1.சித்திரை மாதம் என்பது 12 மாதங்களில் முதல் மாதம் என்பது நமக்குத் தெரியும். ராசி மண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். அதில் மேஷம் என்பது முதல் ராசி. அந்த முதல் ராசியில் அடங்கியிருக்கும் நட்சத்திரங்கள் அசுவனி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம். இப்படி 27 நட்சத்திரங்களை 12 ராசிகளுக்குப் பிரித்து ஒரு ராசி மண்டலமாகப் பிரித்திருக்கிறார்கள். இதில் முதல் ராசியான மேஷ ராசியில், முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் நேரத்தை சித்திரை மாதத்தின் துவக்கமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
- சித்திரை மாதம் என்கின்ற பெயர் ஏன் வந்தது என்றால் சித்திரை என்பது 27 நட்சத்திரங்களில் 14-வது நட்சத்திரம். அதற்கு முன்னால் 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதற்கு பின்னால் 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன.இது நடு நட்ஷத்திரம். உஷ்ண கிரகமும்,பூமிக்கான கிரகமான செவ்வாய்க்குரிய நட்ஷத்திரம்.அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை. செவ்வாயின் ராசி தான் மேஷ ராசி. செவ்வாய்க்குரிய மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்க, செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசிக்க, ஏற்படுவது சித்ரா பௌர்ணமி. எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்த நட்ஷத்திரத்தின் பெயரே ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பெயராக வைத்தார்கள் .உதாரணமாக சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் காலம் சித்திரை மாதம். சூரியன் ரிஷப ராசியில் இருக்க விசாக நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் காலம் வைகாசி மாதம்.
3.பூமி தோன்றிய வாதத்தின் குறியீடு – பூமி உருவானது எப்படி ?
சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் பெருவெடிப்பின் விளைவாக பருப்பொருள், ஆற்றல், காலம், வெளி ஆகியவை தோன்றின.அகண்ட வெளியில் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பூமி மற்றும் கோள்கள் அடங்கிய சூரிய மண்டலம் இல்லை.. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் சிதறி இருந்த தூசுகள் மற்றும் துகள்கள் மற்றும் கொதித்துக் கொண்டிருந்த கற்களும் இணைந்து ஒரு நெருப்பு கோளமாக மாறியது.பின்னர் பல லட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு கனன்று கொண்டிருந்த அந்த நெருப்புக் கோளம் மெல்ல மெல்லக் குளிர்ந்து ஒரு திடமான உருண்டை வடிவமாகி , மிதக்கும் பாறையாக சூரியனைச் சுற்றி வலம் வர ஆரம்பித்தது. பூமியிலிருந்து வெளியேறிய வெப்பம் குளிர்ச்சி அடைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மழை பெய்து பூமியின் பள்ளங்களில் நிரம்பி கடலாக உருவெடுத்தது.நெருப்பு சூரியன் பூமி என்ற மூன்று விஷயங்களை நாம் இதில் பார்க்கிறோம். மேஷ ராசி எனும் நெருப்பு ராசியில்,சூரியன் உச்சம்,பெறும் மாதத்தில் பூமி கோளுக்கு உரிய மேஷ ராசியில் சித்திரை பிறப்பது பொருத்தமே.
4.பருவங்கள் ஆறு. இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம்(மழை) (ஆவணி -புரட்டாசி) , கூதிர் (குளிர்)காலம் (ஐய்ப்பசி-கார்த்திகை) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இந்த ஆறு பருவங்கள் பற்றிய குறிப்புக்களும் விளக்கங்களும் உள்ளன..சித்திரை வைகாசி இவை இரண்டும் வசந்த ருது என்று சொல்லப்படும் ஆறு வகை சிறு காலங்களில் வசந்த காலத்தைக் குறிக்கும். இந்த வசந்த காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாக அமைந்தது .உலகிலேயே ஆறு பருவங்களுக்கு விளக்கமாக ருது சம்ஹாரம் என்று நூல் எழுதியவன் உலகப் புகழ் பெற்ற காளிதாசன். காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற் கையைப் பற்றிய நுட்பமான பல தகவல்கள் கிடைக்கும்.
5.காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.
6.இன்னொரு கணக்கும் உண்டு பங்குனி மாதத்தின் அமாவாசை முடிந்த அடுத்த நாள் சைத்ரமாதம் என்று சொல்லப்படும் சித்திரை மாதம் ஆரம்பித்து விடுவதால், வசந்த காலத்தை அங்கிருந்தும் கணக்கிட்டு, வசந்த நவராத்திரி போன்ற உற்சவங்களைக் கொண்டாடுவார்கள். உத்திராயனமாகிய பகல் பொழுது காலத்தின் உச்சி காலம் என்பதால், சித்திரை மாதத்திலும் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்ல. இந்த ராசியில் தான் சூரியன் உச்சகதியை அடைகிறது. கிரகங்களின் தலைவராக விளங்குகின்ற சூரியன் தான் மற்ற எல்லா கிரகங்களுக்கும் ஒளி தருகின்ற கிரகம் .அந்த கிரகம் மிக உச்சவலிமையை பெறுவது சித்திரை மாதத்தில் என்பது சித்திரை மாதத்தின் சிறப்பு.
