ஒரு குத்துவிளக்கு ஏற்றுவது நல்லதா? ஜோடி குத்து விளக்குகள் இருந்தால் இரண்டையும் ஏற்றுவது நல்லதா?
இரண்டு குத்து விளக்குகள் இருந்தால் இரண்டையும் ஏற்றுவது அற்புதமான பலன்களைத் தரும். அது இல்லாத பட்சத்தில் ஒரு குத்து விளக்கு ஏற்றலாம். பொதுவாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். வலது புறம் ஒன்று, இடது புறம் ஒன்று என்று இரண்டு குத்து விளக்குகளை ஏற்றுவது அந்த இடத்தினுடைய தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் .தெய்வ சானித்யமும் அதிகரிக்கும். அது உங்களுக்கு இயல்பாகவே தெரியும். ஆகையினால் நீங்கள் வாய்ப்பிருக்கும் பொழுது இரண்டு குத்து விளக்குகளை ஏற்றுவதற்கு தயங்க வேண்டாம். அது மிகவும் சிறந்தது. இல்லாத போது ஒரு குத்துவிளக்கை ஏற்றலாம். குறைந்தபட்சம் இரண்டு முகங்கள் ஏற்றலாம். இதில் நீங்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையே இல்லை.
விளக்கு ஏற்றும் போது சொல்லவேண்டிய மந்திரம் அல்லது பாடல்
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய மந்திரம்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
