மேஷம்
சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் மிதுனத்தில் இருக்கிறார். 29ஆம் தேதி புதன் லாபஸ்தானத்திற்கு மாறுகின்றார். 29 தேதி சனி பெயர்ச்சியும் நடக்க இருக்கின்றது .சுக்கிரன் ராசியில் இருப்பதால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அன்யோனியம் அதிகரிக்கும். புதன் ராசியில் வந்து அமரும்போது சிறந்த யோகம் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த தொழில் தடங்கல்கள் நீங்கி லாபங்கள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் சேரும்.
கவனம் தேவை : வார ஆரம்பத்தில் சில கிரக பார்வைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனத்தோடு இருக்கவும். உடல் சோர்வு ஏற்படும். ஆரோக் கியமும் சற்று தளரும். கேது அவ்வப்பொழுது அமைதி இன்மையை ஏற்படுத்துவார். பிறர் சொல்லும் தவறான ஆலோசனையைக் கேட்டு நடக்கும் படி ஆகிவிடும் என்பதால் கவனம் தேவை..
பரிகாரம்: முருகப்பெருமானை தவறாது வணங்குங்கள். அவன் சிக் கல்களைக் களைந்து ,சிக்கல் இல்லாத நல் வாழ்வைத் தருவான்.
ரிஷப ராசி
சாதகங்கள்: சனி பகவான் வாரத்தின் மத்தியில் ராசி மாற்றம் அடைவது உங்களுக்குச் சாதகத்தை தரும். வேலை இழந்தவர்கள் திரும்பவும் வேலைக்கு அழைக்கப்படும் சூழ்நிலை வரும். ராசிநாதன் சுக்கிரன் விரயம் ஏறினாலும், லாபத்தை தருவான் .சுகாதிபதி சூரியன், 11ல் இருப்பதால் வணிக வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் அரசாங்க அனுகூலமும் உண்டு.புதன் சூரியனோடு இணைந்து இருக்கிறார்.ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.பத்திரிகை தொழில் நுட்பத்துறையினருக்கு சாதகமான நேரம். தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கவனம் இல்லாவிட்டால் நஷ்டங்கள் ஏற்படலாம் .அவசர முடிவுகளை செய்ய வேண்டாம். அதனால் நிம்மதி இழக்கும் நிலை வரும். வண்டி வாகனங்கள் பழுதாகும் என்பதால் அப்பொழுது சரி பார்த்து வைத்துக் கொள்ளவும்.
கவனம் தேவை : ராசிநாதன் சுக்கிர பகவான் பாம்பு கிரகமாகிய ராகுவோடு இணைந்து இருப்பது அவ்வளவு பலம் அல்ல. எனவே உங்கள் முயற்சிகள் இந்த வாரம் சில பின்னடைவுகளை சந்திக் கலாம் என்பதால் எச்சரிக்கையோடு இருக்கவும். மிகுந்த அலைச்சலும் பணிச் சுமையும் ஏற்படும். செவ்வாயின் சனியும் பார்வையால் இணைவதால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைதூக்கும். கடன் சுமை உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக் கலாம்..
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கும் முருகனுக்கும் மகாலட்சுமிக் கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள் மங்கலங்கள் உண்டாகும்.
மிதுனம்
சாதகங்கள்: ராசிநாதன் புதன் நீச பங்கம் பெறுகிறார்.குருவோடு இணைகிறார்.தடைகள் அகலும் வாரம் இது. சுப காரியங்கள் நிகழும் .பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அஷ்டமத்துச் சனியும் கிட்டத்தட்ட விலகி விட்டது. அதனால் கெடுபலன்கள் குறைந்து நிம்மதி பெருமூச்சு விடும் நிலை வந்திருக்கிறது. புதிய வாய்ப்புகள் இப்பொழுது வருவதால் அவற்றைக் கவனமாக கை கொள்ளுங்கள். உங்களைப் பற்றி தூற்றியவர்கள் இப்பொழுது போற்ற ஆரம்பித்து விடுவார்கள். தாமதமாகிய பணம் கைக்கு வந்து சேரும். புதன் உங்களுடைய 10வது ராசியில் நுழைவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கூட்டுத்தொழிலில் நன்மை உண்டு. சுக்கிரனுடைய பலத்தால் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்…
கவனம் தேவை: எக்காரணத்தை முன்னிட்டும் மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். மற்றவர்களைப் பற்றி தேவை யில்லாத கருத்துக்களைக் கூற வேண்டாம். வண்டி வாகனங்களை ஓட்டும்போது, மிகவும் எச்சரிக்கையோடு இருக்கவும். இரவு நேர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.குரு பத்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் புதிய முதலீடுகளை இப்போதைக்கு கொஞ்சம் தள்ளிப் போடவும் …
பரிகாரம்: நீத்தார் கடன் தவறாது நிறைவேற்றுங்கள். முன்னோர் களை நினைத்து கொள்ளுங்கள்.வாழ்க்கையில் வளமை நிச்சயம்.
கடக ராசி
சாதகங்கள்: வார மத்தியில் அதாவது 29ஆம் தேதி அஷ்டமத்தில் சனி நுழைகிறார். சனி அஷ்டமத்தில் நுழைவதால் சில தவிர்க்க முடியாத கஷ்டங்கள் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தொடங்கும் என்றாலும் கூட பெரிய பாதிப்புகள் வராது. முன்னெச் nசரிக்கையோடு மட்டும் இருங்கள். பெரும்பாலும் பணம் எதற்கு செலவழிக்க வேண்டுமோ அதற்கு மட்டும் செலவழிக்கவும். முக்கியமான காரியத்திற்காக வைத்திருந்த பணம் வேறு முக்கியம் இல்லாத காரியத்திற்கு கொடுத்துவிட்டு தடுமாறும் நிலை ஏற்படும். சுப விரயங்களைச் செய்யலாம் அதே சமயம் உங்களுக்கு ராகு 10-ஆம் இடத்தில் உதவும் நிலையில் இருப்பதால் அவரை பயன் படுத்திக் கொள்ளுங்கள்..
கவனம் தேவை: உறவு முறைகளில் மனக்கசப்பு வேண்டாம். கணவன் மனைவியை கருத்து வேறுபாடுகளை உங்கள் பேச்சுக்களால் அதிகரிக்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையோடு இருக்கவும் .அவசியம் ஏற்பட்டால் அன்றி கடன் வாங்காதீர்கள். இப்போதைக்கு தொழில் விரிவாக்கங்கள் வேண்டாம்…
பரிகாரம் : அஷ்டமி திதியில் கண்ணனையும் கால பைரவரையும் துர்க்கையையும் வணங்குங்கள். கருத்துத் தெளிவு ஏற்படும்.
சிம்மம்
சாதகங்கள்: குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும். தொல்லைகள் குறையும். இப்போதைக்கு நீங்கள் பொறுமையோடு எந்த காரியத்தையும் செய்வது நல்லது . வாரத்தின் மத்தியில் சனிபகவான் ஏழாம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் கண்டகச் சனியாக வரப்போகின்றார். உடனடியாக அவர் மிகப்பெரிய சிக்கல் எதையும் ஏற்படுத்துவதற்கு வழி இல்லை. ஆயினும் புதிய முயற்சிகளை தொடங்கும் போது கவனத்தை மாற்றாமல் நன்கு விசாரித்துவிட்டு காரியங்களில் இறங்கவும்.. வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் முயற்சி ஈடேறும். செவ்வாய் வலிமை அடைந்திருப்பதால் எதையும் துணிவோடு யோசிப்பீர்கள்.
கவனம் தேவை: யாரை நம்பியும் ஜாமீன் போட வேண்டாம். பத்திர பதிவுகளில் கவனம் தேவை .இப்போதைக்கு ஏழில் சனியும் எட்டில் குருவும் ஒன்பதில் ராகுவும் இருப்பதால் உங்களுக்கு குருவால் மிகப்பெரிய நன்மையைச் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.. ராகுவை நம்பி ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழக்காதீர்கள்..
பரிகாரம்: வியாழக்கிழமை குரு ராகவேந்திரரையும் தட்சிணாமூர்த் தியையும் வணங்குங்கள். குதுகலமான வாழ்வு கிடைக்கும்..
கன்னி
சாதகங்கள்: வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் மீன ராசியில் குருவோடு இணைந்து நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார். நல்ல சுறுசுறுப்பை கொடுப்பார். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக் குறையை அகற்றுவார். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும் பதவி உயர்வு வரலாம். சனி பகவான் வெற்றி பெறக்கூடிய ஆறாம் இடத்தில் ஆட்சி மூலத்திரிகோண பலத்தோடு சஞ்சரிக்கப் போகிறார். அதனால் அவர் உங்களுக்கு பலவிதமான நன்மைகளை உண்டாக்குவார் .. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். கணவன் மனைவி உறவுகளின் அன்னியோன்யம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உயர்வுகள் உண்டு. சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள் .
கவனம் தேவை: சில அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். ஏழாம் இடத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன், நட்பு வட்டாரத்திலும் குடும்பத்திலும் சில சலசலப்புகளை உண்டாக்குவார்.
சந்திராஷ்டமம்: 23.3.23 பிற்பகல் 2.08 முதல் 25.3.23 இரவு 7.25 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: புதன்கிழமை பெருமாள் கோயில் செல்லவும் லட்சுமி நரசிம்மரை அவசியம் வழிபடவும் நன்மைகள் நிச்சயம் உண்டு.
துலாம் ராசி
சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன் ராகுவோடு இணைந்து ராசியைப் பார்க்கிறார். சில நல்ல மாற்றங்களை அவர் தருவார். உறவுகள் ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பார்கள். உங்களுடைய தைரியம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் நல்லவிதமாக அமையும் .சனி செவ்வாய் பார்வை இணைப்பு என்பது உங்கள் தன்னம்பிக்கையை சற்று அசைக்கும். கவலை வேண்டாம். எதையும் நிதானத் துடன் செய்யப் பழகினால் இந்த பிரச்சனையைச் சமாளித்து விடலாம். நண்பர்கள் உதவுவார்கள் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புக் கள் அதிகரிக்கும்.
கவனம் தேவை: ஏழாம் இடத்திற்கு புதன் வார மத்தியில் வர இருக்கின்றார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் சற்று கவனமாக இல்லாவிட்டால் சறுக்கல்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம். .ஆரோக்கியத்தில் மட்டும் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் குறிப்பாக ஜீரண கோளாறு ஏற்படலாம்..
சந்திராஷ்டமம்: 25.3.23 பிற்பகல் 7.25 முதல் 28.3.23 காலை 4.25 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட வினைகள் மாறும்; குறைகள் தீரும்.
விருச்சிக ராசி
சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் எட்டாம் இடத்தில் இருக்கிறார். உங்கள் ராசியின் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். பொருளா தாரத்தில் எந்தவிதமான ஏற்ற இறக்கங்களும் இருக்காது .மன தைரியத்தை கைக்கொண்டு சில புதிய முயற்சிகள் செய்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் அன்பு பாராட்டுவார்கள். ஒத்துழைப் பார்கள். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். சேமிக்கத் தொடங் கும்படியான வருமானம் வரும். உங்கள் ஆறாம் இடத்திற்கு வரும் புதனால் சில நன்மைகள் உண்டு. உங்களுடைய கௌரவம் அதிகரிக்கும். மனக்கவலை மாறும். மகிழ்ச்சி கூடும்..
கவனம் தேவை:. ஆயினும் செவ்வாய் பார்வை இருப்பதால் வீடு இடம் தொடர்பான சொத்துக்களை கையாளும்போது கவனம் தேவை .பத்திரப்பதிவுகளின் போது படித்துப் பார்த்து கையெழுத்து போடவும் .ஜாமீன் கழித்து யாருக்கும் போட வேண்டாம்.
சந்திராஷ்டமம் : 28.3.2023 காலை 4.25 முதல் 30.3.23 பிற்பகல் 4.15 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: சப்த கன்னியர்களில் வாராகி அம்மனை வணங்குங்கள். பஞ்சமி பூஜையை செய்ய பற்பல நன்மைகள் உண்டு.
தனுசு ராசி
சாதகங்கள்: மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.உங்களுக்கு நன்மையை தரும் அமைப்பு ஒன்று உண்டென்றால் உங்கள் ராசிநாதன் நாலில் ஆட்சி பெற்றது. குரு வீடு வாகனங்களின் வகைகளில் நற்பலன்களைத் தருவார்.10ம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சியை நிச்சயமாக அதிகப் படுத்துவார். 10 க்குரிய புதன் நீசபங்கம் பெற்று குருவோடு இருப்பதால் வேலை உத்தியோகம் முதலியவற்றில் உயர்வை எதிர்பார்க்கலாம். அரசாங்க வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலம் இது..
கவனம்தேவை: ஏழரை சனியின் தாக்கம் முழுமையாக குறைந்து விட்டதாகக் கருத முடியாது. தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி பிரச்சினைகளில் சில பாதிப்புகள் வரும் வாய்ப்பு உண்டு. வாய் வார்த்தைகளை விட வேண்டாம். குரு 12ம் இடத்தைப் பார்ப்பதால் விரயத்தையும் அதிகப்படுத்துவார் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்தவும் ..
சந்திராஷ்டமம்: 30.3.23 பிற்பகல் 4.15 முதல் 2.4.23 காலை 4.48 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் தட்சிணாமூர்த்தி யையும் அம்பாளையும் வழிபடுங்கள் ஆனந்தம் கிடைக்கும்.
மகர ராசி
சாதகங்கள்: மகர ராசிக்கு உரிய சனி வழக்கம்போல பலமாகவே இருக்கின்றார். அவர் அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றாலும் அதுவும் அவருடைய ராசி என்பதால் அவருடைய பலம் குறையவில்லை. மேலும் அது மூலத்திரிகோண ராசி. மகர ராசிக்கு ஆறுக்கு உடைய புதன் வெற்றி தரும் ஸ்தானத்தில் குருவோடு சேர்ந்து இருக்கிறார்.நண்பர்களால் உதவி கிடைக்கும் .நான்கு , 11க்குரிய செவ்வாய் பலத்தோடு இருப்பதால் புதிய வாகன அமைப்பு, வீடு வாங்கும் அமைப்பு உண்டு. சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் அடைவதால் ஆரோக்கிய தெளிவு உண்டாகும். தெய்வீக விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ராசிநாதன் சனி தருவார் என்பதால் பயப்படத் தேவையில்லை..
கவனம் தேவை: எப்பொழுதும் சுறுசுறுப்பாக மனதை வைத்துக் கொள்ளுங்கள். நான்காம் இடத்தில் ராகு இருப்பது சற்று ஆரோக்கிய குறைவைக் காட்டுகிறது. வீண் விவாதங்களைச் செய்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள் ..
பரிகாரம்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரர் கோவிலுக் குச் சென்று அரை மணி நேரம் தியானத்தில் ஈடுபடுங்கள். மகான்க ளின் நினைவாலயங்களுக்குச் செல்வது மங்கலங்களைத் தரும்..
கும்பம்
சாதகங்கள்: கும்ப ராசிக்கு சப்தமாதிபதி சூரியன் உங்கள் தனஸ்தானத்தில் இருக்கிறார்.. ராசிநாதன் வலுப்பெற்று இருப்பதாலும் குரு இரண்டில் இருப்பதாலும் மனைவி மூலம் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்.உத்தியோகம் செய்யும் மனைவிக்கு பதவி உயர்வுகள் கிடைக்கலாம். ஐந்து எட்டுக்குரிய புதன் நீச்ச பங்கம் அடைந்து குருவோடு இருப்பதால் பணவரவுகள் அதிகரிக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவி உற்சாகம் என பல நன்மைகள் உண்டு. சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை அடைவதால் சகோதரர்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகள் சுபச் செய்திகள் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் ராகு இருக்கிற எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். மன தைரியம் பிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்..
கவனம் தேவை: வாரத்தின் மத்தியில் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசிக்குள் அதிசாரமாக நுழைகிறார். ஒன்பதில் கேது இருக்கிறார். பண விஷயங்களில் சிறு நெருக்கடிகள் உண்டாகும். அவசர முடிவுகளால் சில மனக்கசப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்..
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வேண்டிக் கொள் ளுங்கள். அவருடைய அருளும் ஆசியும் உங்களுக்கு தெளிவான நல்வாழ்க்கையைத் தரும்.
மீன ராசி
சாதகங்கள்: மீன ராசிக்குரிய குரு பகவான் மீன ராசியிலேயே இருக்கிறார். அவரோடு 4,7 க்குரிய புதன் இணைந்திருக்கிறார். சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார் .தனகிரகங்களான குருவும் சுக்கிரனும் பலமடைந்து இருக்கின்றனர். பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்காது . சேமிப்புக்களும் அதிகரிக்கும். புதன் நீச்ச பங்கம் அடைவதால் கணவனால் மனைவியும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டு..
கவனம் தேவை: கடன் சுமையும் தேவையற்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்வதும் கௌரவ குறைவும் ஏற்படலாம்.முகம் தெரியாத நபர்கள் சில தொல்லைகளைத் தரலாம் அதிர்ஷ்டங்களை நம்ப வேண்டாம். பணம் இழக்க நேரிடும். வாக்குஸ்தானத்தில் ராகு இருக்கிறார் .நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நிதானமாகப் பேசுங்கள். .
பரிகாரம்:. வியாழக்கிழமை பள்ளி கொண்ட பெருமாளை துளசி மாலை சாற்றி வணங்குங்கள். முடிந்தால் விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்..
.
