நடக்காததை நடத்திக்காட்டும் இந்த நரசிம்ம மந்திரத்தை தினம் சொல்லுங்கள்.
நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை. நமக்கு மிகுந்த துன்பம் வருகின்ற பொழுது இந்த ஒரு பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்.
காலையில் எழுந்து நீராடி பூஜை அறைக்குச் சென்று, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், ஒரு நெய் தீபம் கிழக்கு நோக்கி ஏற்றி வையுங்கள்.. சிறிய நரசிம்மர் படத்தை ஒரு பலகையின் மீது வைத்து, நறுமணமிக்க பூக்களைச் சூட்டுங்கள். வாசனையுள்ள பத்தி ,தீபம் ஏற்றுங்கள். ஒரு குவளை பால் அல்லது வெல்லப் பானகம் வையுங்கள்.
கீழே கண்ட ஸ்லோகத்தையும் அதனுடைய தமிழ் பாடலையும் உங்களால் எத்தனை முறை முடியுமோ அத் தனை முறை நம்பிக்கையோடு ஓதுங்கள். மனதுக்குள் சொல்லிக் கொள்ளாமல் கொஞ்சம் சத்தமாகவே இந்த மந்திரங்களைச் சொல்லலாம்.
குறைந்தபட்சம்108 முறை சொல்லுங்கள். நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக ,)அது நியாயமாக நிறைவேற வேண்டியதாக இருக்க வேண்டும்) சொன்னால், நிச்சயமாக உங்களுக்கு நரசிம்மர் துணை உண்டு.
யஸ்ய அபவத் பக்த ஜன ஹார்த்தி ஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்னாம்
ஸ்தம்பே அவதார தம் அனன்யா லப்யம்
லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே
பக்தியிலா நெஞ்சில் தோற்றாதிருப்பவனே
முத்து பதிப்பது போல் முழுத்தூணில் உதித்தவனே
அப்பனே நரசிம்மா அடியேனைக் காத்திடுவாய்
லட்சுமி நரசிம்மா சரணம் அடைந்தேனே
