தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலி யப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள்.திருச்சி தாயுமா னேஸ்வரரின் அருளால் பிறந்த குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.திருச்சிராப்பள்ளியை ஆண்டுகொண்டிருந்த விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணிபுரிந்தவர். மிக எளிமையான ,வாழ்க்கை வாழத் தேவையான பல பாடல்களை எழுதியவர். தவநெறியில் சிறந்து விளங்கியவர். பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டவர். “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல் லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர் தாயுமானவ சுவாமிகள் .
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 56 தலைப் புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணி களாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய ‘பராபரக்கண்ணி’ மிகவும் புகழுடையது. இதில் 389 கண்ணிகள் இடம் பெற்றுள்ளன.பராபரக்கண்ணியில்,“அண்டகோடி புகழ்காவை வாழும் அகி லாண்ட நாயகி என் அம்மையே!” என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736-ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமி புரமாகும்.அவருடைய குரு பூஜை நாள் இன்றைய நாள்.
