BY எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம்
எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர் அசைவுகள் உண்டு.அந்த அசைவையும் எதிர் அசைவையும் தீர்மானிப்பது காலம்.
ஒரு நொடி முதல் ஒரு ஒளியாண்டு வரை அது வித்தியாசப்படும்.
இதைத்தான் “நியூட்டனின் விதி” என்று சொல்லுகின்றோம்.
ஒவ்வொரு செயலுக்கும் இணையான எதிர் செயல் உண்டு.(For Every action ,there is equal and opposite Reaction)
நியூட்டனின் விதியை நம்முடைய முன்னோர்கள் மிக எளிதாகச் சொன் னார்கள்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”.
“வினை விதைத்தால் வினை அறுக்கலாம்”.
“எதைச் செய்கின்றோமோ அதுவே திரும்பக் கிடைக்கும்”
இந்த பிரபஞ்ச அசைவுகளையும், அசைவுகளின் விளைவுகளையும் யூகித்து புரிந்து கொள்ளவே ஜோதிட சாஸ்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் தான் பிரம்மத்தை அறியும் வேதத்தின் ஒரு அங்கமாக இந்த சாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில், பெரும்பாலோருக்கு இயல்பாகவே ஜோதிட ஞானம் இருந்தது.
வாழ்வின் நன்மை தீமைகளை , சம்பவ குறியீடுகளைக் கொண்டும் வானியல் நிகழ்வுகள் , பருவ கால மாற்றங்ளைக் கணித்தும் தெரிந்து கொண்டார்கள்.
அதற்கேற்ற வாழ்வியல் முறைகள், சடங்குகள், விரதங்கள், வழிபாடுகள் என்று வகுத்துக் கொண்டார்கள்.
