சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு “பாப விமோ சன ஏகாதசி” என்று பெயர். பாப விமோசன ஏகாதசியின் சிறப்பு என்ன என்று சொன்னால், நாம் தெரியாமல் செய்து விடும் சில பாவங்களால் துன்பப்படுகிறோம் . அந்தத் துன் பத்தை நீக்கிக் கொள்ளும் பிராயச்சித்தமாக பாபவிமோசன ஏகாதசி விளங்குகின்றது.
இதற்கு ஒரு அருமையான கதை சொல்லப்பட்டிருக்கிறது .
ஸ்யவன ரிஷி என்றொரு ரிஷி இருந்தார்.மிகச் சிறந்த தவ வலிமை மிகுந்தவர்.அவர் புதல்வன் மேதாவி முனிவர். இறைஞாநியான அவர் எந்தவிதமான மன சஞ்சலங்களுக்கும் இடம் தராமல், இறைவனுடைய திருவருளை வேண்டி மிக கடுமையான தவம் மேற்கொண்டிருந்தார். அவர் தவம் மேற் கொண்ட இடம் சைத்ர ரத் என்கின்ற வனம்.
இந்த வனம் மிக அழகான வனம் .எங்கு பார்த்தாலும் மலர்கள். எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள் .அழகான நீரோடைகள். ஒருபக்கம் குளிந்த காற்று வீசுகின்ற நீர் வீழ்ச்சிகள்.
வண்ணம் வாரி இறைத்தது போல எங்கு பார்த்தாலும் இயற்கையின் அழகுகள் கொட்டிக் கிடக்கும் வனத்திலே கந்தர்வ பெண்களும் தேவலோகப் பெண்களும் வந்து விளை யாடுவது வழக்கம்.
அப்படி ஒருமுறை, சில தேவலோகப் பெண்கள், இங்கே வந்து நீர்நிலைகளிலும் வனங்களிலும் இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மிகப்பெரிய ஒளியுடன் தவம் செய்து கொண்டிருந்த மேதாவி முனிவரைக் கண்டனர்.மிகவும் எளிமையாகவும், திடகாத்திரமாகவும் இருந்தவரை பார்த்த மஞ்சுகோஷ் என்பவள், (தேவலோகப் பெண்) இவர் மீது ஆசைப்பட்டாள் .
எப்படியாவது இந்த மேதாவி முனிவரை அடைய வேண்டும் என்று நினைத்தாள்.அவர் கவனத்தைக் கவர பல நடவடிக்கைகளை எடுத்தாள் . அவர் தவம் இருக்கக்கூடிய இடத்திற்கு பக்கத்திலேயே ஒரு சின்ன குடிசையை அமைத்து கொண்டு வீணையும் கையுமாக சதா பாடிக்கொண்டிருந்தாள்.
ஒரு நாள் மேதாவி முனிவர் தவம் கலைந்து இவளுடைய மதுரமான பாட்டைக் கேட்டு ம யங்கினார்.
தவம் கலைந்தது.
காமமும் மோகமும் கண் விழித்தது.
அதற்குப் பிறகு 57 ஆண்டுகள் இவர்கள் இருவரும் அங்கேயே வாழ்க்கை நடத்தினர்.
திடீரென்று மேதாவி முனிவருக்கு விழிப்பு நிலை வந்தது.
“ஐயோ பல ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்த தம் முடைய தவம் ஒரு சாதாரண விஷயத்துக்காகக் கரைந்து போய் விட்டதே” என்று வருந்தினார். இதற்கெல்லாம் கார ணமான மஞ்சு கோஷா என்கிற தேவலோகப் பெண்ணை சபிக்கத் தொடங்கினார்.
“நீ பைசாசமாக மாறுவாய்” என்று சபித்தார். முனிவர் சாபம் பலித்தது.
ஆனால், அதே சமயம் அவர் தவம் முற்றிலும் குறைந்து போய், உருக்குலைந்து போனார்.
அப்பொழுது மஞ்சுஷா தனக்கு சாப விமோசனம் தர வேண்டும் என்று கேட்க,” சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி அன்று முறையாக விரதம் இருந்து எம் பெருமானை வணங்கினால் உன்னுடைய பாவங்கள் தொலையும். நீ மறு படியும் உன்னுடைய பழைய உருவை அடைந்து தேவ லோகத்துக்குச் செல்லலாம் என்றார்.
தன்னுடைய தவம் குலைந்ததற்கும் பிராயச்சித்தமாக அதே ஏகாதசியை அனுஷ்டிக்க முடிவு செய்தார்.
பாவங்களால் ஏற்பட்ட இந்த இரண்டு நிலைகளும் இந்த ஏகாதசி விரதத்தால் மாறின. முனிவருக்கு பழைய தவ வலிமை கிடைத்தது. மஞ்சு கோஷா என்கிற தேவலோக பெண்ணும் சுய உருவத்தை அடைந்து தேவலோகத்தை அடைந்தாள்.
இப்படிப் பாபங்களை எல்லாம் நாசம் செய்யக்கூடிய இந்த ஏகாதசி, சித்திரை மாதம் தேய்பிறையில் வரக்கூடியது.பாப விமோசினி விரதம் மேற்கொள்வதன் பிரதான நோக்கமே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போக்குவது தான்.
மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் செய்கிறது .
எத்தகைய பாவங்கள் செய்தாலும் அதனுடைய விளைவுகள் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும்.
அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் இந்த ஏகாதசி அன்று. காலையில் விரதமிருந்து. பெருமாள் கோயிலுக்குச் சென்று, ,திருமாலை துளசியால் அர்ச் சனை செய்து, மறுநாள் காலை, சூரிய உதயத்திற்கு முன்னால், துவாதசி பாரணை செய்து, விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நாம் செய்த பாவங் கள் அனைத்தும் தீர்ந்து விடும் ,சுபிட்சமான நல்வாழ்க்கை கிடைக்கும்.
