கடவுள் நமக்கு ஏன் கஷ்டத்தைத் தருகிறார்? என்று பலரும் நினைப்பதுண்டு.அப்படித் துன்பத்தில் துவளும் போது அவரைக்குறித்து விமர்சிப்பதும் உண்டு.திட்டுவதும் உண்டு.இது மட்டுமில்லை.அவன் தெய்வ நம்பிக்கையோடு இருந்து என்ன பிரயோஜனம்.கடவுள் கை கொடுக்கவில்லையே .இருந்தால் கை கொடுத்திருக்கமாட்டாரா..என்று கேலி பேசுவதுண்டு.
காஞ்சி மகான் சொ ல்வார்.கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் காரண காரியங்கள் உண்டு.அதை நம்மால் அறிய முடியாது.கருணைக்கடலான அவன் கஷ்டத்தைத் வேண்டுமென்றே தருவானா..இதனை அறிவதற்கு எளிய கதை.
இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன… அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம்…. என்ன அணில் பக்தி செய்யுமா என்று கேட்காதீர்கள்.
ஸ்ரீ இராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் செல்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது வாநரவீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்டன சில அணிற்பிள்ளைகள்.
நல்ல காரியத்துக்கு கூப்பிடாம@ல உதவலாம்.தாமும் இராம காரியத்துக்கு உதவ எண்ணின.
இவ்வாநரங்கள் பெருமாள் விஷயத்திலேதமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்கின்றன. நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே ஈடுபடுவோம் என்றெண்ணி, எல்லா அணில் பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலேகொண்டு உதறுவது இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு; அதனை அருளிச்செய்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஜெபித்து விட்டு செய்வதும் , ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்….அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது ….
‘ திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை ‘ என்று அடிக்கடி சொல்லும்…அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும்….
கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை….
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது…. நேரம் போவதே தெரியவில்லை …. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது…. காயம் எதுவும் பட வில்லையென்றபோதிலும் , கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது….
‘ பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே… உங்களுக்கு நன்றி ‘ என்றது …. இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது….
‘கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது…. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் ‘ என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது…
பக்தியுள்ள அணில் சொன்னது ,‘ கடவுளை நம்புற நாங்கள்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை…. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை….அதனால கடவுள் எங்கள கீழே தள்ளிவிட்டாலும் அதுலயும் காரணம் இருக்கும் ‘ என்றது….ஆமாமாம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை ‘ மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது…
கண்களை மூடி விண்ணை நோக்கி ,‘கடவுளே , இந்த அவமானத்துக்கும் , வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க ‘ என்றது….அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது… மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது….
அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்து கொண்டிருந்தது…
‘ டேய் , உன் பக்கத்துல பாம்புடா ‘ என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை…
கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது …. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது ….சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் …. அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம் ….எனவே சிரிப்பதைப்பற்றிக்கவலைப்படாதீர்கள்.அணிலைப் போல பக்தி செய்யுங்கள்.
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா ஆறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
-அருணகிரி.
