கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத் தில் அவர் விவரித்து இருக்கிறார்.

அவர் கம்ப ராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு, கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான் அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதை களுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதை வரிகளும் சொற்களும் தான் என்பதை.
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்;
கன்னித்தமிழாலே உனைப்பாட வேண்டும்”
என்று சுவைபடப் பாடுகிறார்.
கம்பன் கவிதைகள் சாகாத கவிதைகள்,அது காலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கவிஞருக்கு.
காலமழை ஆழியிலும் காற்றுவெளி ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு—அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு
கம்பன் விழாக்களில் கலந்து கொள்வது என்பது கவியரசருக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகின்ற அனுபவம். காரைக்குடியில் ஆரம்பித்து புதுச்சேரி கம்பன் கழகம் வரை, பல கம்பன் கழகங்களில் அவருடைய கவியரங் கங்கள் தனித்துவமாக விளங்கும்.
கம்பன் தனக்குத் தமிழ் பிச்சை இட்டவன் என்பதை நன்றி மறக்காமல் பல கவிதைகளில் அவர் சொல்லியிருக்கிறார்.
எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு’
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன்; அப்படித்தான்…
திரைப்படப் பாடல்களில் உவமைகளை அவர் சொல்லுகின்ற பொழுது எப்படியும் கம்பன் சொற்கள் வந்து கலக்காமல் இருக்காது .
“வசந்த மளிகை” என்றொரு படம்.அதில் ஒரு பாடல் காட்சி.சரணங்கள் எழுதும் போது கம்பன் பாடல் வந்து நிற்கிறது.
வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்
இந்த கம்பனின் வார்த்தையை ஒரு காதலன் தன் காதலிடம் உறுதி மொழி தருவதைப் போல பாடுகிறார் கண்ணதாசன் .
உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
லட்சுமி கல்யாணம் என்று திரைப்படம். அதிலே தனக்கு என்ன மாதிரி யான கணவன் கிடைக்க வேண்டும் என்பதைக் குறித்து திருமணத் திற்காக காத்திருக்கும் ஒரு பெண் பாடுவது போல ஒரு பாடல் காட்சி.
கண்ணனைப் போல ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்று கூட பல் லவியை அமைத்திருக்கலாம். ஆனால் “ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்” என்று வாழ்ந்த இராமனைத்தான் பாடுகிறார்.
இப்படித் தானே ஒவ்வொரு பெண்ணின் விருப்பமும் இருக்கும்.
ராமன் என்றால் ஒரு ராமனா ?
இது வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லாத பெருமை. ஒவ்வொரு பெரு மைக்கும் குணத்துக்கும் ஒவ்வொரு ராமனாகக் காட்சிபடுத்துகிறாள்.
ராமன் எத்தனை ராமனடி -அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்
முடிவில் ஆதவன் அனந்த ராமன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நான் அபயம்
இராமயணம் முழுதுமே இந்தப்பாடலில் சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்லி விடுகிறார்.
“ராம நாமம் தான் தாரக நாமம்” என்பதையும், அந்த ராமனை நெஞ்சில் கொண்டவர்களுக்கு அச்சம் என்பதே வருவதில்லை(ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்நம்பிய பேருக்கு ஏது பயம்) என்பதையும், ராமாயணம் என்பது அபயப்பிரதான சாஸ்திரம் அதாவது சரணாகதி சாஸ்திரம்(ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயமராமனின் கைகளின் நான் அபயம்) என்பதையும், சிறிய சொற்களிலே, பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கிய அருமை கவிஞருக்கே உரியது.
ராமருடைய பெயர்களையும் குணங்களையும் இணைத்து மொத்தப் பாடலில் ராமருடைய பெருமையை கொட்டித் தீர்த்து விடுகிறார்.
இது “கோ குணவான்?” என்ற கேள்விக்கு, பதினாறு குணங்களையும் நிரம்பி யவன் ராமன் என்று சொல்லப்பட்ட தத்துவ விஷயத்தை மிக எளிமையான ஒரு திரைப்படப் பாடலிலே கொடுத்த பாங்கு, கண்ணதாசனின் திரைப்பட பாடலின் ஒரு மணிமகுடம்.
