தானத்தில் சிறந்தது அன்னதானம்.அதுதான் ஒருவரை போதும் போதும் என்று சொல்ல வைக்கும்.அப்படிப்பட்ட அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்தில ஏகாதசி. ஆனால் இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்ய வேண்டும்.இதற்கு சுவையான கதை உண்டு. மனித உடலோடு தன்னுடைய தவ வலிமையால் மோட்சலோகத்துக்குச் சென்றாள் ஒரு பெண். அங்கே அவளுக்குப் பல வசதிகள் இருந்தாலும் , சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை.மிக ஆடம்பரமான மாளிகை கிடைத்தும் ,வயிற்றுக்கு சோறு இல்லாமல் அவள் மிகவும் துன்பப்பட்டாள் . இதற்கு என்ன காரணம் என்று நினைத்துப் பார்த்தாள் .
அவள் பூமியில் மிகவும் செல்வத்தோடு வாழ்ந்த பொழுது பற்பல தான தர்மங்களைச் செய்தாள் . ஆனால் வயிறார யாருக்கும் உணவு கொடுத் ததாக அவள் நினைவுக்கு வரவில்லை. அன்னதானம் செய்யாத குறை தான், இப்பொழுது பசியாக வந்து வாட்டுகிறது என்பதை உணர்ந்தாள் . அது மட்டுமில்லை. தன்னிடம் சாப்பாடு கேட்டு வந்த ஒரு துறவிக்கு அவள் அன்னம் தராதது மட்டுமல்ல ஆத்திரத்தில் அன்னத்திற்கு பதிலாக மண்ணையிட்ட பாவமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது.
அவள் துடிப்பது உணர்ந்த ஒரு ரிஷி அவளுக்கு பிராயசித்தம் சொன் னார்.அவள் மாசி மாதத்தில் வரும் ஷட் திலா ஏகாதசி விரதத்தை முறை யாக கடைபிடித்தால் பிரசித்தம் கிடைக்கும் என்றார்.அந்தப் பெண்ணும் ஏகாதசி விரதத்தை மனப்பூர்வமாகி இருந்து பெருமாளை வணங்கி அதற்கு அடுத்த நாள் துவாதசி பாரணையின் போது அதிதிகளுக்கு அன்னமிட்டாள் பாவம் தீர்ந்தது.பசி தீர்த்தது மட்டுமல்ல நற்கதியும் அடைந்தாள் என்பது ஏகாதசி மகாத்மிய வரலாறு.
அப்படிப்பட்ட ஏகாதசி விரதம் , குருவாரத்தில் வருக்கிறது.அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு.ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள். ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்தில ஏகாதசி.இந்த ஏகாதசி நிறை வின் போது (துவாதசியில்)அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்..
