பானு என்றால் சூரியன் என்று பொருள் சஷ்டி திதி எப்படி முருகனுக்கு உரியதோ, அதேபோல சப்தமி திதி சூரியனுக்கு உரியது. சூரியனுடைய கிழமையான ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி வந்தால் அந்த நாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். பொதுவாகவே காலை சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்வதும், சூரிய காயத்ரி சொல்வதும் மிகச் சிறப்பான ஆத்ம பலத்தைத் தரும். ஆரோக்கியத்தை வளர்க்கும். யோகா சன பயிற்சிகளிலே மிகவும் சிறந்த பயிற்சி சூரிய நமஸ்கார பயிற்சி என்று சொல்லுவார்கள் .அதிலும் பானு சப்தமி தினமன்று சூரிய வழிபாடு செய்வது மிகச் சிறப்பானது. அன்று மாலை சிவன் கோயிலுக்கோ, பெரு மாள் கோயிலுக்கு சென்று வலம் வர வேண்டும். சூரிய தசை அல்லது சூரிய புத்தி நடப்பவர்கள் அன்றைய தினம் காலை நீராடி சூரியனை வணங்கி பூஜையறையில் கொஞ்சம் கோதுமை பொங்கல் நிவேதனம் செய்து படைப்பது சாலச் சிறந்தது. இன்று சுவாதி நட்சத்திரமாக இருப் பதால் நரசிம்மரை வணங்க வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதாந்திர சுவாதி தின பெரியாழ்வார் புறப்பாடு இன்று நடைபெறும் சில ஆலயங் களில் பெரியாழ்வருக்கோ அல்லது கருடனுக்கோ அபிஷேகங்கள் நடை பெறுவதும் உண்டு .அதில் கலந்து கொள்வது நல்லது .
இன்று காலையில் சூரியனை நோக்கி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
இதை இன்று மட்டும் அல்லாது தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 27 முறை சொல் லவும். அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
