புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள், உத்தமமான பகவத் குணா னுபவம் செய்த மகான்கள் என பல வகையினர் உண்டு. மிகவும் புண் ணியம் செய்தவர்கள் ஒளி உலகம் வழியாக எமன் உலகை அடைகிறார்கள். பாவம் செய்தவர்கள் இருள் வழியாக எமன் உலகம் அடைகிறார்கள். வடக்கு வாசல், தெற்கு வாசல் என்று இரண்டு வாசல்களாகச் செல்கிறார்கள்.
நரக வாதனை அனுபவிக்கக் கூடியவர்கள் தெற்கு வழி பயணத்தை மேற் கொள்ளுகின்றார்கள். பாவம் செய்தவரானாலும் புண்ணியம் செய்தவ ரானாலும் எமன் உலகு அடைந்தே தீர வேண்டும். ஆனால் அனுபவங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு விதமாக இருக்கும்.
மூன்றாவதாக மோட்சம் என்கின்ற பிறவா பேரின்ப நிலை ஒன்று உண்டு. அந்த நிலையில் இந்த இரண்டு சங்கடங்களும் இல்லை. அங்கே பாவங்களும் இல்லை. புண்ணியங்களும் இல்லை .
எனவே பாவம் அல்லது புண்ணியம் செய்த எதுவாக இருப்பினும் அவரவர் களுக்கு உரிய கர்ம காரியங்களை சிரத்தையோடு செய்ய வேண்டும்.
பூவுலகில் இறந்தவர்களைக் குறித்து செய்யப்படும் உத்தர கிரியைகளும் இதர கிரியைகளும் (உதகதானம் விருஷோர்சர்க்கம் , பிண்ட சிரார்த்த காரியங்கள்) அந்த ஜீவனைச் சேருகின்றன. அதனால் தான் பிண்டம் போடுகின்றோம்.
பிண்ட சரீரத்தோடு எமலோகம் செல்லும் ஜீவன், பின் கட்டை விரல் அளவு உயரத்துடன், எமபுரிக்கு சற்றுத் தொலைவில் உள்ள வன்னி மரத்தில் தங்கு கிறது. இங்கு இருந்து 20 காத வழி . எம பட்டினம் போகும் வழியில் தான் சித்ரகுப்தன் நகரம் இருக்கிறது.
இந்த எமபுரி புண்ணிய ஆத்மாக்களுக்கு சொர்க்கமாகவும் பாவம் செய்தவர் களுக்கு நரகமாகவும் அனுபவத்தை தருகிறது.
பூவுலகில் நன்மையைச் செய்தவர்கள், புண்ணியங்களைச் செய்தவர்கள், தானங்களைச் செய்தவர்கள் இறந்தபின் எமதுரியில் மகிழ்ச்சியான வர வேற்பைப் பெறுகிறார்கள்.
கோதுமை, கடலை மொச்சை, எள் , கொள், பயறு, துவரை என்ற ஏழு தானியங் கள் சப்த தானியங்கள் என்பார்கள்.
இந்த தானியங்களைத் தானம் செய்வதன் மூலம் தர்மராஜன் சாந்த மடைகின்றான்.
அதைப்போலவே மகான்கள், ஞானிகள், எமன் உலகம் நுழைந்தாலும் எமன் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து, கைகூப்பி வணங்கி வரவேற் கின்றான்.
ஆழ்வார் பாசுரம் உண்டு .
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.
எமன் சொல்லுகின்றான். “அவன் திருமால் அடியாராக இருக்கின்றான். திருமாலைத் தவிர வேறு எதையும் அறியாதவன் எல்லாம் கண்ணன் என்ற மனநிலையில் இருக்கும் பரம சாதுவாக, பரம வைஷ்ணவனாக இருக்கும் அவனை எல்லோரையும் போல நினைக்காதீர்கள் .துன்புறுத்தாதீர்கள். அவர்களைக் கண்டால் பிரதட்சணம் செய்து வணங்கி வந்து விடுங்கள்” என்று அவர்களுக்கு ஆலோசனை சொல்வதாக பொருள்.
“ஸ்வபுருஷ மபிவீக்ஷய பாசஹஸ்தம் வததியம கில தஸ்ய கர்ணமூலே –பரிஹர மதுஸூதநப்ரபந்நாந் ப்ரபுரஹ மந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்“ என்கிற ச்லோகத்தைத் தழுவி இப்பாசுரமருளிச் செய்யப்பட்டது. அந்த ச்லோகத்தின் கருத்தும் இந்தப் பாசுரத்தின் கருத்தும் ஒன்றேயென்க.
யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செய்யப் புறப்படும்போது யமன் அத்தூதர்களைஅழைத்து, காதோடே ஒரு வார்த்தை சொன்னான், “நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரம் செலுத்த வேண்டாம்.அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து பரமஸாத்விகர்களாய் விலகுங்கள் .‘
இதனால் பாகவதர்கட்கு எமனிடத்தில் அச்சமே இல்லையென்றதாம்.
“அவன்தம ரெவ்வினையராகிலும் எ
ங்கோனவன் தமரே யென்றொழி வதல்லால் – நமன்
தமராலாராயப் பட்டறியார்கண்டீர் அரவணைமேற்
பேராயற் காட்பட்டார்பேர்“
என்றார் பொய்கையாழ்வார்,
“கெடுமிடராயவெல்லாம் கேசவா வென்ன
நாளுங்கொடுவினை செய்யுங்
கூற்றின்தமர்களுங்குறுக கில்லார்“ என்றார் நம்மாழ்வார்.
“மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ!
நின்னாமங்கற்ற, ஆவலிப்புடைமைகண்டாய் –
நாவலிட்டுழிதாகின்றோம்
நமன்றமர் தலைகள்மீதே“ என்றார் தொண்டரடிப்பொடி யாழ்வார்.
“எத்தியுன் சேவடி யெண்ணியிருப்பாரைப் பார்த்திருந்தங்கு
நமன்றமர் பற்றாமல், சோத்தம் நாமஞ்சுதுமென்று தொடாமை நீ,
காத்திபோய்க் கண்ணபுரத்துறை யம்மானே!“ என்றார் திருமங்கையாழ்வார்.
எனவே இறையடியார்களுக்கு இந்த எம வாதனை இல்லை.
அவன் மண்டபம் எப்படியிருக்கும்.?
எம சபா மண்டபத்தில் மிகவும் கோரமுகமுள்ள எமபடர்கள் பல்வேறு ஆயுதங் களுடன் நிற்கிறார்கள் புண்ணியம் செய்த ஜீவன் தேவ சரீரம் எடுத்து சொர்க்க உலகத்தை அடைகின்றான்.
பாவம் செய்தவன் தண்டனை பெறுவதற்காக யாதனா சரீரம் எடுத்து நரக லோகம் போகின்றான்.
புண்ணியம் செய்தாலும் பாவம் செய்தாலும் அதற்கான பலாபலன்களை அனுப வித்து மறுபடியும் அவரவருடைய மீதி கர்மத்துக்குரிய(சஞ்சிதம்-பராமாய பழவினை ) பிறப்பை அடைகின்றான்.
