ஆலினிலையாய்… – Aalilai krishnan – ஆலிலைக் கண்ணன்
-கு.அரங்கநாதாச்சாரியார்
திருப்பாவை (Thirupaavai) இருபத்தாறாம் பாசுரம், பாவை நோன்பிற்குத் தேவையானவற்றைக் கேட்கும் பாசுரமாக அமைந்துள்ளது. அவற்றை நல்கும் கண்ணபிரானை ஆலினிலையாய் என ஆண்டாள் அழைக்கின்றாள். ஆயிரக்கணக்கான நாமங்களிலே ஆலினிலையாய் என்பதும் ஒன்றாக, சிறப்புடையதாகத் திகழ்கிறது. இந்நாமத்தின் சிறப்பான பொருளைச் சிந்திப்போம்.
ஆலினிலையாய் எனும் சொற்றொடர் இருவகையாகப் பிரித்துப் பொருள் காணலாம். ஆலின் இலையாய் எனவும் ஆலின் நிலையாய் எனவும் பொருள் பெறப்படும்.
ஊழிக்காலத்தில் எங்கும் பிரளயம் நேருங்காலை எம்பெருமான் உயிர் உள்ளன, அல்லன ஆகிய அனைத்தையும் தன் வயிற்றில் கொண்டு ஆலின் இலை மேல் பள்ளி கொள்கின்றான். இதைத்தான், ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவணையான் என்பர் திருப்பாண்பெருமாள். ஊழிக்காலத்தும் நிலைபெற்றிருப்பது ஆலமரம் என்பதும் அறியப்படுகிறது. முதலில் ஆலமரத்தின் இயல்பைப் பார்ப்போம்.
தெள்ளிய ஆலின் சிறுபழத்தொரு விதை
தெண்ணீர் கயத்துட் சிறுமீன் சினையிறும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
மண்ணர்க் கிருக்க நிழலாகும்மே.
என்னும் இப்பாடல் அந்நாளில் தொடக்க வகுப்புகளிலே சொல்லிக் கொடுக்கப்பெற்ற பாடல். ஆலமரமோ மிகப் பெரியது. அதன் பழமோ மிகச் சிறியது. அப்பழத்துள் எண்ணற்ற விதைகள் உள்ளன. அவ்விதைகளுள் ஒன்று பூமியில் ஊன்றப்பட்டு முளைத்து மரமாகிறது. பல்வேறு கிளைகளாகக் கிளைத்து பரந்து நிழல் தருகின்றது.மற்ற மரங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை இவ்வாலமரத்திற்கு உண்டு. கிளைகளிலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி வளர்ந்து தரையில் ஆழ்ந்து அவையே மரமாக வளர்கின்றன. இங்ஙனம் பெரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சிறிய விதை வளர்ந்து எவ்வளவு அரிய பெரிய செயல்களால் பலர்க்கும் பயன்படுகிறது. எத்துணை பறவைகள் வாழ்விடமாக ஆலமரம் திகழ்கிறது. மரத்தின் நிழல் வெப்பத்தை வெளிப்படுத்தாத நிழலன்றோ! அதனால்தான் மன்னரும் பெரும்படையுடன் தங்குமிடமாகின்றது.
ஆல இலைகளைப் பறித்துத் தைத்து உண்கலமாகப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாலிலைபோல் எல்லோர்க்கும் எல்லாவற்றிற்கும் பயன்படும்படியாக எம்பெருமான் திகழ்கின்றான்.
கண்ணிற்குப் புலப்படும் சரீரத்துள் மிகச்சிறிய அளவில் ஆத்மா உள்ளது. அவ்வாத்மாவினுள்ளும் மிகமிகச் சிறியதாகப் பரமாத்மா உள்ளான். மிகச்சிறிய விதை. வேர்விட்டு மிகப் பெரிய இடத்தைக் கொள்வது போல எம்பெருமான் மிகச்சிறிய தோற்றத்தைக் கொண்டு அண்ட சராசரங்களைப் படைத்துக் காக்கின்றான். கிளைகளே விழுதுகளால் வேர் கொண்டு மேலும் மரமாவது போல எம்பெருமான் இப்பூமியில் கோயில்களென்ன, மடங்களென்ன, வீடுகளென்ன இங்ஙனம் பரந்து அருள் என்னும் நிழல் தந்து வாழ்விக்கின்றான். ஆலமரமோ நாம் காணும்படியாகப் பெரும் பரப்பைக் கைக்கொள்கிறது.
எம்பெருமானோ கண்ணால் காண இயலா நிலையில் எங்கும் பரந்துள்ளான். வெப்பந்தணிக்கும் இடமாக ஆலமரம் இருப்பதுபோல் நம் பிறவி வெப்பம் தணிய எம்பெருமான் எனும் மரம் நமக்கு வாய்த்துள்ளது. ஆல இலைகள் உண்கலமாகப் பயன்படல் போல, அவனே நமக்கு உண்கலமாக அல்லது நாமே அவனுக்கு உண்கலமாக உள்ளோம் என்பதைத்தான் வேதமும் விளம்புகிறது. அகமன்னம் அகமன்னாதோ என மறை வெளிப்படுத்துகின்றது.
ஆலவிதை சிறியதாயினும் எத்துணை பெரிய தன்மையைக் கொண்டதுபோல, எம்பெருமான் நுண்ணிய தன்மை கொண்ட போதிலும், அண்ட சராசரங்களாய் விரிந்து காண்கின்றான். விதை வளர்ந்து மரமானபின் அம்மரத்தில் விதை தோன்றுவது போல எம் பெருமான் எங்கும் தோன்றுகிறான். உவமை என்பது ஒரு புடை தான் பொருந்தும். ஆலமரம் வெப்பத்தைத் தணிக்கும். வாழ இடந்தரும். எம்பெருமான் பிறவி வெப்பத்தைத் தணித்து நிலையான வாழ்விடத்தைத் தருபவன். பூமியில் உள்ள ஆலவிதை கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல எம்பெருமான் கரந்தெங்கும் பரந்துளன். ஆலமரம் நிழல் தரும். எண்ணற்ற உயிர்கள் வாழ இடந்தரும் எம்பெருமானும் பலரும், பலவும் வாழ எண்ணற்ற அண்டங்களை உருவாக்கியுள்ளான். இங்ஙனம் எம்பெருமான் வாழ்விற்கு ஆதாரமாகவும், வாழ்வாகவும் உள்ளான் என்பனவற்றை ஆலினி லையாய் எனும் தொடர் உணர்த்துகின்றது என உணர்வோம்.
பவள வண்ணனும் – பச்சை வண்ணனும் Pachai vanna perumal படிக்க இங்கு கிளிக் செய்யவும்
———————————————————————————————————————————————————–
முதலாழ்வார் – Mudhalazhwargal
– கு அரங்கநாதன், காரைக்கால்.
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயமிவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தோடனே தோன்றுசிறப் பால்
செந்திறத்த தமிழோசையும் வடசொல்லும் இடம்பெற்ற வைணவம் தெய்வ வழிபாட்டிலும் மற்றச் சமூக
வீட்டுச் சடங்குகளிலும் தமிழுக்குத் தக்க இடமளித்து வருவது யாவரும் அறிந்ததே. திருமால் வழிபாடு சங்க
காலத்திலேயே இருந்தது என்பதைப் பரிபாடல் போன்ற பழந்தமிழ் நூல்களிலிருந்து தெளியலாகும்.
வடமொழிமறை போன்று தமிழ்மறை எனப்போற்றப்படும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் ஆழ்வார்கள் வாயிலாக அமுதமாக நமக்குக் கிடைத்துள்ளது. நாம் பெற்ற பேறாகும். இந்நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்னும் அருளிச்செயல் இருபத்து நான்கு பிரபந்தங்களை உடையது. இவற்றுள் முதன்முதலாகத் தோன்றியவை மூன்று திரு அந்தாதிகள், முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி இவற்றை முறையே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் அருளியுள்ளார்கள். இவர்களைத்தான் என அடுத்தடுத்த நடித்திரத்தில் அவதரித்தவர்கள் அம்மூவரும். மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழில் நூல்செய்து நாட்டையுய்த்த – பெற்றிமைபோர் என்று முதலாழ்வார் என்னும் பெரியவர்க்கு நின்ற துலகத்தே நிகழ்ந்து – என ஆசாரியப் பெருமகனை ஸ்ரீ மணவாள மாமுனிகள்(Manavala Mamunigal) கூறியுள்ளார்.
காஞ்சி மாநகரில் திருவெஃகா (kanchipuram Thiruvekha Temple) என்னுமிடத்தில் ஓர் பொய்கையில் ஐப்பசி திருவோண நாளன்று அவதரித்தவர் பொய்கையாழ்வார். இவர் திருமாலின் சங்கின் அம்சமாக அவதரித்தவர் என்பார்கள்.
திருக்கடன் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் ஐப்பசி அவிட்டத்தில் திருமாலின் கதையின் அம்சமாக அவதரித்தவர் பூதத்தாழ்வார். ஐப்பசி மாதம் சதய நன்னாளில் திருமாலின் வாளின் அம்சமாக அவதாரம் செய்தவர் பேயாழ்வார்.
இங்கனம் அவதரித்த இம்மூவரும் எல்லாம் வல்ல எம்பெருமானுடைய காரணங்கருதாக் கருணைப் பார்வையால் பயர்வற மதிறலம் அருளப்பெற்று அமைதிக்குனமாகிய சத்வகுணமே குடி கொண்டவராக எம்பெருமானுக்கே அடிமை செய்வதில் மாற்றம் உடையவராய், நிறைந்த ஞானம் பக்தி வைராக்யம் கொண்டவராய் உன்னுஞ் சோறு பருகுநீர் தின்றும் வெந்திலை யெல்லாம்.
கண்ணன்” என நம்மாழ்வார் அருளியதுபோல எம்பெருமான் குணங்களையே அருபவிப்பாராம், ஒருநாள் இருந்த இடத்தில் மறுநாள் இராமல் ஒவ்வொருநாள் ஒவ்வொர் ஊரில் தங்குகின்றவர்களாய் ஒருமுறை ஒருவர் அறியது தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இப்படியிருக்கும் காலத்தில் இம்மூவரைக் கொண்டு தமிழ்த் திவ்யப் ஒப்பந்தங்களை உலகுய்யத் தோற்றுவிக்க எம்பெருமாள் திருவுள்ளங்கொண்டு இவர்களைத் திருக்கோவலூரிலே சந்திக்கச் செய்தாள்.
முதலில் அவ்வூருக்கு வந்த பொய்கையாழ்வார் மாலையில் காலங்கடந்து வந்தமையால் எம் பெருமாளைக் காலையில் தரிசிக்கலாம் என எண்ணி மிருகண்டு முனிவருடைய ஆசிரமத்தில் இடைவழியில் இருக்க அனுமதி பெற்று அங்குப் படுத்துக்கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் பூதத்தாழ்வார் அங்கு வந்து தங்க இடம் கேட்க, இவ்விடம் ஒருவர் கிடக்கலாம் இருவர் இருக்கலாம்’ எனச்சொல்லிப் பொய்கையாழ்வார் அவரை வரவேற்று ஒருவரை ஒருவர் வணங்கி எம்பெருமான் திருக்குணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பின் பேயாழ்வாரும் அங்கு வந்து தங்க இடம் கேட்க இவ்விடத்தில் ஒருவர் கிடக்கலாம். இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் எதைக் கூறி பேயாழ்வாரை மற்ற இருவரும் வரவேற்றனர்.
மூவரும் முறைப்படி வணங்கி அவ்விடை சுழியில் நின்று கொண்டு கடல் கண்ணன் கருனையைச் சிந்தித்துப் பேசி களித்துக் கொண்டிருந்தனர். இஞ்ஞானிகளின் நெருக்கத்தை விரும்பிய எம்பெருமான் இவர்களை மேலும் நெருக்கத் தொடங்கினாள். இருள் சூழ்ந்த இடத்தில் இப்படி நெருக்குகின்றவர் யார் எதைக் கண்டறிய விளக்கேற்றத் தொடங்கினர்.
பொய்கையாழ்வார் ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யகதிரோன் விளக்காக’ எனத்தொடங்கி வருத்தம் புற இருள் மாற்ற மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திருவிளக்காக முதல் திருவந்தாதியைப் பாடினார். அடுத்துப் பூதத்தாழ்வார் அன்பே தகளியா ஆர்வமே நெய்யார் இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி நாவை கடர் விளக்கேற்றினேன் நாவற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் எனதத் தொடங்கி இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட ஞானமென்னும் நிறைவிளக்கேற்றி இரண்டாம் திருவந்தாதியைப் பாடினார். இவ்விரண்டு பாமாலை விளக்குகளினால் ‘மள்ளிய பேரிருள் மாண்டபின் கோவலூர் மாமலராள் தன்னோடு மாயளைக் கண்டு காட்டிய தமிழ்த் தலைவரான பேயாழ்வார் திருக்கண்டேன் வெளிர் மேனிகண்டேன் எனத் தொடங்கி மூன்றாம் திருவந்தாதியைப் பாடினார் மூவரும் இவ்வண்மையாகத் திவ்யபிரபந்தங்களை அருளிச் செய்து எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவித்துத் திருக்கோவலூர் இசைகாளி என்றும் போற்றப்படுகின்றனர்.
இறுதியாக அவர்களின் திவ்வியப் பிரபந்தங்களாகிய பானை சோற்றுக்கு ஒரு சோறு கொண்டு பதமறிவதுபோல ஒரே ஒரு பாடலைக் கொண்டு வாழ்க்கைத் தத்துவத்தை அறிவோம். பூதத்தார் பாடிய பாடல் அது தளக்கடிமைப்பட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப நாம் மாலை – வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்றுமிது வல்லால்
மாரியவர் பெய்கிற்பார் மற்று.
வனப்பகுதியில் ஒரு பெரு மேட்டுப்பகுதி இருப்பதாக வைத்துக் கொள்வோம் மழைபொழியும் போது ஆம் மேட்டுப்பகுதி நீர் முழுவதும் வீனே கிழிந்து வேறிடம் சென்றுவிடும். அந்தியாரைப் பள்ளமாக ஏரியாக வெட்டிவைத்துவிட்டால் மழைபெய்யும் போது நீர் தேங்கி வளத்தை வனப்புடையதாக ஆக்கி விடும், வளரும், பெருகும். ஆனால் எப்பொழுது மழைபொழியும் என்பது நமக்குத் தெரியாது மழைபொழியும்போது பயன்பெறலாம். அதுபோல நாமெல்லோரும் எம்பெருமானின் அடிமைகள் இந்நிலையை நாம் அறியாதிருந்தாலும், பிறரைப் போலன்றிப் பகுத்தறிவு பெற்றவர்களாயிருப்பதால் பெருமாளின் தாழ்த்தும் யெய்யலாம். அதுபோல இறைவன் நமக்கு உடனடியாக அருள் மழை பொழியலாம் அல்லது காலந்தாழ்த்தியும் அருளலாம். ஆனால் நாம் அவ்வருள் மழையைப் பெறுவதற்கு உரிய ஏரிபோன்று பள்ளமாகிய உள்ளத்தைக் கொள்ளவேண்டும் என்னும் கிருத்திகை இப்பாடலால் நாம் உணர்ந்து தெளிய வேண்டியதாயுள்ளது. இறைவனுக்கு அடிமை என்னும் எண்ணமின்றி நாமே நமக்கு இறை எறும்படி உள்ள நிலை வரைத்திட போன்றது. அத்திடரை ஒளியாகமாற்றுவதுபோல இறையருளைப் பெறுவதற்குரிய செயல்களைச் செய்வதாகும். அருள் மழை அவள் விருப்பத்தைப் பொறுத்தது.
இங்ஙனம் பாவரும் தமிழாால் பேர்பெறுபனால் பாவலர் பாதி நானறிவில் மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு எனப்புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதியாக ஒளிபாவாம் வெண்பாவால் நூறு நூறு பாசுரம் தல்கி ஒப்படைத்து இருள் ஓட்டியவர்கள்.
அவர்கள் பிறந்த நன்னாட்களில் அவர்களை நினைத்து அவர்கள் பாடிய பாமல்களை ஓதி உணர்ந்து நலமும் வளமும் பெறுவோமாக.
charama kainkaryam சரம கைங்கர்யம் – MangalaDeepam மங்கள தீபம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
—————————————————————————————————————————————————–
பாவையின் பாடல் சிந்தனை – Oruthi Maganai – Thirupaavai
மக வேத மனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்த் திருப்பாவை தமிழுக்கு ஒரு சொத்தாகும்.
பாவைப்பாடல்களின் ஒவ்வோர் வரியும் வெண்டளை யால் அமைந்து ஓசை நயம் மிகக்கொண்டுள்ளது. அமைந்த சொற்களும் பொருளாற்றலால் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக ஒன்றினைக் காண்போம்.
திருப்பாவை (Thiruppavai) இருபத்தைந்தாம்
பாடல், ‘ஒருத்தி னாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ (Oruthi Maganai Pirandhu)எனத் தொடங்குகிறது.
ஒன்று என்னும் சொல் ஒன்று எனும் எண்ணைக் குறிப்பதுடன் ஒன்றியிருக்கும் தன்மையினையும் குறிக்கின்றது.
ஒன்றாய் உள்ள பரம்பொருள் எல்லாவற்றுடனும் ஒன்றியும் உள்ளது. அப்படிப்பட்ட பரம்பொருள் மகனாகப் பிறந்த மையால் பேறுபெற்ற தேவகி ஒருத்தி என்னப்படுகிறாள். அப்பரம் பொருளையே மகனாக வளர்க்கும் பேறுபெற்றமையால் யசோதையும் ஒருத்தி என்னப்படுகிறாள். இப்படிப்பட்ட பரம்பொருள் பிறந்து வேறிடஞ்செல்ல உதவிய இரவும் ஓரிரவு எனப்பட்டது. எனவே இறைவனைப்போல ஒப்பற்ற நிலை தேவகிக்கும், யசோதைக்கும், இரவுக்கும் உண்டாயின. ஒன்றாம் தன்மையும் ஒன்றும் தன்மையும் கொண்டபரம்பொருளுடன் உறவு கொண்டமையால் பெயர் குறிப்பிடப்படாமல் ஒன்று எனும் எண்கொண்ட ஒருத்தி, ஓரிரவு ஒருத்தி எனச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அடுத்து வருகின்ற இருவினையெச்சங்கள் நம் எண்ணத்தைத் தூண்டிவிடுகின்றன. ஒளித்து, வளர இவையிரண்டிலும் ஒரு வேறுபாடு காண்கிறோம். ஒளித்து என்பது பிறவிளை (ஒளிந்து – தன்வினை) வளர
என்பது தன்வினை (வளர்க்க என்பது பிறவினை.) இங்கு ஒன்று பிறவினையிலும் ஒன்று தன்வினையிலும்
அமைவானேன் என்பது ஆராயற்பாலது.
தீயபுத்திக் கம்சனால் என்ள தீங்கு நேருமோ என அஞ்சிக் குழந்தையை ஒளித்து வளர்க்கக் கோகுலத்திற்குக்கொண்டு சென்றார்கள். பிறந்த இடத்தைவிட்டு வேறிடத்தில் மறைத்து விட்டார்கள். ஆனால் ஒளித்ததுபோல யாரும் அறியாமல் வளர்த்தார்களா? என்றால் அதுதான் இல்லை. கண்ணன்(Lord kannan) தானாகவே வளர்ந்தான். அவனை வளர்க்க இயலவில்லை என்பதுதான் உண்மை. இல்லாவிட்டால் ஒரு குழந்தை பேய்முலை நஞ்சுண்டு பிழைத்திருக்குமா? சகடாசுரனை உதைத்துத் தள்ளிச் சிதைத்திருக்குமா? கன்றினால் விளவெறிந்து அச்சிறு பிராயத்தில் வதைத்திருக்க இயலுமா? இத்தகு உயிர்போக்கும் தருணத்தில் யாராவது வந்து உதவினார்களா?
இல்லையே,
கண்ணன் தாளே தன்னைக் காத்து வளர்ந்தாளே ஒழிய அவனை வளர்த்தார் யாருமில்லை. கண்ணனை முயன்றார்கள்.
ஆயர்பாடியில்(Ayarpadi) நந்தன் மகளாக்கினார்கள். ஆனால் வளர்ச்சி, கண்ணனே மேற்கொண்டதாகக் காண்கிறோம்.
இதிலிருந்து புலப்படுவது என்னவெளில் நாம் இறைவனைப் பாதுகாப்பதாக எண்ணுகிறோம்.
கோயிலுக்குள் இறைவனுக்கு இடம் அமைத்து கதவமைத்து பூட்டி ஒளித்துவிடுகிறோம். நம் எண்ணம் இறைவளை ஒளித்துவைக்க வேண்டும் என்பதைக் குறிக்க ஆண்டாள் ஒளித்து எனப் பிறவினையாலும், ஆனாலும் அவன் தானேதான் வளர்கின்றான் என்பதைத் தன் வினையாலும் பாடலை அமைத்துள்ளாள்.
இதிலிருந்து முயற்சி நம்முடையது என்பதும் முடிவு அவனுடையது என்பதும் தெளிவாகிறது. உண்மையில் இறைவனை நாம் ஒளிக்கவும் இயலாது. வளர்க்கவும் இயலாது. அவன்தான் நம்மை நம்வினையில் ஒளித்து அருளி வளர்க்கின்றாள் என்பது அறியக்கிடக்கின்றது. அவள்தானே இன்னருள் செய்வான் என்பதனைக் கண்ணன் வரலாற்றில் வாகாகக் காணலாம். காக்கும் இயல்வினன் கண்ணனைக் காக்க வேண்டுமா? எனவே, அவன் நம் உள்ளத்தில் வளர ஆவன செய்வோம்.
ஒளிக்க – காரைக்கால் கு. அரங்கநாதாச்சாரியர்
