திருக்கோட்டியூர் நிகழ்வு தரும் ராமாநுஜர் சிந்தனைகள்
ஸ்ரீமான். எஸ். கோகுலாச்சாரி, ஆசிரியர்,ஆலய தரிசனம்
Sri.S.Gokulachari, Editor, Aalayadharisanam
இராமாநுசர் – திருக்கோட்டியூர் நம்பி தொடர்புடைய நிகழ்வு எந்த விதமான சிந்தனையை நமக்குள் குறிப்பாக ஆசிரியர் மாணவர் சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது என்பதை மட்டும் ஆராய்வோம்.

- மாணவன் ஒரு உயர்ந்த பொருள் ஒருவரிடம் இருப்பதாக எண்ணினால் அதனைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அதில் உள்ள இடையூறு களை எண்ணி மனம் தளரக் கூடாது. 17 வது முறையே இராமாநுஜர் தமது முயற்சியை நிறுத்தியிருந்தால் இரண்டு இழப்புக்கள் நடந்திருக்கும்.
– உயர்வான அந்தப்பொருள் உலகோர்க்குக் கிடைத்திருக்காது.
– இதுவரை அதற்காக அவர் முயற்சித்தது வீணாகப் போயிருக்கும்.
ஒரு மாணவருக்கு ஆர்வமும் விடாமுயற்சியும் வேண்டும்.
இராமாநுசருக்கு அது இருந்தது. கற்றே ஆக வேண்டும் பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியும் விடாமுயற்சியும் இராமாநுசர் வாழ்நாள் முழுக்கக் காண லாம். இந்த உறுதிதான் தளர்ந்த வயதிலும் பல்லாயிரம் மைல் கடந்து நடந்து சென்று காஷ்மீரிலிருந்து சிறந்த நூலை (போதாயனவிருத்தியுரை) கொண்டு வர வைத்தது.
- இப்போது திருக்கோட்டியூர் நிகழ்வுக்கு வருவோம். ஆச்சாரியார் இதைச் சொன்னால் நரகத்துக்குப் போவாய் என்றார்.
அது மட்டுமில்லை.
குருவின் கட்டளையை மீறிய பழியும் சேரும். ஆனால், இராமாநுசர் நேர் மறை சிந்தனையோடு இதைச் சொன்னால் கேட்டவர்கள் சொர்க்கம் (மோட்சம்) செல்லலாமே என்று கருதினார். தான் மட்டும் நரகம் போகாமலிருப்பதா அல்லது எல்லோரையும் (ஆசாரியன் கட்டளையை மீறி – மந்திரத்தைச்சொல்லி) – சொர்க்கத்துக்கு அனுப்புவதா என்ற மனச் சிக்கல் எழுகிறது. ஆசாரிய தேவோ பவ என்பது அடிப்படையான சாத்திரம். (அதாவது குருவே தெய்வம்).
குருவின் ஆணையை மீறி எல்லோருக்கும் சொன்னால் சாத்திரத்தைப் பின்பற்றாத குறையும் பிழையும் வந்து சேரும் என்பது வேதம் படித்த இராமாநுஜருக்குத் தெரியும். ஆனால் இராமாநுசரின் மனிதாபிமான கருணை மனம் பிறருக்காக குருவையும் சாத்திரத்தையும் மீறும் முடிவை எடுக்கிறது. இந்த மனம் தான் இராமாநுசரை சமயவாதி என்ற தளத்திலிருந்து சமூக சிந்தனையாளராக உயர்த்துகிறது. சாத்திரத்தைப் பின்பற்றுவது குறையல்ல. பொது நன்மை ஏற்படுமானால் சாத்திரத்தைச் சற்று புறம் தள்ளுவது நெகிழ்வுறச்செய்வது தவறல்ல என்று சனாதனிகளுக்கு விளங்க வைத்தவர் இராமாநுஜர் தான்.
இழப்பு (தனக்கு) பேரிழப்பு (மக்களுக்கு) என்ற நிலையில் எதன் பக்கம் சாய்வது என்ற முடிவுக்கு அறிவாற்றலும் வேத ஞானமும் மட்டும் பயன்படாது.
- குருவின் ஆணையை மீறி விட்டார் இராமாநுஜர். திருக்கோட்டியூர் நம்பிக்குத் தெரிந்துவிட்டது. அவர் மனமும் நெகிழ்கிறது. தன் கட்டளையை மீறி விட்டானே என்று முதலில் கோபப்பட்டாலும், “உன் மனது எனக்கில்லையே… இறைவனான எம்பெருமானுக்கும் இல்லாத கருணை அல்லவா உனக்கு….. எனவே, இனி நீ எம்பெருமானார் என்றே அழைக்கப்படுவாய்” எனக் கொண்டாடுகிறார். முதலில் ஆசிரியரிடம் இராமாநுசர் பெற்றார். பெற்றதை மாணவராகிய இராமாநுசர் மற்றவர்க்குத் தந்தார். ஆசிரியரான திருக்கோட்டியூர் நம்பி சாத்திரத்தை விட உயிர்களை நேசிப்பது ஒரு படி உயர்ந்தது என்ற கருத்தை இராமாநுசரிடமிருந்து பெற்றார். ஒரு நல்ல விஷயத்தை சுயநலமோ உள்நோக்கமோ இன்றிச்செய்யும் போது ஆசிரியரும் மாணவர்களும் சமூகமும் என எல்லோருமே பெறுகிறோம்; யாரும் இழப்பதில்லை என்ற உண்மை இதன் மூலம் தெரிகிறது.
- இது ஒரு விபரீதமான சிந்தனைஇப்பொழுது சமூகத்தில் ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. உதாரணமாக நான் திருமண் அணிந்திருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் நீங்கள் பிஜேபியா என்று கேட்டார். இன்னொரு நண்பர் நீங்கள்…
- உறியடி ஏன்?(Uriyadi Thiruvizha-Krishna Jeyanthi)
கண்ணனின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் பெரியாழ்வார். கண்ணன் பிறந்த நாள் விழா நிகழ்வுகளை ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார் .கண்ணன் ஆயர்பாடியில் பிறந்தான் அல்லவா…. - சங்கடங்களில் இருந்து வெளியே வர… (How to overcome sorrows?)
(c) S.Gokulachari சங்கடங்களில் இருந்து வெளியே வர இதுவே சரியான வழி” நம் வாழ்வில் நாம் பல சமயம் கலங்குகிறோம். காரணமில்லாமல் மயங்குகிறோம். புலம்புகிறோம். யாரைத்தான்…


