விளக்கு ஏற்றுவது என்பது சாதாரணமான ஒரு விஷயம் கிடையாது. மகாலட்சுமி நம் வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அடையாளமே விளக்கு தான்.
விளக்கு ஏற்றி வைத்துத்தான் எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள்.விளக்கு ஏற்றாமல் எந்த மங்கலக் காரியங்களும் தொடங்குவது கிடையாது .
அந்த விளக்கு ஏற்றும் போது சில விதிகள் இருக்கின்றன. இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்.இதனால் எல்லாவிதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மனசு நிம்மதியா இருக்கும். இந்த விதிகள் எல்லாம் பெரியவர்கள் அனுபவத்தில் சொன்னது .
- கண்ட நேரத்தில் கண்ட இடத்துல் எல்லாம் விளக்கு ஏற்ற முடியாது. அதே மாதிரி விளக்கு ஏற்றும் போது சில தூய்மைகள் இருக்கு . சூரிய உதய காலத்துக்கு முன் , சாயங்காலம், சூரியன் அஸ்தமிக்கும் சமயம் விளக்கு வைக்க வேண்டும்.
- எக்காரணத்தை முன்னிட்டும் வெறும் தரையில் விளக்கு வைக்க கூடாது . ஒரு பலகை அல்லது ஒரு வாழை இலை என்று ஏதாவது ஒரு பீடம் வைத்து அதுக்கு மேல்தான் விளக்கு வைக்க வேண்டும்.
- குறைந்தது இரண்டு முகம் ஏற்ற வேண்டும். குடும்பத்துல ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் அன்பு இருக்கும். சுகங்கள் கிடைக்கும். செல்வ விருத்தி கிடைக்கும்.மூன்று முகம் விளக்கு ஏற்றினால் புத்திர சுகம் சந்தான விருத்தி கிடைக்கும். நான்கு முகம் தப்பு கிடையாது . பசு பால் பூமியோகம் வீடு கட்டுற யோகம் இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கும்.
4.பஞ்ச முகம் ஏற்றுவது ரொம்ப உயர்வானது. வீட்டில் சர்வ ஐஸ்வர்யங்களும் பெருகும்.
5.மிக முக்கியமாக வாயால் விளக்கை ஊதி அணைக்கக் கூடாது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் விறகு அடுப்பு தான் எல்லார் வீட்டிலும் இருக்கும். சில நேரங்களில் அடுப்பு எரியவில்லை, புகை மூட்டமாக இருக்கிறது என்று சொன்னால் வாயில் ஊதி நெருப்பைப் பெரிதாக்க மாட்டார்கள். குழல் போல ஒன்று வைத்திருப்பார்கள் .காரணம் நெருப்பில் எச்சில் படக்கூடாது என்பது எளிய மக்களுக்குக் கூடத் தெரிந்திருந்தது. ஆனால் இன்று மேல்நாட்டு கலாச்சாரம் வந்துவிட்டது. பிறந்த நாள் என்று மெழுகுவர்த்தியை ஏற்றி அதை மறுபடியும் வாயால் ஊதி அணைக்கிறார்கள். அந்த எச்சில் நெருப்பின் மீது படுகிறது .நெருப்பை அசுத்தப்படுத்துவது என்பது மிகப்பெரிய பாவம் என்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
6.அதைப்போலவே ஒரு விளக்கு ஏற்றினால், அது காமாட்சி விளக்கோ, மகாலட்சுமி விளக்கோ, குத்துவிளக்கோ அந்த விளக்கில் இருந்து ஊதுபத்தி ஏற்றுவதோ, சூடம் ஏற்றுவதோ பெரும்பாலும் விவரம் அறிந்தவர்கள் செய்ய மாட்டார்கள் .அதற்கென்று தனியாக ஒரு விளக்கு வைத்திருப்பார்கள், அல்லது வத்திப்பெட்டியை பயன்படுத்துவார்கள். காரணம் அதிலே மகாலட்சுமியை ஆவாகனம் செய்து விடுகின்றோம். அது வெறும் நெருப்பு அல்ல. ஜுவாலை அல்ல. அந்த ஜுவாலை தான் மகாலட்சுமி என்று சொல்லுகின்ற பொழுது அதை எக்காரணத்தை முன்னிட்டும் மற்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
7.அதேபோல நேர்த்திக்கடனாக கோயில்களில் விளக்கு ஏற்றும் பொழுது அங்கே ஏற்கனவே ஏற்றி வைத்த விளக்கிலிருந்து தீபத்தையோ எண்ணையையோ திரியையோ எடுக்கக்கூடாது. புது திரி தான் போட வேண்டும். பழைய திரியை தூக்கிப் போட்டுவிட்டு வேறு புது திரியையும் புது எண்ணையும் ஊற்றி நாம் விளக்கு ஏற்றுவது தான் நல்லது.
- எவர்சில்வர் விளக்கு கூடாது.
9.எந்த திசையில் விளக்கு ஏற்றுவது?ஒளிக்கு திசை கிடையாது. ஒரு தீபம் எல்லா திசையிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்றாலும் கூட அந்த தீபத்தினுடைய முகம் அல்லது அந்த விளக்கினுடைய முகம் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. தெற்கு தவிர பாக்கி எல்லா திசைகளிலும் நீங்கள் வைக்கலாம். பெரும்பாலும் கிழக்கு திசை நோக்கி வைப்பது விசேஷம்.
- கிழக்கு வைத்தால் துன்பங்கள் விலகும்; வசீகரம் கிடைக்கும்.
- மேற்கில் வைத்தால் கிரக தோஷம், பங்காளி பகை விலகும்.
- வடக்கில் வைத்தால் கல்வி விருத்தியாகும். சுபகாரியத் தடைகள் விலகும். திரண்ட செல்வம் கிடைக்கும்.
4.ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டும் மோட்ச தீபம் எம தீபம் என்று ஏற்றும் பொழுது தெற்கு திசையில் ஏற்றுவார்கள்.
- விளக்கை அவப்பொழுது தூண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் . அணைய விடக்கூடாது. கோயில் விளக்குக்கு நல்ல சுத்தமான எண்ணெயோ நெய்யையோ கொண்டு போய் கொடுப்பதும், பஞ்சுத் திரியைக் கொண்டு போய் கொடுப்பதும் நல்லது.
ஏதோ ஒரு காலத்தில் கோயிலில் அணையும் நிலையில் இருந்த விளக்கின் மீது ஒரு எலி விழுந்து அந்த தீபத்தைத் தூண்டி விட்டதால், அந்தப் புண்ணியத்தின் காரணமாக, சக்கரவர்த்தியாக பிறந்த கதை ஒன்றை பார்க்கிறோம்.
- வீட்டில் எலுமிச்சம் பழ மூடியில் விளக்கு ஏற்றாதீர்கள். குளிக்காமல் விளக்கு ஏற்றாதீர்கள். அசுத்தமான நிலையில் விளக்கு ஏற்றாதீர்கள். மேலாடை இன்றி விளக்கு ஏற்றாதீர்கள். விளக்கு ஏற்றும் பொழுது இந்த சுலோகத்தை சொல்வது நல்லது.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்துதே.
