வாழ்வில் எப்பொழுதும் பிறரை நாம் அவசரப்பட்டு தவறாக நினைத்துவிடக்கூடாது. இப்படி நினைத்துக் கொண்டு பல அவசர முடிவுகளுக்கு வந்து பின்னால் வருத்தப்படக்கூடிய நிகழ்வுகளும் நடந்துவிடும். தகுந்த ஆதாரமின்றி மிக விரைவாக எதிலும் ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். பொதுவாக ஒரு விஷயத்தை மூன்று விதமாகப் பார்க்கலாம்.
ஒன்று சரியாகப் புரிந்து கொள்வது.
இன்னொன்று மொத்தமாக புரியாமல் இருத்தல்.
மூன்றாவதாக தவறாக புரிந்து கொள்வது.
இந்த தவறாகப் புரிந்து கொள்வது தான் பல விபரீதங்களுக்கும் பலவிதமான மனக் கஷ்டங்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
நம் வாழ்நாளில் இப்படிப்பட்ட சில விஷயங்களையும் நாம் கடந்து வந்திருப்போம்.
ஒருவரைப் பற்றி நாம் ஏதேனும் ஒரு அபிப்பிராயத்தில் இருப்போம்.
ஆனால் சில காலம் கழித்து நாம் வேறு விதமாக கேள்விபடுவோம்.ம். நாம் நல்லவர் என்று நினைத்தவர் மிகப்பெரிய ஒரு மோசமான செயலை செய்துவிட்டு கெட்ட பெயர் எடுத்திருப்பார்.. நாம் கெட்டவர் என்று நினைத்தவர் மிக அற்புதமான மனிதராக கொண்டாடப்படும் நிலையில் இருப்பர்.
எனவேதான் அந்த காலத்தில் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்றனர்.இந்த தீர விசாரித்தல் என்பது சற்று காலதாமதமானாலும் ,ஒரு முடிவுக்கு வந்து தவறாக நினைத்துவிடக்கூடாது. அது ஒரு பக்கம் நமக்கு மன கஷ்டத்தைத் தரும். இரண்டாவது நமக்கு பாவத்தையும் தரும் .
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!!
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி மரத்திடம் கேட்டது
மழை காலம் தொடங்க இருப்பதால்
நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது
முதலில் இருந்த மரம் முடியாது என்றது
அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது
குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்
அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது
தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சென்னது எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்றது!!!!
அதற்கு மரம் கூறிய பதில் : எனக்கு தெறியும் நான் வழுவடைந்து விட்டேன்? எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! ?
கருத்து: உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்
அவர் அவர் சூழ்நிலை அவருக்கு மட்டும் தான் தெரியும்!!!
பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்…
இதை இன்னும் சிறப்பான நிலையில் ஆன்மீகத்தில் பொருத்திப் பாருங்கள். நாம் கோயிலுக்கு சென்றோம் நம்முடைய பிரார்த்தனையை வைக்கிறோம். சில நேரங்களில் அந்த பிரார்த்தனை நிறைவேறுவது கிடையாது. உடனே பகவான் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று நினைக்கிறோம். பகவான் நாம் கேட்டதை கொடுக்க வில்லை. நம் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் ஆண்டாள் பகவானிடம் கோரிக்கை வைக்கின்ற போது நான் கேட்பதை நீ கொடுக்காதே அது எனக்கு சரியாக இருக்குமா என்பதை ஆராய்ந்து கொடு. யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்
மணிவாசகரும்
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன்றன் விருப்பு அன்றே என்கிறார்.
காத்திருப்போம். நல்ல பரிசு நமக்கு கிடைக்கும். நல்ல உறவுகளும் நமக்கு கிடைக்கும். கிடைத்த உறவுகளை அவசரப்பட்டு விட்டுவிட வேண்டாம்.
