அபிராமி அந்தாதியில் மனதை உருகச் செய்யும் இந்த பாட்டு. தினசரி காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மனமுருகிச் சொன்னால், போதும்.இது அம்பிகைக்கான ஒரு பாட்டாக இருந்தாலும் கூட, எந்த இஷ்ட தெய்வத்தையும் இந்த மாதிரியான பக்தி செய்து வணங்கலாம் என்பதைக் காட்டுவது போல் அமைந்தது இந்தப் பாட்டு. இதை தினசரி காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மனமுருகிச் சொன்னால், போதும்.
பக்தி என்பதற்கு என்ன எடுத்துக்காட்டு என்பதை இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே
கண்ணியது உன்புகழ் என்கிறார். கண்ணியது என்றால் பாடியது என்று பொருள். நடக்கும் போதும், பேசும் போதும், இறைவனுடைய பெருமையையே பேசவேண்டும். கண்டவற்றைப் பேசுவதால் நமக்கு எந்த பலனும் இல்லை..வீண் வம்பு தான். இன்றைக்கு பலவிதமான பிரச்சனைகள் தேவையற்ற பேச்சுக்களால் தான் வருகின்றன. பேசுவதாக இருந்தால் இறைவன் புகழை பேச வேண்டும்.
கற்பது உன் நாமம். தினம்தினம் அவனுடைய திருநாமத்தைக் கற்க வேண்டும் என்பதால் அதை நிகழ் காலத்திலேயே பாடுகின்றார்.
கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில். தைல தாரைப் போல பக்தி என்று சொல்லுவார்கள் .ஒரு பானையில் நல்ல எண்ணெய் கட்டி உறியில் தொங்கவிட்டு பானையில் சிறிய ஓட்டையை போட்டால் அதில் தொடர்ந்து கோடு போல் எண்ணெய் இடைவிடாது வரும். இந்த பக்தியோடு ஒரு காரியத்தைச் செய்கின்ற பொழுது சாதம் பிரசாதம் ஆகிறது. பட்டினி விரதம் ஆகிறது. குடிக்கின்ற தண்ணீர் தீர்த்தம் ஆகிறது. பாடுகின்ற பாட்டு இன்னிசை ஆகின்றது. இதயமே கோயில் ஆகிறது. செய்கின்ற அத்தனை செயல்களும் தொண்டாகிறது இதற்குமேல் என்ன இருக்கின்றது? மனிதன் புனிதன் ஆகின்றான். அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாறுகின்றது. இதையெல்லாம் செய்யவேண்டுமென்றால் அதற்கும் அவளுடைய திருவருள் வேண்டும். நம்முடைய முன் வினைகள் உதவ வேண்டும். நாம் இவற்றையெல்லாம் செய்தால் புண்ணியம் செய்து இருக்கிறோம் என்று அர்த்தம். இல்லை என்றால் செய்யவில்லை என்று அர்த்தம். ஆக இதுவரை செய்யாததை வைத்துக்கொண்டு, புண்ணியம் செய்யவில்லை என்று முடிவு கட்டி விடலாம்.அப்படியானால் இனியாவது புண்ணியம் செய்ய தொடங்கலாமே..
