By எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம்
இந்த உலகத்துக்கு கர்ம பூமி என்று பெயர்.
இங்கு எல்லாமே “காலம்”தான். அதனால்”காலம் நடையாடும் தேசம்” என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொரு விஷயமும் இங்கே காலத்திற்கு உட்பட்டது தான்.
பிறந்த நேரம் என்ற ஒரு நேரத்தில் ஆரம்பித்த ஜனனம், நிறைவு நேரத்தில் முடிவதுதான் ஒவ்வொரு ஜீவராசிக்கும் வாழ்க்கை.
எங்கிருந்து வந்தோம் என்பதை,பிறப்பு தீர்மானிக்கும்.
எப்படி வாழ்ந்து, எதை நோக்கிப் போகப் போகிறோம் என்பதை வாழும் முறை தீர்மானிக்கும்.
இதுதான் வாழ்க்கை
இங்கே ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கையும் காலங்கள் தரும் அனுப வங்களின் ஊடே பயணம் செய்கிறது.
பிறக்கிறான். அதுதான் ஆரம்பப்புள்ளி. 6 வயது வரை விளையாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.
பிறகு பள்ளிக்கூடம் போகின்றான். அங்கே ஒரு பத்து ஆண்டுகள் படிக் கின்றான். அதற்குப் பிறகு கல்லூரிக்குப் போகின்றான். அங்கே ஒரு ஐந்து ஆண்டுகள் படிக்கின்றான். பிறகு வேலைக்குப் போகின்றான். 25 லிருந்து 30 வயதிற்குள் அடுத்த கட்டம் துவங்கிவிடுகிறது. பெரும் பொறுப்பு வந்து விடுகிறது .திருமணம் செய்து கொள்கிறான்.
தன்னை படைத்தவர்களையும்(பெற்றோர்) தன்னால் படைக்கப்பட்டவர் களையும் அதாவது குழந்தைகளையும் உறவினர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை வந்துவிடுகிறது.
ஓடி ஓடி உழைக்கின்றான். 60 வயது ஆகிவிட்டது.
ஓய்வு பெறுகிறான். தளர்கிறான்.
வசந்த காலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்து விடுகிறது. இறங்க வேண்டிய இடத்தை நோக்கி வாழ்வுப் பயணம் விரைவாக சென்று கொண் டிருக்கிறது.
கூட்டி கழித்து பார்த்தால் இதுதான் வாழ்க்கை .
இதை அப்படியே பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்,
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு,
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே.
“காலம்தான்” இங்கு எல்லாம்.
இந்த வாழ்க்கையை நடத்தியும் கடத்தியும் சென்றது காலம்.சரித்திரத்தில் எத்தனையோ வீராதி வீரர்களையும் கொடுமையான மன்னர்களையும் குறித்துப் படிக்கிறோம். ஆனால் அவர்கள் காலத்தின் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.
ஒருவருடைய புகழைச் சொல்கின்ற பொழுதும், அவன் வாழ்ந்த காலம் “பொற்காலம்” என்று காலத்தின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது.
எனவே காலம் தான் இங்கு எல்லாம்.
அந்தக் காலக் கணிதம் தான் ஜோதிடம். இது பூமிக்கு மட்டுமே பொருந் தும்.
ஒருகால் மனிதன், சந்திரனிலும் செவ்வாயிலும் குடியேறினால், அங்கு வேறு ஜாதகம். வேறு கால கணிதங்கள்.
ஆக காலங்களில் யோக காலமாகவும், தோஷ காலமாகும் இருப்பதை அறிகின்றோம்.
உதாரணமாக, ஒருவருக்கு சுக்கிர தசை, யோக தசை என்று சொன்னால், இன்னொரு ஜாதகத்தில் அதே சுக்கிர தசை, அவருக்கு மாரக தசையாகவும் அமைவதைப் பார்க்கின்றோம்.
அவரவர் வினைகளின் தொகுப்பை திரட்டித் தருகின்றது ஜோதிடம்.
அதிலிருந்து என்னென்ன செய்யலாம், தோஷ காலத்தை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதை நுணுக்கமாகச் சொல்லித்தருகிறது .
உதாரணமாக வானியலில், கடுமையாக மழை வருவதை, மிக அடர்த் தியான மேகங்களும், நகர்வுகளும் காட்டுகின்றன. அந்த மழையை நம் மால் தடுக்க முடியாது. அது நிச்சயமாக பெய்யவே செய்யும்.
ஆனால், அதனை எதிர்கொள்ளும் திறனை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். நம்மை அதிகம் பாதிக்காத அளவுக்கு நாம் தயார் நிலையில் இருக்க முடியும்..
துன்ப காலத்தை எதிர்கொள்ள பொருட்களை சேகரித்துக் கொள்ளலாம் அதற்கு ஏற்ப உடைகளையும் மழைக்கால உடைகளையும் பொருட் களையும் தயார் செய்து கொள்ளலாம்.
