இவ்வார கிரகநிலைகள்:
மேஷத்தில் குரு ,ராகு , கடகத்தில் சூரியன் , சிம்மத்தில் புதன் செவ்வாய்,சுக்கிரன் துலாத்தில் கேது, கும்பத்தில் சனி
மேஷம்
சாதகங்கள்: பாக்யாதிபதி குரு ஐந்து, ஏழு, ஒன்பது முதலிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். ஐந்தாம் இடத்தில் ராசி அதிபதி யோடு தனாதிபதி சேர்ந்து இருக்கிறார்.குரு பார்வை செய்கிறார். ஆறாம் இடத்து புதன் 6க்கு 12 ஐந்தில் வரும்போது பகை நீங்கும். வியாதிகள் கட்டுப்படும். உத்தியோகம் சிறக்கும். கடன் குறையும். ஏழில் கேது இருப்பினும் குரு பார்வையால் கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.. முயற்சி வெற்றி அடையும். மேலதிகாரிகள் உதவி செய்வார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். வணிகம் முன்போலவே நல்ல விதமாக நடக்கும். வெளியில் இருந்து நிதி உதவி கிடைத்து தொழிலை விஸ்தரிக் கலாம்.
கவனம் தேவை : சனி 11-ல் இருக்கிறார். அது லாப ஸ்தானம். ஆயினும் பாதகஸ்தானம். எனவே வருவது போல் வந்து சில சங் கடங்களைத் தரும். நிதானமும் பொறுமையும் அவசியம். இப் பொழுது தொழில் விஸ்தரிப்பு வேண்டாம். சுபத் தடைகள் உண்டு. காரணம் ராகு குரு இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள் .நாம் ஒன்று நினைத்தால் வேறொன்று நடக்கும் வாய்ப்பினை இவர்கள் தந்து விடுவார்கள். தேவையற்ற அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: அருகில் இருக்கக்கூடிய முருகன் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் அல்லது வீட்டில் மாலையில் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். “ஓம் சரவணபவ” என்கிற மந்திரத்தை கண்ணை மூடி 27 முறை உள்முகமாக முருகனை நினைத்துச் சொல்லுங்கள்.
ரிஷப ராசி
சாதகங்கள்: கேந்திரத்தில் ராசிநாதன் குரு பார்வையோடு இருக்கிறார். இரண்டுக்குரிய புதன் அவர்களோடு இருக்கிறார். செவ்வாயும் சேர்ந்திருக்கிறார். பொருள் வரத்து அதிகரிக்கும். நிதிச் சுமை குறையும். ஏழுக்கு உரியவன் குரு பார்வை பெற்றிருப்பதால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கும். பத்தில்தொழில் காரகன் சனி ஆட்சியாக இருக்கிறார். எனவே இதுவரை இருந்த சிறு சிறு தொழில் சங்கடங்கள் இனி நீங்கிவிடும். புதிய வாய்ப்புகள் புலப்படும். கேது ஆறில் இருக்கிறார். அது நல்ல இடம்தான் . பக்தி கூடும். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும். வேலை அற்றவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை : ஐந்துக்குரியவன் நாலில் இருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். நினைத்த பல விஷயங்கள் செய்ய முடியாது. திட்டமிடா விட்டால் அவஸ்தை தான். குருவும் ராகுவும் சேர்ந்து விரயத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பை, மாதவிடாய், முட்டி வலி முதலிய பிரச்சனைகள் அதிகரிக்கும்.. சனி செவ்வாய், சனி சுக்கிரன் பார்வையால் வைத் தியச் செலவுகள் அதிகரிக்கும். சுப காரியங்களில் தடையும் குழப்பமும் ஏற்படும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடும்,பிதுர் (முன்னோர்)வழிபாடும் விட வேண்டாம். சிறு உயிரினங்களுக்கு உணவு தந்து வாருங்கள்.
மிதுனம்
சாதகங்கள்: 6க்கு உரிய செவ்வாய் நீசம் நீங்கி சிம்மத்தில் இருப்பதும் அதற்குரிய சூரியன் குருவுக்கு கேந்திரத்தில் தனஸ் தானத்தில் இருப்பதும் சிறப்பு. புதிய உத்வேகம், தைரியம் பிறக்கும். உங்களைத் தேடி சில நல்ல வாய்ப்புகள் வரும் .பழைய கசப்பான அனுபவங்களில் இருந்து ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும். புத்தி கூர்மையாகச் செயல்படும். நிதானமாய் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் பல கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றன. சுப காரியங்களில் இருக்கும் சிக்கல் விலகும். கல்யாண ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. பணவசதி நன்றாகவே இருக்கும். சிலருக்கு சந்ததி விருத்தி உண்டாகும். வீடு கட்டும் வாய்ப்பும், புதிய வீட்டுக்கு குடி போகும் வாய்ப்பும் உண்டு.
கவனம் தேவை: ஐந்தில் கேது இருப்பதால் சொந்த இடத்தில் சில பிரச்சனைகள் வரலாம். குழந்தைகளின் செயல்கள் அதிருப்தியும் கவலையும் தரலாம்.புத்தி கூர்மையாக வேலை செய்தாலும் சில அவசர முடிவுகளை எடுக்க வைத்து விடும். எச்சரிக்கையோடு அணுகவும். சனி வக்ரமாக இருந்து செவ்வாயைப் பார்க்கிறார். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதற்கும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்..
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடும் ஸ்தோத்திர பாடல்கள் பாராயணமும் மனக்கவலையை நீக்கும். ஆறுதலைத் தரும். கன்றுடன் கூடிய பசுவை வலம் வந்து வணங்கி, பழமோ கீரையோ தாருங்கள்.
கடக ராசி
சாதகங்கள்: தன குடும்ப காரகன் சூரியன் ராசியிலேயே இருக் கிறார். குருவுக்கு கேந்திரம். இரண்டில் உள்ள கிரகங்களுக்கு குரு பார்வை கிடைக்கிறது. கணவன் மனைவி குடும்ப உறவுகள் நல்ல படியாக இருக்கும். 4 ,5க் குரிய கிரகங்கள் கூடி நின்று குரு பார்வை பெறுவதால் புதிய ஆடை ஆபரணம் வாங்குவதும், சொந்த ஊர் பிரயாணம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதும் நடைபெறும். புதிய வீடு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது வீடு வாங்குவீர்கள் நல்ல காரியங்கள் நடக்கும். பண விஷயமும் பெரிய அளவில் பாதிக்காது. சுக்கிர குரு இணைப்பு பலம் என்பதால் ஏதோ ஒரு உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்.. உங்கள் முடிவுதான் முடிவானது.
கவனம் தேவை: பிறர் சொல்லும் நல்ல விஷயங்களை காது கொடுத்துக் கேளுங்கள். ஆலோசனை செய்யுங்கள். பெண்களுக்கு மனதில் ஒரு பயமும் சோகமும் தலை தூக்கி இருக்கும். கற்பனையான சில சங்கடங்கள் அலைகழிக்கும். ஏழுக்குரிய சனி எட்டில் வக்கிரத்தை அடைந்திருக்கிறார். இரண்டில் உள்ள செவ் வாயை அவர் பார்க்கிறார்.பொறுமைதான் முக்கியம்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் ஆசியும் முக் கியம். இயன்றால் வெள்ளிக்கிழமை ஒரு சுமங்கலிக்கு ஜாக்கெட் , வளையல், குங்குமம் முதலிய மங்லப் பொருட்களைத் தாருங்கள்.
சிம்மம்
சாதகங்கள்: ராசிநாதன் 12ல் நிற்பது ஒரு பலவீனம் தான். ஆயினும் ராசியில் உள்ள கிரக பலத்தாலும் ராசிக்கு குரு பார்வையும் கிடைப்பதாலும் ராசி வலிமை பெறுகிறது. பெரிய தீமை எதுவும் வராது. குடும்ப உறவுகள் நல்லபடியாக இருக்கும். பாக்கிய குருவின் பார்வை மூன்றில் விழுவதால் தைரியம் கூடும். எதையும் எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். மூன்றில் உள்ள கேது ஸ்தான பலத்தால் சில பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பத்திரிகை தொழில் நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.. வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். உடல் பாதிப்பு குறையும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கவனம் தேவை: ஏழில் சனி இருப்பதும் அவர் ராசியைப் பார்ப் பதும் நட்பு வட்டாரத்தில் சில தவறான கருத்துக்கள் தோன்றி பெயர் கெடும். பாகஸ்தர்கள் பிரச்சனை தருவார்கள் . கணவன் மனைவி தவறான புரிதல் வேண்டாம். மென்மையாக பேசித் தீர்த்துக் கொள் ளவும். அலைச்சல் வேண்டாம். தேவையில்லாத செயலையும் செய்து பாதிப்பு அடையும் வாய்ப்பு உண்டு. .
பரிகாரம்:காலையில் அருகில் உள்ள சிவாலயம் சென்று “ஓம் நமச் சிவாய” மந்திரத்தை 108 முறை உள்முகமாக தியானியுங்கள். முடிந் தால் ஆதித்ய ஹிருதயம் காலை வேளையில் பாராயணம் செய் வது அற்புதமான பலன்களைத் தரும்…
கன்னி
சாதகங்கள்: ராசி அதிபதி புதன் 10க்கு உரியவர்.குரு பலம் பெற்று தன குடும்ப அதிபதியோடு குடியிருப்பது சிறப்பு. ஆறில் சனி பலமடைந்து இருக்கிறார். ஆறாம் இடத்தை கூட்டு கிரகங்கள் பார்ப்பதாலும், குரு பார்வை பெற்றுப் பார்ப்பதாலும் நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். சிக்கலை பொருட்படுத்தி பெரிது படுத்த வேண்டாம். வருமானம் நன்றாக இருக்கும். சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் எதிர்பாராத அதிர்ஷ்டச் செய்திகளும் வரும். கணவன் மனைவி அந்யோன்யம் நன்றாக இருக்கும்.
கவனம் தேவை: இரண்டில் கேது இருப்பதால் வார்த்தைகளை அளந்து பேசுங்கள். மேலதிகாரிகளோடு உரசல் வேண்டாம். நாலுக்குரிய குரு எட்டில் ராகுவோடு இருப்பதால் திடீர் கஷ்டங்கள் வரும். உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உண்டு. அவைகள் தற்காலிகமானது தான் .பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் நரம்பு கோளாறுகள் அதிகரித்து தொந்தரவு செய்யும் .உணவு மற்றும் மருத்துவம் இரண்டிலும் கவனம் தேவை.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். இராமநாமத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜபியுங்கள்.நன்மையே நடக்கும்.
துலாம் ராசி
சாதகங்கள்: குரு ராசியைப் பார்ப்பதும், ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தைப் பார்ப்பதும் அங்கே கிரகங்கள் வலு இருப்பதும் மிக நன்மையான பலன்களைத் தரும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நற்சிந்தனை அதிகரிக்கும். செயலூக்கம் பிறக்கும். தன்னம்பிக்கையுடன் எந்தச் செயல்களையும் முடிப்பீர்கள். முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரிய முயற்சிகள் வெற்றி அடையும். புத்தியைக் கூர்மையாக்கி நிதானத்தோடு பிரச்சனையை அணுகுங்கள். தெளிவாகும். எந்த சிக்கலுக்கும் விடைகள் கிடைக் கும்..
கவனம் தேவை: சனியின் வக்கிரகதி உடல் உபாதைகளைத் தரும். கவனம் சிதறினால் தொழிலில் நஷ்டம் ஏற்படும். வழுக்கு பாறையில் நடப்பது போல் தான் என்பதை மறந்து விடாதீர்கள் .வணிகத்தில் சற்று தளர்ச்சி ஏற்படும். தாமதங்கள் வரும். அவசரப் பேச்சாலும் தவறானப் புரிதலாலும் சில வாய்ப்புகள் நழுவும். வாக் குறுதி கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம் : 9.8.23 காலை 7.42 முதல் 11.8.23 மாலை 4.58 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்றும் சனிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் ஒரு அர்ச்சனை செய்து வாருங்கள். அல்லதுவிளக்கு போடுங்கள். முடிந்தால் ஏழை முதிய வர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்..
விருச்சிக ராசி
சாதகங்கள்: கேது உங்கள் விரைய ஸ்தானத்தை விட்டு லாப ஸ்தானத்தை நோக்கி நகர்வது நல்ல பலன்களைத் தரும். தேவையற்ற செலவுகள் குறையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குருவின் பார்வையில் தொழில் வணிக அபிவிருத்தி நிகழும். பாக்கியஸ்தானத்தில் தொழில் காரகன் குருவுக்கு நாலில் இருப் பதும் நல்ல அமைப்பு. குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழி பாடு நிறைவேறும். ஏழாமாதி சுக்கிரனை குரு பார்ப்பதாலும் அவர் ராசிநாதனோடு இருப்பதாலும் கணவன் மனைவி அன்பு அதிகரிக் கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.. பதவி உயர்வு, ஊதிய உயர்வு சனி வக்ர கதியால் சாத்தியம்.
கவனம் தேவை:. தாய் வழி உறவினர்கள் சில தவிர்க்க முடியாத சங்கடங்களைத் தருவார்கள். சில முயற்சிகளில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்து பிரச்சனை முளைக்கும். கிடைக்க வேண்டிய உத விகள் கிடைப்பதில் தாமதமாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தள்ளிப்போகும். கடன் வாங்குவதில் சிக்கலும் கவலையும் அதிகரிக்கும்..
சந்திராஷ்டமம் : 11.8.23 மாலை 4.58 முதல், 14.8.23 அதிகாலை 4.25 வரை சந்திராஷ்டமம் உண்டு.. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: வாயில்லா ஜீவன்களுக்கு ஏதேனும் உணவை அளியுங் கள். யாசகர்களுக்கு ஒரு வேளை உணவு பொட்டணம் வாங்கித் தாருங்கள். மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள்…
தனுசு ராசி
சாதகங்கள்: சனி மூன்றில் வக்கிரகதி எனினும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் துணை நிற்கும். உங்களுக்கு ஆறு தலாக இருக்கும். அதற்கு குரு பார்வை கூடுதல் பலம். குடும்ப சிக் கல் அகலும். உற்சாகம் அதிகரிக்கும். திருப்தி தரும் செய்திகள் வரும். சில இனிய பிரயானங்களும் திருத்தல தரிசனமும் நிகழும். குல தெய்வ இஷ்ட தெய்வ வழிபாடுகள் செய்ய முடியும். வருமானம் சீராக இருக்கும். குழந்தைகள் படிப்பு,பூர்வீகம் போன்ற நல்ல சாதகமாக விஷயங்கள் நடைபெறும்… குடும்பத்தில் புதிய வரவுக்கான சூழல் உண்டு….
கவனம்தேவை: ஏழரை சனி விலகினாலும் வக்கிரகதி அடைவதால் சிறு பின்னடைவுகள் இருக்கத்தான் செய்யும். சில தீர்மானங்கள் திட் டங்கள் போன்றவை மாறும். விரும்பியபடி பூரணமாக நடக்காது .தடங்கலை ஏற்படுத்தவே செய்யும். ஐந்தில் உள்ள ராகு சனி பார்வை இணைப்பு சிக்கலை அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் அணு குங்கள் .
சந்திராஷ்டமம்: 14.8.23 அதிகாலை 4.25 முதல் 16.8.23 மாலை 4.57 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச் சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண் டாம்
பரிகாரம்: சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் போடுங்கள். அனு மான் கோயிலுக்கும் திருமால் கோயிலுக்கும் செல்லுங்கள். அனு மன் சாலிசா படியுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த அனுமன் பாடலை வாய் விட்டுச் சொல்லுங்கள்..
மகர ராசி
சாதகங்கள்: கேந்திரத்தில் குரு இருக்கிறார். அஷ்டமாதிபதி சூரியன் அஷ்டமத்திற்கு விரையம் ஏறி இருக்கிறார். எனவே கஷ்டங்கள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. சற்று நிதானம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும். அலுவலகத்தில் நல்ல பெயர், கௌரவம் அதிகரிக்கும். பொது சேவைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய கடன் சுமை சற்று குறையும். குடும்பத்தில் அமைதியும் ஆதரவும் உண்டு. சுப காரியங்களுக்கான வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் திருப்தியாகவே இருக்கிறது.
கவனம் தேவை: நெருங்கிய உறவுகளால் சிக்கல் மற்றும் மன வருத்தம் நிகழும் சிறு சம்பவங்கள் நிகழலாம் .அசதியும் வேலைச் சுமையும் அதிகரிக்கும். மன உளைச்சல் கூடும். கலை துறையின் வாய்ப்பு பெருக சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கும்.. சேமிப்பும் சிக்கனமும் அவசியம். புதிய திட்டங்களை தள்ளி வையுங்கள்.
சந்திராஷ்டமம்: 16.8.23 மாலை 4.57 முதல், 19.8.23 காலை 5.40 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். இயன்ற அளவு மௌனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர் பெருமானை தீபம் ஏற்றி வணங் குங்கள். சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சனேயரை வணங்குங்கள் . நல்ல எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
கும்பம்
சாதகங்கள்: சனி ராசியில் இருப்பினும் ஆட்சி விடு என்பதால் சிரமங்கள் சற்று குறைக்கவே செய்வார். மூன்றில் உள்ள ராகு உங்களுக்கு மன தைரியத்தையும் நல்ல வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். சப்தமராசி வலுவோடு இருப்பதால் கணவன் மனைவி உறவுகள், குடும்ப நிம்மதி குறையாமல் இருக்கும். செயல் ஊக்கம் அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையோடு நடந்து கொள்வார்கள்..மன தைரியம் உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும். சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் கலைஞர்களுக்கு ஆதரவு உண்டு. புதிய வாய்ப்பும் உண்டு. மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
கவனம் தேவை: ராசியில் சனி இருப்பதால் எதுவும் சற்று தாமதம் தரும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி தளரச் செய்யும். செலவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும். செவ்வாய் சனி இணைப்பும், சனி சுக்கிரனுடைய இணைப்பும் சிறு சச்சரவுக்கான சூழ்நிலையை உண்டாக்கும். சிரித்துக் கொண்டே கடந்து செல் லுங்கள்.
பரிகாரம்: குலதெய்வ கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் அல்லது வீட்டிலேயே தினம் சில நிமிடம் பூஜையில் குல தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த மகா னின் படம் எப்பொழுதும் உங்கள் பாக்கெட்டில் அல்லது கைப் பையில் இருக்கட்டும்.
மீன ராசி
சாதகங்கள்: ராசிநாதன் நல்லபடியாக இருக்கிறார்.6, 8, 10 ராசி களைப் பார்க்கிறார். வேலை உத்தியோகம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் நடைபெறும் .தொழிலில் கௌரவம், லாபம் கிடைக்கும். எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் . பணவரவு திருப்தியாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக் கியத்தில் அபிவிருத்தி உண்டு. குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிறைவாக இருக்கும். வெளிநாட்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு .
கவனம் தேவை: ஆனால் ஆறாம் இடம், எட்டாம் இடம் வலுப்பெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் தேவை என்பதை மறந்து விட வேண்டாம். தேவையற்ற பேச்சுக்கள் பகையை வரவழைக்கும். கடன்களில் கவனம் இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரும். ஏற்கனவே சட்டப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நிலைமை சற்று பின்னடைவு தரும். நிதானம் வேண்டும். சனி வக்கிரகதியால் தொழிலில் கவனம் சிதறும். எந்த விஷயத்திலும் குறுக்கு வழிகளைக் கையாளாதீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முன் சில நிமி டங்கள் தியானம் செய்யுங்கள். தெருவில் எதிர் படும் பிராணிகளுக் கும் பறவைகளுக்கும் உணவளியுங்கள் .
