இந்த வாரம் இப்படித்தான்
(29.8.2024 முதல் 4.9.2024 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் குரு, மிதுனத்தில் செவ்வாய் சிம்மத்தில் சூரியன் புதன் , கன்னியில் சுக்கிரன்,கேது, கும்பத்தில் சனி(வக்கிரம்), மீனத்தில் ராகு,
மேஷம்
சாதகங்கள்: குரு சனி கேது இவைகள் வலிமை வாய்ந்த கோள்கள் .இவர்கள் நல்ல விதத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தொழிலிலும் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ராசிக்கு இரண்டில் குரு இருப்பதால் தன வரவுகள் குறையாது. ஆறில் உள்ள கேது உங்கள் இஷ்டத்தை பூர்த்தி செய்வார். இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் செல்கின்றார். இது வெற்றி ராசி என்பதால் மனதில் தைரியம் கூடும். முக்கியமானவர்களை சந்திப்பீர்கள் .அவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொழில் குறிக்கீடுகள் அகலும். வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு .உடன்பிறப்புகள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சிறப்பு உண்டு.
கவனம் தேவை : தன குடும்ப அதிபதியான சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சம் பெறுகிறார். எனவே பொருளாதாரம் வந்தாலும் அவைகளை கவனத்துடன் கையாளவில்லை என்று சொன்னால் உங்களை அறியாமலேயே இழப்பு ஏற்படும் சில நேரங்களில் உங்கள் பணம் உங்களுக்கு பயன்படாமல் கடன் வாங்கும் படியாக நேரும். நீச்ச சுக்கிரன் என்பதால் கணவன் மனைவி உறவுகளில் சிறு உரசல்கள் ஏற்படலாம் .சுப காரியங்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றத் தைத் தந்து தள்ளி வைக்கும் படி நேரலாம். கலைஞர்களின் ஒப்பந்தங்கள் ரத்தாகலாம் .விழிப்புணர்வு தேவை. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.
.பரிகாரம்: இப்பொழுது உங்களுக்கு சுக்கிரன் வலிமை குறைந்து இருக்கிறது.வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வாருங்கள்…
ரிஷப ராசி
சாதகங்கள்: ராசிநாதன் இதுவரை உங்கள் சுகஸ்தானத்தில் சூரியனோடு இருந்தார். இப்பொழுது பஞ்சம ஸ்தானத்தில் கேதுவோடு இணைகிறார் .உங்களுக்கு ஆதரவாக இருப்பது புதன். தன குடும்ப புதன் சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகம் பெறுவது சிறப்பு .அதனால் சற்று முயன்றால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டு .கல்வி சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். தாய் வழி உறவுகள் கை கொடுக்கும். சொந்த வீடு கட்டி குடி போகும் வாய்ப்பு சிலருக்கு உண்டு. சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் கவனத்தோடு இருப்பவர்களுக்கு தொழில் முயற்சி வெற்றி பெறும் முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்
கவனம் தேவை: சுக்கிரன் நீச்சம் அடைகிறார். ராசிநாதன் நீச்சம் அடைவது என்பது வலிமைக் குறைவு .மற்ற கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் கூட நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மனக் குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதாரத்திலும் சற்று பற்றாக்குறைகள் ஏற்படும் .விரையாதிபதியான செவ்வாய் குடும்ப தனத்துக்கு வருவதாலும் பற்றாக்குறை ஏற்படும் காசு பணம் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்
பரிகாரம்: அரச மரத்தடி விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். அல்லல்கள் தீரும்.நன்மைகள் சேரும்..
மிதுனம்
சாதகங்கள்: சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேதுவோடு இணைகின்றனர்/ ராசிக்குள் லாபாதிபதியான செவ்வாய் நுழைவது சிறப்பு. இதன் மூலம் உங்கள் வேலை வாய்ப்பு முன்னேற்றமாக இருக்கும் .எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள் .தொழில் புரிபவர்களுக்கு புதிய முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிம்ம ராசியில் புதனும் சூரியனும் இணைந்து இருப்பதால் நினைத்த காரியங்கள் வெற்றி கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். விரயாதி பதியான சுக்கிரன் நீச்சம் பெறுவதால் விரையங்கள் குறையும்.
கவனம் தேவை: பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாக இருந்து சுக்கிரன் நீச்சம் பெறுவதால் குழந்தைகள் வழியில் சில பிரச் சனைகள் வரலாம். பூர்வீகச் சொத்துக்களில் சில இடர்பாடுகள் ஏற் படலாம். கற்பனையான எண்ணங்களால் மனதில் குழப்பங்கள் வரலாம். தாழ்வு மனப்பான்மை வந்து சிரமப்படுத்தலாம். எனவே கவனம் தேவை. குரு விரயஸ்தானத்தில் இருப்பதால் சுப காரியங்களில் தடை உண்டு வரன் நிச்சய விஷயத்தில் சற்று கவனக்குறைவாக நிச்சயித்து விட்டால் சிக்கலாகி விடும். எனவே பொறுமை தேவை .
பரிகாரம்: ஞாயிறு தோறும் சூரிய நாராயணனை வணங்குங்கள். தினம் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.தேங்கும் காரியங்கள் வேக மெடுக்கும்.தடைகள் நீங்கும்..
கடக ராசி
சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் லாபாதிபதியான சுக்கிரன் இருக்க,குரு லாப ஸ்தானத்தில் இருக்க, குருவும் சுக்கிரனும் பார்வையால் இணைய, நல்ல பல யோகங்கள் உண்டு. புதனும் உங்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றார். குடும்ப நிர்வாகம் சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .கேது சுப பலத்தோடு இருப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். புதிய வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். காரியத்தடைகள் விலகும். ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு..
கவனம் தேவை: பஞ்சமாதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் புகுவதால் சிலர் வீடு மனைக்கட்டு விற்கும் படி நேரலாம் .சூரியன் பலவீனமாக இருப்பதால் பிறரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். அஷ்டம சனி நடப்பதால் கையில் சேமிப்பு தங்காது. எனவே கவனமாக பணப்பிரச்ச னைகளைக் கையாளவும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. ஒன்பதாம் இடத்தில் உள்ள ராகு தந்தையோடு கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் விடாமல் அருகாமையில் உள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று வழிபாடு நடத்துங்கள். அனைத்தும் நலமாகும்.அல்லல்கள் தீரும்…
சிம்மம்
சாதகங்கள்: மூன்று பத்துக்குரிய சுக்கிரன் கேதுவோடு தன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். செவ்வாய் பலம் பெற்று பதினோராம் இடத்தில் அமர்ந்திருப்பது நல்ல அமைப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு கூடும். சகோதர வழியில் உதவிகள் வரும். தன வரவு நன்றாக இருக்கும் .உறவினர் மூலமாக பணம் பெறுவீர்கள் .பத்திரிக்கை, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வழிகள் பிறக்கும்.
கவனம் தேவை: சூரியன் ராசியில் இருப்பது பலம்தான் என்றாலும் கோள் சார ரீதியில் ராசியில் புகும்போது சில தொல்லைகளைத் தரவே செய்வார் .யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏழாம் இடத்தில் உள்ள சனி பலமாக இருப்பதால் கணவன் மனைவி உறவுகள் விட்டுத் தந்து செல்ல வேண்டும். தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் .தொழிற் ஸ்தானத்தில் குரு இருப்பதால் இருக்கும் வியாபாரத்தை நல்லபடியாக நடத்துங்கள். இப்பொழுது புதிய முதலீடுகள் போட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 21 .08.24 இரவு 7.12 மணி முதல் 23 .08.24 இரவு 7.54 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்
.பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலய வழிபாடும் பைரவ வழிபாடும் சிறப்பைத் தரும். குலதெய்வத்தை மறக்க வேண்டாம்.
கன்னி
சாதகங்கள்: ராசிக்குள் தன குடும்ப அதிபதியான சுக்கிரன் கேதுவோடு இணையும் அமைப்பில் இவ்வாரம் துவங்குகிறது ராசிநாதன் பலம் இழப்பதால் உங்களுக்கு இதுவரை கிடைத்த மற்ற கிரகங்களின் சாதகமான பலன்கள் சற்று குறைவாகவே வேலை செய்யும் .கவனமாக இருந்தால் பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதிய வீடு கட்டும் அமைப்பு உண்டு. சனி பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டு நன்கு உழைத்து வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். ராசிக்கு 9 ல் குரு அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் சுப காரியத் தடைகள் நீங்கி திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். திருமணமான பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு .
கவனம் தேவை; செவ்வாய் சற்று பலம் குறைந்து இருப்பதால் சகோதர உறவுகளை கவனமோடு பராமரிக்கவும். தேவையில்லாத பேச்சுக்களால் கருத்து மோதல்கள் வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கேது ராகு இவர்கள் ஒன்று ஏழாம் இடங்களில் வலுவோடு இருப்பதால் கணவன் மனைவி கருத்து உரசல்கள் வந்தபடி தான் இருக்கும் அதைக் கண்டு கொள்ளாமல் அல்லது கவனமாகக் கையாண்டால் பிரச்சனைகள் இல்லை. மூன்றாவது நபர்கள் உங்கள் குடும்பத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம்.
பரிகாரம்: உடல் ஊனமுற்றோருக்கும் ஏழைகளுக்கும் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் அதி கரிக்கும்..
துலாம் ராசி
சாதகங்கள்: புதன் உங்கள் லாப ராசிக்கு வந்து சூரியனோடு இணைகிறார் .பல நன்மைகள் கிடைக்கும். பத்திரிகை தகவல் தொழில்நுட்பத்துறைகளில் வேலை உள்ளவர்களுக்கு எதிர்பார்ப் புகள் நிறைவேறும். தொழில் உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தந்தை வழி உறவுகள் சிறக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும் .உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் அல்லது துறை மாற்றம் உண்டு. வருமானம் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் குறையாது. பதினொன்றாம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதால் அரசாங்க உதவிகள் உண்டு அதைப்போலவே ராகு ஆறில் இருப்பதும் உங்கள் முயற்சிகளை ஊக்குவிக்கும் .
கவனம் தேவை: ராசிநாதன் சுக்கிரன் விரய ஸ்தானத்தில் நீச்ச மடைகிறார். ராசிநாதன் நீச்சமடைவதன் மூலம் அவர் பலம் குறைந் தாலும் 12ஆம் இடத்தில் அவர் வலு குறைந்து இருப்பது நன்மை தான். விரையங்கள் குறையும் ஆனால் அதே சமயம் ராசிநாதன் பலம் இழப்பதால் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை கவனமாகச் செய்ய வேண்டும் ஆரோக்கிய தொல்லைகள் ஏற் படலாம் சனியும் வக்கிரகதியில் இருப்பதால் தொழில்துறையில் புதிய முயற்சிகள் இப்பொழுது வேண்டாம் .
பரிகாரம்: வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள். வினைகள் தீரும். காரிய வெற்றி கிடைக்கும்….
விருச்சிக ராசி
சாதகங்கள்: களத்திர கரகனான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேது வோடு இணைகிறார். சூரியன் ஆட்சி பெற்று புதனோடு இருப்பதும் நல்ல அமைப்பு .சப்தம ஸ்தானத்தில் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்வையிடுவதும் சிறந்த அமைப்பு .அரசாங்க உதவிகள் உண்டு .அரசு தேர்வுகளில் வெற்றி உண்டு. புதிய வியாபாரம் யுக்திகள் பலன் அளிக்கும் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். வெளிநாட்டு வேலை முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக் கும்.
கவனம் தேவை: இதுவரை ஏழாம் இடத்தில் இருந்த ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் நுழைவதால் கஷ்டங்களை வரவழைத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம் .தொழிலிலும் சிறிய இடர்ப்பாடுகள் நேரலாம் அவசர முடிவுகளும் முன் கோபமும் தூண்டப்படும் என்பதால் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால் வேலை உத்தி யோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும்.
சந்திராஷ்டமம் :28 .08.24 அதிகாலை 3,41 மணி முதல் 30.08.24 காலை 11.34 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்
பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய் யுங்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள். பசு மாடுகளுக்கு உணவளியுங்கள் .நன்மையான பலன்கள் வசமாகும்..
தனுசு ராசி
சாதகங்கள்: ஐந்துக்குரிய செவ்வாய் 7ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதும் ராசிநாதன் குரு உங்கள் தன குடும்ப ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன் பத்தாம் இடத்தில் கேதுவோடு இணைந்திருப்பதையும் வைத்து ஆராயும் பொழுது சில எதிர்பாராத நன்மைகள் உண்டு. மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள் .உத்தியோகத்தில் மாற்றமும் பதவி உயர்வும் உண்டு. வீடு வாகனம் முதலியவற்றை வாங்கும் யோகம் உண்டு. மூன்றாம் இடத்தில் சனி நன்றாக பலத்தோடு இருப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிக்கும். பத்தாம் இடத்தில் கேது நல்ல அமைப்புடன் இருப்பதால் திடீர் வரவுகள் உண்டாகும் .ஆன்மீகப் பயணங்கள் செய்யும் வாய்ப்பு உண்டு.
கவனம்தேவை: சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் அரசாங்கக் காரியங்களில் தடைகள் உண்டு .அரசாங்க அதிகாரி களோடு சிலருக்கு பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் ஏற்படலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடலிலும் மனதிலும் சோர்வினை உணவீர்கள்.
சந்திராஷ்டமம் : 30 .08.24 காலை 11.34 மணி முதல் 01 .09.24 இரவு 9.48 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்தி ராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்
பரிகாரம்: வியாழக்கிழமை அருகாமையில் உள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்குச் செல்லுங்கள் .முதியவர்களுக்கும் ஏழைகளுக்கும் முடிந்த அளவு உதவுங்கள்.
மகர ராசி
சாதகங்கள்: சுக்கிரன் பாக்கியஸ்தானத்துக்கு நகர்கிறார். ஐந்தாம் இடத்தில் குருவோடு இருந்த செவ்வாய் ஆறாம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் மனதில் தைரியமும் ஆற்றலும் பிறக்கும். காரியத்தடைகள் விலகும். ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் எத்தனை சோதனை வந்தாலும் அவற்றை வெல்லக் கூடிய நேர்மறை எண்ணங்களும் வரும். அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.
கவனம் தேவை: அஷ்டமத்தில் சூரியன் பலமாக இருப்பதால் யாருடனும் பகைத்துக் கொள்ள வேண்டாம். முன் கோபத்தை கைவிடவும். கண்ணெரிச்சல், உடம்பில் அரிப்பு, உஷ்ண வியாதிகள் அஜீரண கோளாறு முதலானவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் உணவு மற்றும் ஓய்வு விஷயத்தில் கவனம் தேவை. ஒன்பதாமிடத்தில் கேது இருப்பதால் தந்தையாரிடம் வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் தவிர்க்கவும். சனி பகவான் வக்ரகதியில் இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்து பழகவும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம் .அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
சந்திராஷ்டமம் : 01 .09.24 இரவு 9.48 மணி முதல் 04 .09.24 காலை 9.55 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்தி ராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்
பரிகாரம்: அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போடுங்கள் .கோயில் பிராகாரத்தை மனம் உருகி வலம் வாருங்கள். தொல்லைகள் விலகும்.நன்மைகள் சேரும்..
கும்பம்
சாதகங்கள்: சுகாதிபதி சுக்கிரன் அஷ்டம ராசியில் கேதுவோடு இணைகிறார். இதுவரை நான்காம் இடத்தில் இருந்த செவ்வாய் ஐந்தாம் இடத்திற்கு மாறி உங்கள் லாப ஸ்தானத்தையும் விரய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். செவ்வாய் பலம் அதிகரித் திருப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எதிர்பாராத திருப்பங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அதற்கான புதிய வாய்ப்புகளும் வழிகளும் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
கவனம் தேவை: எந்தப் பிரச்சனையிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறை யினர்களுக்கு வாய்ப்பு குறையும். வருமானமும் சற்று பாதிக்கும். வார இறுதியில் இந்த நிலை சரியாகலாம் .ஜன்மச் சனி நடந்து கொண்டிருப்பதால் வீடு மனை வாங்கும் பொழுது பத்திரப்பதிவைச் சரி பார்க்கவும்.. ஏமாறும் வாய்ப்பு அதிகரிக்கும் .இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் எதையும் மிக அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்து பழகவும்.
சந்திராஷ்டமம் : 04 .09.24 காலை 9.55 மணி முதல் 06 .09.24 இரவு 11 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்
பரிகாரம்: பிரதோஷ விரதம் தவறாது கடைப்பிடியுங்கள். லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். வாழ்வில் துன்பங்கள் குறையும். நன் மைகள் அதிகரிக்கும்.
மீன ராசி
சாதகங்கள்: தன குடும்ப அதிபதி செவ்வாய் சுகஸ்தானத்திற்கு மாறுகின்றார். அஷ்டமாதிபதி சுக்கிரன் நீசமாகி கேதுடன் இணைந்து ராசியைப் பார்வையிடுகிறார். ஆறாம் இடத்தில் சூரியன்ஆட்சி பலத்தோடு இருப்பது சிறப்பு. அரசாங்க உதவிகள் கிடைக்கும் .போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பார்கள். முக்கியஸ்தர்களின் சந்திப்பின் மூலம் உங்கள் சிக்கல்கள் தீரும். இடமாற்றம் ஊர் மாற்றம் நீங்கள் விரும்பியபடி நடைபெறும்.
கவனம் தேவை: சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் கேதுவோடு இணைந்து ராசியைப் பார்ப்பதால் பெண்களால் பிரச்சனைகள் வரலாம். வண்டி வாகனங்களை எச்சரிக்கையோடு கையாளா விட்டால் செலவு வைக்கும். குடும்ப உறவுகளும் சாதகமாக இருக்காது. ராசிக்குள் ராகு பகவான் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்களிடம் பண விஷயங்கள் குறித்து ஆலோசிக்காதீர்கள். பிறருக்கு வாக்குறுதிகளை வழங்க வேண்டாம். இப்போதைய கிரக நிலையில் உங்களால் அதைக் காப்பாற்றுவது சிரமமாக இருக்கும் .
பரிகாரம்:. பள்ளிகொண்ட பெருமாள் கோயிலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தரிசனம் செய்யுங்கள். பௌர்ணமி விரதத்தைக் கடைபிடியுங்கள்..