நாம் எம்பெருமானை ஸேவிக்கிறோம்..!!
ஆராதனைகள் செய்கிறோம்….!!
எப்படிச் செய்தாலும்,எதைச்செய்தாலும் தாயார் மஹாலக்ஷ்மீ ஸஹிதமாகத்தான் செய்யவேண்டும்..
வேதம் தாயாரை வைத்தே பெருமாளை நிச்சயிக்கிறது….
‘ ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ!
அஹோராத்ரே பார்ஶ்வே! நக்ஷத்ராணி ரூபம் !
அஶ்விநௌ வ்யாத்தம்! இஷ்டம் மநிஷாண
அமும் மநிஷாண ! ஸர்வம் மநிஷாண!!’
இங்கு அழகான விஷயம் உள்ளது..
பூமிப்பிராட்டியும்,ஶ்ரீதேவித் தாயாரும் உன்னுடைய பத்னிகள்..!!
ஸதா ஸர்வகாலமும் உன்னுடனே இருப்பவர்கள்..( இரவும்,பகலும்)
உம் திவ்ய திருமேனி நக்ஷத்ரம்போல மிளிர்கிறது!
உமது திருமுகமும் அஶ்விநீ தேவர்கள் போல அழகுடன் திகழ்கிறது!!
இஷ்டத்தையும்,…கைங்கர்யத்தையும்,..
மற்றும்
எல்லாவற்றையும் அருள வேண்டும்!
புருஷ ஸூக்தம் இப்படி பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே சொல்கிறது!
உலக நாயகன் ஶ்ரீமந் நாராயணன்…!!
அவனே லக்ஷ்மீபதி!!
திருவின் மணாளன்..!!
நிலமகள் நண்பன்.!! !
ஆயர் மடந்தை அன்பன்! !
முராரியின் திருமார்பில் பிராட்டியின் அடையாளங்கள் திகழ்வதைக்கொண்டு வேதாந்தங்கள் பரதத்வ விசாரத்தை முடிக்கின்றன…என்று பராசர பட்டர் அருளினார்..
ஆக…ஶ்ரீய: பதியே உபாயம்.உபேயம்….!
ப்ரஹ்மசாரி நாராயணன் அன்று..
“ ஹ்ரீஶ் ச “…என்பதற்குப் பிறகு….. இங்கு “ தே” என்று சொல்லப்படுவது ஶ்ரீமந் நாராயணனாகிய உமக்கு ..என்ற பொருளில்…

இங்கு வ்யாக்யானம்அருமை….
‘ தே..’…உமக்கு…
தலைகள் ஆயிரம்,…கண்கள் ஆயிரம்..தாள்கள் ஆயிரம் கொண்ட உமக்கு…
எல்லா சராசரங்களையும் வ்யாபித்த உமக்கு
அனந்தமான உமக்கு
அண்டத்தை உண்டாக்கிய உமக்கு
ஶ்ரீவைகுண்ட நிலயனான உமக்கு
திருபாற்கடலில் பள்ளி கொண்ட உமக்கு
ஜ்யோதியாய் இருக்கும் உமக்கு
நாம ரூபங்களைக் கொடுத்த உமக்கு..
அந்தர்யாமியான உமக்கு
அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்களால் அடையப்படும் உமக்கு…
நித்யஸூரிகளால் வணங்கப்படுபவரான உமக்கு..
எல்லாருக்கும் தேவதேவனான உமக்கு…
மோக்ஷ உபாயமான உமக்கு..!!!
இப்படி பலவகையாச் சொன்னாலும்…இதற்கும் மேலான ஏற்றம்…இவன் ஶ்ரீதேவிக்குப் பதியாய் இருப்பதால்தான்..!!
‘ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’
பூமி பிராட்டி…ஶ்ரீதேவி …உமக்கு..திவ்ய மஹிஷிகள்…என்று வேதம்…சொல்கிறது..
இரண்டாவது ..ச காரம்.. ( லக்ஷ்மீஶ் ச) ….நீளாதேவியைச் சொல்கிறது
குழற் கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும்..என்று ஆழ்வார் ஸாதிக்கிறார்..
பெரிய வாச்சான் பிள்ளை….அருள்வது…
ஶ்ரீதேவி…அடியார் குற்றங்களைப் பொறுப்பவள்..!
பூதேவி..குற்றம் காண்பானென்..பொறுப்பானென் என்று கேட்பவள்..
!
நீலாதேவியான நப்பின்னை.. க்ஷமையே வடிவு கொண்டவள்..
ஶ்ரீதேவி..சம்பத்து..!
அந்த சம்பத்து விளையும் தரை… பூமி
அதை அநுபவிக்கும் போக்தா…நீலா தேவி..
ஆக..ஹ்ரீ : …என்றால்.பூமாதேவி
தேசபக்தி..
லக்ஷ்மீ:
திவ்ய லக்ஷணங்கள் கொண்டவள் அதனால்..லக்ஷ்மீ..
நமக்கு…தனம்..தான்யம்…ஸௌக்யம்..
இந்த மூன்றையும் இவர்களே கொடுக்கிறார்கள்…!
இதற்கும் மேலே புருஷார்தத்தையும் கொடுப்பதற்கு பெருமாளிடம் சொல்லி க்ருபை செய்வார்கள்..
அஹோ ராத்ரே பார்ஶ்வே ….
பகலும்,இரவும்..அவனுடனே நமக்காக இருப்பார்கள்..
நிழல் போல்வனர்..
நாம் நிலையற்ற நெஞ்சம் கொண்டு இருப்பதால்..நம்மை பரந்தாமனிடம் சேர்க்கவே உடன் இருக்கிறார்கள்…
போட்டி போட்டுக் கொண்டு பரிவு காட்டுகிறார்கள்…
ராமபிரானுக்கும் இடப்புறத்தில் விசாலமான கண்களை உடைய பூதேவி இருந்தாளாம்..!
“ராமஸ்ய தக்ஷிணே பார்ஶ்வே பத்மா ஶ்ரீஸ் ஸமவஸ்த்திதா !
ஸவ்யே து ஹ்ரீர் விஶாலாக்ஷீ
(உத்தர காண்டம்)
அடுத்து…
நக்ஷத்ராணி ரூபம்…
இவனது திவ்ய மங்கள விக்ரஹம் நக்ஷத்ரங்களோடு கூடிய நீலமேகம் போல் இருக்கிறானாம்..
ஆதித்யனைப்போல ஒளி..
கணக்கற்ற நக்ஷத்ரங்களோடு சேர்ந்தாற்போல் சோதி…
சங்கு சக்ரம்..திவ்யாபரணங்கள்…பிராட்டியின் சேர்த்தி,,பீதாம்பரம்….அழகோ அழகு…அழகு!!
காணக்கண்கோடி வேண்டும்..!
கண்ணனே சொல்கிறான்
..(பாரதம்)
தாரா ரூபாணி த்ருஶ்யந்தே யாந்யேதாநி நபஸ்ஸ்தலே !
மம ரூபாணி தாந்யேவ
( நக்ஷத்ரங்களை சரீரமாகவும் சொல்லலாம்)
நக்ஷத்ரங்கள் எல்லாம் இவனது ரூபமே..!
திருமுகமும் அஶ்வினீ தேவர்கள்..
ஆனாலும்..அவர்களைக் காட்டிலும் அழகு இவன்…
ஒப்பற்ற அழகு கொண்டவன் …யாராலும் ஒப்பீடு சொல்லமுடியாது…
நாம் பார்க்கும் வஸ்துவில் ஒப்பீடு சொல்கிறோம்..
அழகு கொண்டு இருக்கும் சந்த்ரன்,தாமரை அம்ருத தடாகம்
போன்றவற்றின் கர்வத்தையும் போக்கடிப்பவன் எம்பெருமான்..
விஹரது மயி ரங்கிணஶ்சூலிகா
ப்ரமகதில கோர்த்வ புண்ட்ரோஜ்ஜ்வலம்!
முகம் அம்ருத தடாக சந்த்ராம்புஜ
ஸ்மயஹரஶுசி முக்த மந்தஸ்மிதம் !!
இப்படிப்பட்ட அழகு கொண்டவன்…அரங்கன்.. என்கிறார் பட்டர்….
வேதம் …அவனிடம் வேண்டுகிறது.
இஷ்டம் மநிஷாண!
அமும் மநிஷாண!
ஸர்வம் மதிஷாண!
நீங்காத செல்வம் வேண்டும்…
நன் மக்களைப்பெற்று மகிழ வேண்டும்..
நல்ல பதத்தால் மனை வாழ வேண்டும்…
பகவத் அநுபவம் வேண்டும்…
நித்ய கைங்கர்யம் வேண்டும்..
தாயாரும் பெருமாளும் இருக்கும் சேர்த்தியில் அடிமை கொள்ளவேண்டும்…என்று வேத புருஷன் வேண்டுகிறான்..!
கைங்கர்ய ப்ரார்த்தனை….செய்து..
..எல்லாம் கொடுக்க வேண்டும் என்று..,,தனக்காக இல்லாமல்,அவன் அடியார்க்கு என்று வேண்டுவதில் தவறு எதுவும் இல்லை!
வளரட்டும் அவனது……திருவருள்..!
Article By Smt.Haripriya Devanathan,Chidambaram
