12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ அந்த ராசி தான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது இதுவரை உத்திராயணத்தின் முதல் ராசியான மகர ராசியில் இருந்த சூரியன் இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி பகல் 11 மணி 9 நிமிடத்திற்கு கும்ப ராசியில் நுழைகின்றார் .கும்ப ராசியில் நுழைந்து சப்தம பறவையாக தன்னுடைய சொந்த ராசியான சிம்மத்தைப் பார்வையிடுவது என்பது சிறப்பு. அதே சிம்பத்தை குருவம் ஐந்தாம் பார்வையாகப் பார்வையிடுகின்றார்.இப்படி மாசியில் சூரியன் நுழையும் காலம் . விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம்ஆகும்..வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷூப் புண்ணியகாலமாகும்.அன்று முன்னோர்கள் வழிபாடு ,திதி கொடுப்பது ,குல தெய்வ வழிபாடு மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த புண்ணிய பலன் அளிக்கும் வல்லமை கொண்டது . விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும். பெருமாள் சந்நிதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடுவதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஊன் நேர் ஆக்கைதன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே! தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ!
என்ற பாசுரத்தை பாராயணம் செய்யவும்.
