(C) S.Gokulachari
12.8.23 – சனிக்கிழமை – தேய்பிறை ஏகாதசி
சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடி மாதம் ஆகும். அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமான ஆடி மாத ஏகாதசி விரதத் தால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும். முற் காலத்தில் ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்..அவர் நல்லவர்தான் என்றாலும் விதிவசத்தால் அவர் அறியாமலேயே ஒரு அந்தணரின் மரணத்திற்கு காரணமாகி விட்டார். இதனால் அந்த செல்வந்தருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. வீடு, செல்வம் அனைத்தையும் இழந்து துறவியாக சென்று காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ரிஷியிடம் தனது துன்பக் கதையைச் சொல்லி வருந்தி கண்ணீர் விட்டார்.,மனம் இளகிய முனிவர் ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பதன் மகிமையையும்,விரத முறைகளையும் எடுத்துக்கூறினார்.அதன்படியே அந்த செல்வந்தரும் செய்தார். ஏகா தசியின் பலனாக செல்வந்தரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. வறுமையும் விலகியது. செல்வந்தர் தான் இழந்த வீடு, குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றார். இந்த ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து , தாமரை பூ(வெண்தாமரைக்கு புண்டரீகம் என்று பெயர்.அது பெருமாளுக்கு விஷேஷம்..தாயார் இருக்கும் இடமல்லவா) சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து படையல் போட வேண்டும். தூப தீபங்கள் ஏற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். – காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன் தரும்.
எனினும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருந்தால் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பசு கன்று தானம் செய்த பலன். குருக்ஷேத்ராவில் கிரஹணம் போது ஸ்னானம் செய்தல், அஸ்வமேத யாகம், காசியில் கங்கா ஸ்னாநம் செய்தல், பத்ரி கேதார யாத்திரை செல்லல், பூமி தானம் செய்தல் ஆகியவற்றால் கிடைக்கும் புண்ணியம் இந்த காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கிடைக்க பெறுகிறார்கள்.
ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு யம பயம்(மரண பயம்) உண்டாகாது. மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்கப் பெறும்.பித்ரு தோஷங்கள் நீங்கும் .அன்று பாட வேண்டிய பாசுரம்.
தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே.
