முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
- ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
- திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
- ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
- நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
- கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
- இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
- ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
- சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)
- கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
- வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
நிறைவாக பெருமாள் ஊஞ்சல் சேவையில், பாட, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அற்புதமான ஊஞ்சல் பாடல்களை எழுதியுள்ளார்.அந்தப் பாடல்களைத் தினம் பாடுங்கள்.
திருவாழத் திருவாழி சங்கம் வாழத்
திருவனந்தன் கருடன் சேனையர்க்கோன் வாழ
அருள் மாறன் முதலாம், ஆழ்வார்கள் வாழ
அளவில், குணத்தெதிராசன் அடியார் வாழ
இருநாலு திருவெழுத்தின் ஏற்றம் வாழ..
ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ..
பெருவா..ழ்வு தந்தருள் பெருமாள் எங்கள்
பெரிய பெருமாள் அரங்கர் ஆடிர் ஊசல்
மலை மகளும் அரனும் ஒரு வடம் தொட்டாட்ட
வாசவரும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
கலைமகளும் அயனும் ஒரு வடம் தொட்டாட்ட
கந்தனும் வள்ளியும் கலந்து ஓர் வடம் தொட்டாட்ட
அலைமகரப் பாற்கடலுள் அவதரித்த
அலர்மகளும் நிலம..களும் ஆயர் காதல்
தலை மகளும் இரு ம..ருங்கில் ஆட எங்கள் ,
தண் அரங்க மணவா..ளர் ஆடிர் ஊசல்
திருவரங்க மணவாளர் ஆடிர் ஊசல்
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து
பாமா.. லை பூமா..லை பாடிச் சூடி
கொடுத்த திரு கோதையுடன் ஆடிர் ஊசல்..
கோயில் மணவாளரே ஆடிர் ஊசல்
திருவரங்க மணவாளர் ஆடிர் ஊசல்
துங்க மலர் பந்தலின் கீழ் பதுமராக
தூனிறுத்தி வயிரவிட்டன் தொடுத்து மீதின் -2
ரங்க நெடுஞ்சங்கிலி விட்டத்தின் மாணிக்க
தவிசுபுனைத் தலங்கரிப்ப ஊசல்மீதே
மங்கள நாண் திருவாவ ஆடிரூசல்
மதிலரங்கர் தமக்கினியர் ஆடிரூசல்
செங்கமல நாயகியார் ஆடிரூசல்
ஸ்ரீரங்க நாயகியார் ஆடிரூசல்-2
காரணய திருவரங்க மணவாளர்க்கு
கண் களிப்பா மனமுருக அறிவு சோர
ஊரலெழ புளகமுர உயம் பூரிப்ப…
முகம் மலர மெய் குழைய மோகம் ஏற
ஆரமுதே பசுங்கிளியே முத்தே பொன்னே
அன்னமே என் அமையே அழகின் பேரே
சீரிய சிற்றிடையணங்கே ஆடிரூசல்
ஸ்ரீரங்க நாயகியார் ஆடிரூசல்
தினம் சகஸ்ர கலசம் பூஜை பெருமாளுக்கு.ஊஞ்சலில் ஆடுவார்.அப்போது அன்னமைய்யா கீர்த்தனைகள் இசைக்கப்படும்.அப்போது தோன்றிய பாடல் இதை.நீங்களும் பாடலாம் .
திருமலைவாழ் பெருமானே தினம் தினம் சேவை
திகட்டாது தருவாய் நீ மாலையில் பூஜை
ஒருநாளும் மறவேனே உன்னடி காண
உயர்வாழ்வை தருவாயே ஊஞ்சலிலாடி
விலகாத வினைத்துயர்கள் விலகியே ஓட
விரைவாக வருவாயே திருமகளோடு
இடமாக அமர்ந்தவளாம் நிலமகள் சேர
இனிமை பெற புன்னகையில் ஊஞ்சலிலாடி
பனி சூழ்ந்த மலை மீது பரிவுடன் நின்று
உலக காளும் பெருமானே வந்தனன் இன்று
கனியிதழில் அரும்பி விடும் புன்னகை போதும்
களைந்து ஓடும் துயரமெலாம் ஊஞ்சலில் காண
அழகான தமிழினிலே பாடிய பாக்கள்
அன்போடு உன்னடியில் வீழ்ந்திடும் பூக்கள்
எழிலான முகஜோதி விரிந்திட வேண்டும்
எங்கெங்கும் திருவருளும் நிறைந்திட வேண்டும்
நவமான நல்லருளும் கிடைத்திட வேண்டும்
நவகிரக சோதனைகள் அகன்றிட வேண்டும்
திவம் தந்து உன்னருகில் இருத்திட வேண்டும்
திகட்டாத உன் நாமம் போற்றிட வேண்டும்
