ஒவ்வொரு மந்திரத்தின் முன்னமும் ஓம் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதில் 108 விநாயகர் போற்றி மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மந்திரங்களை தினசரி வழிபாட்டில் நாம் பூக்களால் அர்ச்சனை செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் .குறிப்பாக சதுர்த்தி நாள் அன்று அவசியம் விநாயகருக்கு இந்த அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் அடையலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காரியத் தடைகள் விலகும் .விநாயகரின் பேரருள் கிடைக்கும்.
1.அகிலத்தின் முதல்வா போற்றி
2.அனைத்துயிர் தலைவா போற்றி
3.அப்பனே அம்மையே போற்றி
4.அம்மை அப்பனின் பிள்ளையே போற்றி
5.அகம் தனில் இருப்பாய் போற்றி
6.அன்புக்கு அருள்வாய் போற்றி
7.அச்சத்தை நீக்குவாய் போற்றி
8.அன்பே அருளே போற்றி
9.அறுமுகன் அண்ணனே போற்றி
10.அருங்குணம் கொண்டவா போற்றி
11.அரசர்க்கு அரசனே போற்றி
12.அரசடி அமர்ந்தவா போற்றி
13.அகந்தை அழிப்பவனே போற்றி
14.அருகம்புல் விரும்புவாய் போற்றி
15..ஆருயிர் காப்பாய் போற்றி
16.ஆதார வித்தே போற்றி
17.ஆறு கரை அண்ணனே போற்றி
18.ஆல மரம் அமர்ந்தாய் போற்றி
19.ஆட்கொண்ட தெய்வமே போற்றி
20.ஆனைமுகக் கடவுளே போற்றி
21.ஆம் பயன் நீயே போற்றி
22.இன்பத்தின் இன்பமே போற்றி
23.இம்மைப் பயன் நல்குவாய் போற்றி
24.இனியநற் கடவுளே போற்றி
25.இனி, துணை, நீயே போற்றி
26.இச்சகம் காப்பாய் போற்றி
27.இசைபாட அருள்வாய் போற்றி
- இடர்களை தீர்ப்பாய் போற்றி
29.ஈசனின் குமரா போற்றி
30.ஈடிலா வேந்தே போற்றி
31.ஈர நெஞ்சினாய் போற்றி
- உண்மைப் பொருளே போற்றி
- உலகத்தின் தலைவா போற்றி
34.உள்ளத்தில் உறைபவனே போற்றி
35.உயர் பொருளாய் ஆனவனே போற்றி
36.ஊழ்வினையை தீர்ப்பா# போற்றி
37.ஊரெங்கும் இருப்பாய் போற்றி
38.எளிமைக்கோர் இறைவா போற்றி
39.என்னுயிர் காப்பாய் போற்றி
40.எங்கும் நிறைந்தவனே போற்றி
41.என்னுயிர்த் தலைவனே போற்றி
42.ஏற்றம் தருபவனே போற்றி
43.ஏன் என்று கேட்பாய் போற்றி
44.ஏர் மலர் சூடுவாய் போற்றி
45.ஏக தந்த கணபதி போற்றி
46.ஐங்கரனே! ஐயா! போற்றி
47.ஐந்தெழுத்தான் திருமகனே போற்றி
48.ஒப்பிலா மணியே போற்றி
49.உலகத்தின் ஒளியே போற்றி
50.ஓம் கார திருவே போற்றி
60.ஒண் தமிழாய் ஆனாய் போற்றி
61.ஆயுத எழுத்தே போற்றி
62.ஆயுளைக்காப்பாய் போற்றி
63.கருணையின் வடிவே போற்றி
64.கற்கண்டாய் இனிப்பாய் போற்றி
65.கணங்களின் நாதனே போற்றி
66.கணேசா விநாயகா போற்றி
67.கண்கண்ட தெய்வமே போற்றி
68.கற்பக விநாயகா போற்றி
69.கலி வலியைத் தீர்ப்பாய் போற்றி
70.கந்தனின் தமையனே போற்றி
71.காருண்ய மூர்த்தியே போற்றி
72.கார்மேக வள்ளலே போற்றி
73.குறையெல்லாம் தீர்ப்பாய் போற்றி
74.குணக்குன்று நீயே போற்றி
75.குற்றங்கள் பொறுப்பாய் போற்றி
76.கோவிந்தன் மருமகனே போற்றி
77.சங்கட ஹரனே போற்றி
78.சர்வ நலம் தருவாய் போற்றி
79.சதுர்த்தியின் நாயகா போற்றி
80.சத்குரு நாயகா போற்றி
81.சதுர்வேத பொருளே போற்றி
82.சமய சஞ்சீவியே போற்றி
83.சங்கரி மைந்தா போற்றி
84.சரணமாய் வந்தோம் போற்றி
85.சித்தி புத்தி தலைவா போற்றி
85.சித்தம் நிறைந்தவா போற்றி
86.சுந்தர உருவமே போற்றி
87.சுடர்விடும் ஒளியே போற்றி
88.தும்பிக்கை தெய்வமே போற்றி
89.நம்பிக்கை கொண்டோம் போற்றி
90.நானிலம் காப்பாய் போற்றி
91.நலமுடன் வைப்பாய் போற்றி
92.நற்பொருள் தருவாய் போற்றி
93.நன்மையின் நாயகா போற்றி
94.நலம் தரும் வள்ளலே போற்றி
95.ஞானத்தின் வடிவே போற்றி
96.தேவாதி தேவனே போற்றி
97.பக்தரின் துணைவா போற்றி
98.பரிபூரண தெய்வமே போற்றி
99.பிரணவப் பொருளே போற்றி
100.பிள்ளையார் கடவுளே போற்றி
101.பிறவியை அறுப்பாய் போற்றி
102.பேசும் தெய்வமே போற்றி
103.புண்ணிய மூர்த்தியே போற்றி
104.புகழ் தரும் கருணையே போற்றி
105.மஞ்சளில் வாழ்வாய் போற்றி
106.மங்கலம் தருவாய் போற்றி
107.விக்கினம் தீர்ப்பாய் போற்றி
108.விநாயகக் கடவுளே போற்றி போற்றி
