காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பான பங்குனி உத்திர பெருவிழா 13 நாள்கள் பெரு விழாவாக நடைபெறும். வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேவை, தங்க ரிஷப வாகன வீதி உலா முதலியவை இங்கு விசேஷம் .லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்திருவிழாவில் இன்றைய தினம், ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியும், இரவு 63 வர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.
