக விரிவாக விளக்கம் அளிக்கும் நூல். அந்த நூலில், எது புண்ணியம் என்பதைப் பற்றி ஒரு பெரும் பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் இருந்து சிலவற்றை வாசகர்களுக்காக நாம் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
1.பிறர் துயரங்களை துடைக்க வலுவில் சென்று உதவுதல்
2.பிற பெண்களை மரியாதைக்கு உரியவர்களாக -உயர்வாக மதித்தல்
3.பிறர் பழி பேச அஞ்சுதல்
4.பிறரை துன்பத்திலும் சங்கடத்தில் ஆட்படுத்தாமல் இருத்தல்
5.பொய் பேசாது இருத்தல்
6.புண்ணிய நதிகள், திருத்தலங்களைத் தேடி தேடிச் சென்று வணங்குதல்
7.புனித நதிகளை அசுத்தப்படுத்தாமல் இருத்தல்
8.மூத்தோர் நினைவு நாளையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் முறையாக நிறைவேற்றுதல்
9.குடும்ப பொறுப்புகளை சரியாக செய்தல்
10.அனாதையாக இறப்பவர்களுக்கு ஈமக்கடன்களை நிறைவேற்றுதல் அல்லது நிறைவேற்றுவதற்கு உதவுதல் 11.தர்மங்களை செய்தால் செய்பவர்களை பாராட்டி ஊக்குவித்தல்
12.பொதுக் காரியங்களுக்கு தடை செய்யாமல் இருத்தல்
13.ஆலய கைங்கரியங்களில் ஏதேனும் ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்
14.நாராயணனை உயர்வாக நினைத்து வணங்குதல்
