1.நாம் இறைவனுக்கு பாலை அபிஷேகத்திற்கோ நிவேதனத்திற்கோ படைக்கிறோம். அல்லது கோயிலுக்கு கொண்டு போய் கொடுக்கிறோம். அந்தக் காலத்தில் பசு மாடு வைத்திருப்பார்கள். கறந்த பாலின் ஒரு பகுதி யை ஏழைக் குழந்தைகளுக்குத் தருவார்கள் .ஒரு பகுதியை கோயில் களுக்கோ இல்லை பூஜைக்கோ வைத்துக் கொள்வார்கள் .ஆனால் கன்று போட்டு 10 நாள்களுக்கு உட்பட்ட பசு மாட்டினுடைய பாலை நாம் பூஜைக் கோ தெய்வ அபிஷேகத்திற்கோ உபயோகப்படுத்தக் கூடாது.
2.நாம் பூஜையில் தேங்காயை உடைக்கிறோம். அந்தத் தேங்காயை நாம் பிரசாதமாகச் சாப்பிடலாம் அல்லது ஏதேனும் உணவில் சேர்த்துக் கொள் ளலாம். ஆனால் ஏற்கனவே பூஜை செய்த தேங்காய் அல்லது கோயிலில் கொடுத்த தேங்காயைத் துருவி, அதில் இருந்து பிரசாதம் செய்து மறு படியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
3.வீட்டிலே ஜபம் செய்வது என்பது மிகுந்த பயன் அளிக்கக்கூடிய செயல். நம்முடைய மனதில் எழுச்சிகளை சாந்தமாக்கும். அதற்காக 1008, 108 என்று மந்திரங்களை எண்ணுவதற்காக, கையிலே ஸ்படிகம், ருத்ராட்சம், துளசி மாலைகளை வைத்திருப்பார்கள். ஜபம் துவங்குவதற்கு முன் முதலி லேயே அந்த மாலைகளை நாம் வணங்கி விட்டுத்தான் ஜபம் துவங்க வேண்டும்.
4.பல சந்ததிகளிலும் ஒரே மாதிரியான வழிபாட்டைச் செய்வார்கள். குறிப் பாக இரண்டு காதையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது என்பது சிலர் ஒவ்வொரு சந்ததியிலும் செய்வார்கள்.விநாயகர் சன்னதி தவிர, மற்ற சன்னதிகளில் அல்லது மற்ற தெய்வங்களின் எதிரில் தோப்புக்கரணம் போட வேண்டியது இல்லை.
5.கோவிலில் சிலர் பெரியவர்களைக் கண்டால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வார்கள். அதை விபரம் தெரிந்த பெரியவர்கள் அனுமதிப் பதில்லை. அதற்குக் காரணம் தெய்வத்தின் சந்ததியில் தெய்வத்தைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது..
6.கோயிலுக்குச் செல்லும் பொழுது சிலர் பிரகாரத்தைக் கடப்பதற்காக கையால் செருப்பு தூக்கி கொண்டு செல்வார்கள். ஒரு கையிலே பூஜை பொருள்கள் இருக்கும். ஒரு கையிலே செருப்பு இருக்கும். இவற்றை யெல்லாம் தவிர்க்கப் பாருங்கள்.
7.அதைப்போல சிலர் சுவாமி சன்னதியில் இருந்து பிரசாதங்களை பெறாமல் அவசரமாக , என்ன செய்வார்கள் என்றால், ஏற்கனவே உப யோகப்படுத்தி விட்டு மீதியை ஏதாவது கோயில் சுவரில் அல்லது கிண் ணத்தில் சேர்த்து இருப்பார்கள். அல்லவா,அதைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள்.அப்படி இட்டுக் கொள்ள வேண்டாம். நேரடியாக அச்சகர் கொடுக்கக்கூடிய விபூதி பிரசாதங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். அளவு அதிகமானால் மீதியை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பயன்படுத்த முடியாத போது, ஏதாவது கால் படாத இடத்திலோ நீர் நிலையிலோ சேர்த்து விடுங்கள்.
8.சுவாமிக்கு போட்ட புஷ்பங்களை அடுத்தநாள் நிர்மாலியமாக களைந்து சேகரிப்பார்கள் அதை சிலர் மற்ற குப்பைகளோடு குப்பையாகச் சேர்த்து வாசலில் போட்டு விடுவதோ அல்லது குப்பை வண்டியில சேர்த்து விடு வதோ செய்கிறார்கள் அது நிர்வாலியம் .சூடிக் களைந்த மாலை. பவித் திரமானது எக்காரணத்தை முன்னிட்டும் குப்பையோடு குப்பையாக அந்தப் பூக்களை சேர்க்காதீர்கள் அதை பத்திரமாக வைத்திருந்து மரத்திற்கு, செடி களுக்கு நீங்கள், அடிமரத்தில் உரமாகப் போடலாம் அல்லது ஓரளவு சேர்ந்த பின்னால் அருகாமையில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் அத னைச் சேர்த்து விடலாம். அதைப் போலவே உபயோகப்படுத்தாத சுவாமி படங்கள் இருந்தாலும், அதனை குப்பையோடு குப்பையாக சேர்ப்பது கூடாது . நல்ல படங்களாக இருந்தால் யாராவது வேண்டியவர்களுக்கு கொடுத்து விடலாம். நம்முடைய நண்பர் ஒருவர் நல்ல படங்களை எல் லாம் முறையாக வைத்திருந்து, இயன்றால் அதனை லேமினேட் செய்து ,யாருக்குத் தேவை என்பதை அறிந்து அவர்களுக்குக் கொடுப்பார்.
9.சுவாமி புத்தகங்களும் , பாராயணம் செய்ய வேண்டிய நூல்களும் வீணாக்காதீர்கள். நல்ல புத்தகங்களை சிலர் குப்பையோடு குப்பையாகச் சேர்த்து விடுகின்றனர் .இன்னும் சிலர் எடைக்குப் போட்டு விடு கின்றனர்.அதையும் பாதுகாப்பாக வைத்திருந்து தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கலாம். அல்லது அருகாமையில் உள்ள நூலகத்தில் சேர்க்கலாம் .இப்பொழுது புத்தகம் படிப்பவர்கள் இல்லையே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் வைத்திருக்கும் புத்தகம் பழைய புத்தகமாக இருந்தால் அதை தேடுபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் நீங்கள் முகநூலிலோ வாட்ஸ் அப்பிலோ போட்டால் வேண்டும் என்பவர்கள் வாங்கிச் செல் வார்கள். அந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பாராயணம் செய்யும்பொழுது, புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு இடத்தில் இதுவும் வித்யாதானம் தான்.
