கேள்வி பதில் 1
கேள்வி:ஒருவர் ஜாதகத்தில் குறிப்பாக பலன் சொல்வதற்கு அடிப்படை எது?
பதில்:ஜாதகப் பலன்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. லக்னம் கொண்டு ஒருவருக்கு ஏற்படும் பாவப் பலனை அறிய வேண்டும்.ஜென்ம ஜாதகம் தான் ஒருவரின் வாழ்நாள் பலனைத் தீர்மானிப்பது.அவருக்காக அளந்து கொடுக்கப்பட்டது.
அந்தந்த தின வார மாத பலனை அறிய வேண்டுமானால் ராசியைக் கொண்டு கோள்சாரப் பலனை அறியுங்கள்.
ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்பவர்களும் ,நன்மையைத் தடுப்பவர்களும் உண்டு. சுபர் யார்,பாவர் யார்,பாதகாதிபதி யாரர்,யோகாதிபதி யார் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் ஜாதக பலனை தருவதும் மறுப்பதும் தீமையான பலன்களைத்தருவதும் இவர்கள் தான்.
தற்போது நடைபெறும் திசை புத்தி அந்தரங்களை கணக்கிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
லக்னத்திற்கு 5,9 ம் அதிபதிகள் பெரும்பாலும் யோகப்பலனேயே செய்வார்கள்.
லக்னத்திற்கு 3,6,8,12 அதிபதிகள் மறைவு மற்றும் எதிர்மறை இடங்கள் என்பதால் பொதுவாக தீமையான பலனையே தருவார்கள்.
1, 5,9 ல் சுப கிரகங்கள் இருப்பின் வலிமை.4,7,10 ல் பாவக் கிரகங்கள் இருப்பின் நற்பலனைச் செய்யும்.
கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நட்பு கேந்திர, திரிகோணங்கள் பெற்றால் நன்மை செய்யும்.
நீச்சம், அஸ்தமனம், வக்ரம், கிரகயுத்தம்,பாவகத்தரி அமைப்பு கெடுதல் செய்யும்.
சுப கிரகங்கள் கூடி நின்றால் நற்பலன் அதிகம்.
கெடு கிரகங்கள் கூடிநின்றால் பாதிப்பை அதிகம் செய்யும்.
நீச்ச கிரகம் வக்ரமானால் நற்பலனை தந்துவிடும்.
பாவக்கிரகங்கள் வக்ரமாகி எட்டில் நின்றால் மிகுந்த தீமை .
பாதகாதிபதி பலம் பெறக்கூடாது..
ஒரு ஜாதகத்தில் 5,9 ம் வலுத்தால் யோகம்.
1,4,7,10 வலுத்தால் உழைப்பும் வெற்றியும் கை கொடுக்கும்.
ராகு,கேது எந்த கிரகத்தோடு இணைகிறதோ அதன் பலனை பதம் பார்த்துவிடும்.எந்த பாவத்தில் அமர்கிறதோ அந்த பாவத்திற்கும் தோஷம்.
