By S.Gokulachari, Editor, Aalayadharisanam
ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைப் பாராயணம் செய்யலாம். தான தருமங்கள் செய்வதும் பாவங்களைப் போக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும். இயலாதவர்கள் பெருமாளின் நாம ஜெபத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கலாம்.

ஏகாதசி விரதத்தில் நாம் செய்யக்கூடாதது. Dont’s on Ekadesi Viratham
1.வெண்கலப் பாத்திரத்தில் உணவு உண்பது
2.மாமிசத்தை சமைத்து உண்பது
3.சூதாடுவது
4.உறங்குவது
5.வெற்றிலை பாக்கைப் போடுவது
6.பிறர் குறையைப் பேசிக்கொண்டிருப்பது
7.கோபம் கொள்வது (பிறரை மோசமான சொற்களால் திட்டுவது )
- பொய் சொல்வது
ஏகாதசி அன்று சில செயல்களை செய்வது சாத்திர விரோதம்.முடி வெட்டிக் கொள்வது, முகச் சவரம் செய்து கொள்வது, உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
ஏகாதசியின் பெருமையை ஒருவர் படித்தாலும், யாரை யாவது படிக்கவைத்து கேட்டாலும், அவர் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைந்து விடுவார் என்பது நிச்சயம்.
ஏகாதசியின் பெருமை
ஒரு மாதத் திற்கு இரண்டு ஏகாதசிகள். வளர் பிறை ஏகாதசி ஒன்று. தேய் பிறை ஏகாதசி ஒன்று. ஆக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25வது ஏகாதசியும் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.அந்தச் சிறப்புகளை நாம் பல கட்டுரைகளில் பார்த்து வருகின்றோம்.
இந்த 24 ஏகாதசிகளிலும் ஒரு மனிதன் இகத்திலும் பரத்திலும் பெற வேண்டிய அத்தனை சவுபாக்கியங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஏகாதசி விரதத்தால் கிடைக்காத நற்பலன் எதுவு மில்லை. செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், இழந் ததைப் பெறுதல், பதவி என, ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஏகாதசி விரதத்தால் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றன.
ஏகாதசி மகாத்மியத்தை பல்வேறு இதிகாச புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. மகாபாரதத்தில் பற்பல இடங்களில் ஏகாதசியின் பெருமை சொல்லப் பட்டிருக்கிறது.
கங்கையின் புனிதமான நதி இல்லை. தாயினும் சிறந்த உறவு இல்லை. காசியை விட சிறந்த தலம் இல்லை. ஏகா தசியை விட சிறந்த விரதம் இல்லை என்று என்று ஏகாதசியின் பெருமையை மஹரிஷிகள் சொல்கிறார்கள்.
பொதுவாக விரதம் என்றால் அன்று பட்டினி இருந்து இறைவனை வழிபட்டு பிறகு தான் சாப்பிடுவார்கள். இது எல்லா விரதத்திற்கும் பொருந்தும்.
ஆனால் ஒருவன் சாப்பிடவில்லை என்று சொன்னால். அவன் பட்டி னியாக இருக்கிறான் என்பதை நம்முடைய மக்கள் எப்படி குறிப்பி டுவார்கள்?

“என்ன, இன்று ஏகாதசியா?” என்பார்கள். அந்த அளவுக்கு ஏகாதசி என்றால் பட்டினி விரதமாக இருக்க வேண்டும் என்று மக்களின் ஆழ்மனதில் பதிந்து இருக்கிறது.
ஒருவரை வாழ்த்துகின்றபோது
தனம் தான்யம் பசும் பக புத்ர லாபம்
சத சம்வத்சரம் தீர்க்கம் ஆயு :
என்று வாழ்த்துவார்கள் .
பல்லாண்டு காலம் செல்வத்துடனும், தானிய விருத்திகளுடனும், பசுக்களுடனும், சற்புத்திரர்களுடனும் வாழவேண்டும் என்று இந்த வாழ்த்திற்குப் பொருள்.
- பயிலும்சுடரொளி விளக்கம் மற்றும் பாசுரங்கள் (திருவொய்மொழி 3.7)

- வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்(periyalarThiruozhi pasuram 1)-By S.Gokulachari)

- திருமங்கை ஆழ்வாரும் திருவேங்கடமும் -1

- காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள்

- வராகர் அருளும் திருமலை(வராகர் பெருமை -1)

- மோஹினி ஏகாதசி (Mohini Ekadesi)

