புரட்டாசி III வாரம் ராசி பலன் – பகுதி – 2 Purattasi 3 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 2
(29.9.2021 முதல் 8.10.2021 வரை) Raasi – Palan – Astrology predictions for Zodiac Signs in Tamil – Purataasi 3 rd Week – October 2021
சிம்மம்
சாதகங்கள் : ராசியில் ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால் பணப் பிரச்சனை வராது. ஆறில் சனி ஆட்சி பெற்று குருவோடு இணைந்து இருப்பதால் சில நன்மைகளும் தீமைகளும் கலந்து கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆனால் தூக்கம் தொலையும். இவ்வாரம் வேலையில் நல்ல உற்சாக மனநிலை உண்டு. தொழில் வணிகம் எப்பொழுதும் போல ஏற்ற இறக்கம் இன்றி சுமுகமாக நடக்கும். சந்திரன் சாதகமாக இருப்பதால் கலைத்துறையினருக்கு சில வாய்ப்புக்கள் உண்டு. பயன்படுத்திக் கொள்ளவும். கவனம் தேவை: சிலர் மீது விசாரிக்காமல் கொண்ட தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும். அதிக அலைச்சல் நிச்சயம் உடல் உபாதை யைத் தரும். வேலை செய்யத் தூண்டும் கிரகநிலை, ஓய்வெடுக்கச் சொல்லாது. நீங்கள்தான் ஓய்வெடுத்து ஆரோக்கியத்தைக் காப் பாற்றிக் கொள்ள வேண்டும். 2 6 7 தேதிகளில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள் வரும்.தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. பரிகாரம் : சூரிய வழிபாடு பலன் அளிக்கும். காலை குளித்து ஓரிரு நிமிடம் சூரியனை வணங்குங்கள். இயன்றால் ஆதித்ய ஹிருதயம் பாரா யணம் செய்யலாம்.நன்மையே நடக்கும். ——————————————————————————————————–
கன்னி
சாதகங்கள்: ராசிநாதனான புதன் வக்ர கதியில் இருக்கிறார். அவரோடு சூரியன் செவ்வாய். சில தவிர்க்க முடியாத இடமாற்றம் ,பிரயாணம் இருக் கலாம். குருவின் பார்வை பலம் ராசியில் விழுவதால் கசப்பான துவக்கம் இனிப்பாக நிறைவேறும்.ஐந்தில் குரு, 2-ல் சுக்கிரன், மூன்றில் வெற்றி ஸ்தானத்தில் கேது போன்ற கிரகங்களில் அமைப்பு சாதகமாக இருக்கிறது. எனவே வருவாய் இனங்கள் சுமுக மாக இருக்கும். அவ்வப்பொழுது ஆன்மீக சிந்தனை எட்டிப்பார்க்க கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். சிறு முயற்சிகளில் வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு வெற்றியாகும். கவனம் தேவை : ராசிநாதன் வக்ர கதியில் இருப்பதால் இரட்டை சிந்தனைகள் தோன்றும். மாற்றி மாற்றிப் பேசும் நிலை ஏற்படும்.ஆரோக்கியம் சற்று பலவீனமாகும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். 3,4,5 மற்றும் 8 தேதிகளில் கவனம் தேவை. பரிகாரம் : புதனுக்குரிய தெய்வமான பெருமாள் சன்னதிக்கு தினமும் செல் லுங்கள். அங்கு “ஓம் நமோ நாராயணா” எட்டெழுத்து மந்திரத்தை கண்மூடி உச்சரியுங்கள். மனம் நிலைப்படும். வாழ்வு வசப்படும். ——————————————————————————————————–
துலாம்
சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிர பகவான் ராசியில் ஆட்சி நிலையில் அமர்ந் திருக்கிறார். இவ்வாரம், சுக்கிர பகவான் ஆட்சி நிலை, சகல வழிகளிலும் பொருளாதார நெருக்கடியைப் போக்கி, எல்லா விதத் திலும் தடை தாண்டிய வெற்றியைக் குறிக்கிறது. வருமானம் அதி கரிக்கும். அதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகள் நீங்கும். வெகுநாட்கள் தள்ளிப்போன மங்கல காரியங்கள் உறுதிப்படும். தொழில் வணிகங்கள் சிக்கல்களிலிருந்து விலகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். கவனம் தேவை: சில ஆரோக்கிய குறைவுகள் தலைதூக்கும். 4-ல் உள்ள சனி சில தொல்லைகளைக் குறிக்கும். வாக்குஸ்தான கேது, பேச்சினால் சில பிரச்சனைகளைக் கொடுக்கும். 6, 7 தேதிகளில் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்கவும். தந்தை வழி உறவு சிக்கல்கள், சகோதர வழி உறவு சிக்கல்கள்,பாகப் பிரிவினை போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும். பொறுமையோடு அணுகவும். பரிகாரம்: மகாலட்சுமியை விளக்கேற்றி வணங்கவும். வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட துன்பங்கள் விலகும். சந்தோஷங்கள் பெருகும். ——————————————————————————————————–
விருச்சிகம்
சாதகங்கள்: சந்திரன் நிலையைக் கணக்கில் கொண்டால், 4,5,6,7 தேதிகள் உங் களுக்கு மிக சாதகமாக இருக்கின்றன. மற்ற கிரகங்களும் ஓரளவு சாதக பலத்தில் சஞ்சரிக்கின்றன. குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் அவரால் ஏற்படும் இன்னல்கள் குறையும் .நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கூட்டுத் தொழில் சிக்கல்கள் விலகும். கணவன் மனைவி உறவுகள் சுமுகமாக இருக்கும். தொழில், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசாங்க உதவிகள் கிடைக்கும். வணிகம் பிரச்சினையின்றி இருக்கும். கவனம் தேவை: நீங்கள் எதிர்பார்க்காத செலவுகள் ஏற்படும். அதனால் கடன் வாங் கியோ, சேமிப்பிலிருந்து எடுத்தோ செலவு செய்து விடுவீர்கள். எனவே, பண விஷயங்களை பத்திரமாக கையாளுங்கள். லக்ன கேது ஏழில் ராகு என்பதால் பயணங்களில் கவனம் தேவை . பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கான ஸ்தோத்திரங்களை மாலையில் சொல்லுங்கள் .தெரியாவிட்டால் “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பரப் பிரம்மணே நமஹ” என்று மூன்று முறை சொல்லுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்.
புரட்டாசி III வாரம் இதன் முதல் (Part 1) பகுதியை படிக்க இங்கு கிளிக் செய்யவும். Purattasi 3 Week Raasi Palan – Part 1 – Zodiac Signs


