12.3.23 -17.3.23 ஞாயிறு முதல் வெள்ளி வரை 6 நாள்கள்
பங்குனி மாதத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சன்னதியில் எட்டு நாட்கள் நடைபெறும் பங்குனி மாத விழா இது.பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. பல்லவம் என்றால் இளம் தளிர் என்று பொருள். மரங்கள் எல்லாம் துளிர்விடும் மாதம் பங்குனி மாதம். இந்த மாதத்தில் நடக்கும் சிறப்பான உற்சவம் இந்த உற்சவம் வரத ராஜ பெருமாளின் கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெரு மாளும் தீர்த்தபேரான பிரணதார்தி ஹரவரதனும் எழுந்தருள்வார்கள். பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள் .மூன்றாம் நாள் பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெரு மாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப் பாடும் உண்டு .வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சிபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் பற்பல நன்மைகளைப் பெறுவார் கள் என்று பலச் சுருதியில் கூறப்பட்டுள்ளது. 18.3.2023 அன்று உற் சவத்தின் சாற்றுமுறை அதாவது நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
