பதில் :எழுத்துக்கள் எதை நோக்கமாகக் கொண்டு, எந்த வரிசையில் அமைத்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்கள் அமைந்த வரிசையை உற்று நோக்குகின்ற பொழுது அதில் ஏதேனும் ஒரு தத்துவமோ வாழ்வியல் செய்தியோ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதை ஓஷோ விளக்குகிறார்.
ஆங்கில அகர வரிசையைக் கற்றுக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் முதல் குழந்தை தன் நண்பனைப் பார்த்துக் கேட்டது.” ஏன் B என்ற எழுத்து எப்பொழுதும் C என்ற எழுத்துக்கு முன்னால் வருகிறது?” நீ இருந்தால்(be) தானே எதையும் பார்க்க(see) முடியும். முதலில் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் எழுத்து உச்சரிப்பு B(be) அப்பொழுதுதான் நீ பார்க்க முடியும் எனபதைக் குறிப்பிடும் எழுத்து C(see) .அதனால்தான் C என்ற எழுத்து Bக்கு பிறகு வருகிறது. தமிழிலும் அப்படித்தான். வாயை மெல்லத் திறக் கிறோம். “அ” பிறக்கிறது.அதையே சற்று விரிவுபடுத்தி அகலமாக்கினால் “ஆ” வருகிறது.மெலிந்த புன்னகை “இ” ஆகிறது.புன்னகை இன்னும் விரிந்தால் “ஈ” ஆகிறது.
