மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத் தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி முருகப்பெருமான் ஆறு முகங்களை உடையவன். ஆறு தலை களால் “ஆறுதலை” வழங்குபவன்.
செல்வம், கல்வி ,ஆயுள், ஆரோக்கியம், புகழ், ஞானம் என்ற ஆறு பொருள் களையும் அள்ளி அள்ளித் தருபவன்.. கூர்மையான வேல் கொண்டு, அகப்பகையையும் புறப்பகையையும் விரட்டுபவன் .எண் கணிதத்தில் ஆறு என்பது சுக்கிரனுக்குரிய எண். சுக்கிரன் நல்ல இல் வாழ்க்கையையும், சகல விதமான செல்வங்களையும், மன நிம்மதியையும், வண்டி வாகன யோகங்களையும் அள்ளித் தருபவன். அது மட்டுமல்ல; இன்று சுக்கிரனுக் குரிய பரணி நட்சத்திரத்தில் சஷ்டி திதி இடம் பெறுவது சாலச் சிறந்தது..
சனி பகவான் இந்தச் செல்வங்களை எல்லாம் நிலைத்திருக்க செய்பவர். அவருடைய கிழமையில் சஷ்டி திதி பெறுவது விசேஷமானது. சஷ்டி விரதம் முதல் நாள் பஞ்சமியில் தொடங்கி, மதியம் உணவுக்கு பின், இரவு பால் பழங்களை மட்டும் உண்டு, மறுநாள் முழுக்க உபவாசம் இருந்து ,மாலையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வைத்து, புஷ்ப மாலை களைச் சாற்றி, படையல் போட்டு, பின் உணவு உண்டு, விரதத்தை முடிப்பது சாலச் சிறந்தது இன்றைய தினம் இந்த திருப்புகழை பாராயணம் செய்யவும்.
அபகார நிந்தைபட்டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட்பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
இது பழனி மலை திருப்புகழ் இதன் பொருள்:
ஆவினன்குடி என்று சொல்லப்படுகின்ற பழனியம்பதிக்கு உரிய பெரு மாளே! குருநாதா! உன்னுடைய ஆறெழுத்து மந்திரத்தை ஜெபம் செய் வதற்காக எனக்கு ஜெபமாலை அளித்தவனே! இமவான் மகளான பார்வதி தேவியின் உத்தமமான பிள்ளையே! யானை முகப்பெருமானாகிய விநா யகப் பெருமானின் தம்பியே! பிறர்களுக்கு தீமை செய்து ,பழிச் சொல்லுக்கு ஆளாகி அலையாமல், எந்த நல்ல விஷயங்களையும் நினைக்காத, பேசாத, வஞ்சகர்களிடம் சேராமல், நீ அருளிய மந்திரப் பொருளையே துணை யாகக் கொண்டு, சதா சர்வ காலமும் உன்னையே நான் சிந்தித்து, உன் னுடைய திருவருளைப் பெற மாட்டேனா ? –என்று உருகுகிறார் அருண கிரிநாதர்.
அவன் திருவருளைப் பெறுவதற்காகத்தான் இன்றைய விரதம்- சஷ்டி விரதம்.
