
ஐப்பசி I வாரம் ராசி பலன் – பகுதி – 2 Aippasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 2
(16.10.2021 முதல் 22.10.2021 வரை) Raasi – Palan – Astrology predictions for Zodiac Signs in Tamil – Aippasi 1 st Week – October 2021
சிம்மம்
சாதகங்கள் :
தனாதிபதி ஆகிய புதன் ஆட்சி உச்சம் பெற்று இருக்கிறார். இவருக்கு குரு பார்வையும் இருக்கிறது. எனவே குடும்ப உறவுகள் சிக்கலின்றி இனிமையாக இருக்கும். பொருளாதாரமும் நன்றாகவே இருக்கும். சுபகாரிய முயற்சிகள் பலிதமாகும். சுக்கிரன் நான் காமிடத்தில் திக்பலம் பெற்று இருக்கிறார். ராசிநாதன் சூரியன் துலா ராசி மூன்றாம் இடதில் மறைவது ஒருவகையில் நல்லது.
கவனம் தேவை:
சூரியனுக்கு நலம் தரும் ராசி என்றாலும் அவர் நீச்சம் அடைந்து வலு குறைந்து இருக்கிறார். எனவே அவர் சில மனசஞ்சலங்கள் தருவார். எனவே எதிலும் முன்யோசனை தேவை. 5க்கு உரிய குரு ஆறில் மறைந்திருக்கிறார். அதோடு சனி சேர்க்கை என்பதால் பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் கல்வி குறித்து கவனிக்க வேண்டும். 18 முதல் 22 ஆம் தேதி வரை எதிலும் கவனமுடன் இருங்கள். புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு செய்யாதீர்கள்.
சந்திராஷ்டமம்
18 .10. 21 காலை நாலரை மணி முதல் 22:10.21 பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. இக்காலத்தில் எதிலும் முன்னெச் சரிக்கையோடு செயல்படுங்கள். இரவுப் பயணங்களை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனங்கள் ஓட்டுகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
பரிகாரம்
ஆதித்திய ஹ்ருதயம் படிப்பது நல்லது. காலையில் பல் துலக்கி, முகம் அலம்பி விட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ராசிநாதனை வலுப்படுத்த வேண்டும்.
கன்னி
சாதகங்கள்:
சந்திரன் நிலையால் வாரத்தின் பெரும்பகுதி நன்றாகவே அமையும். எதிர்பார்த்த நற்செய்திகள் கிடைக்கும். பற்பல சறுக்கல்களும் வழுக்கல்களும் இருப்பினும் சமாளித்து முன்னேறும் திறமையை மூன்றில் உள்ள கேது கொடுப்பார். அவர் சில முன்னெச்சரிக்கை உணர்வுகளைத் தந்து உங்களை பாதுகாப்பார். தனாதிபதி சுக்கிரன் 3-ல் இருப்பது நல்லது. ஆன்மீக விஷயங்கள் அதிகம் பேசுவீர்கள். தொழில் வணிகம் சிக்கலின்றி நடக்கும். அரசியல்வாதிகளுக்கும் கலைத்துறையில் இருப்பவருக்கும் இவ்வாரம் லாபகரமாக இருக் கும்.
கவனம் தேவை
சகோதரர்கள் கசப்பை ஏற்படுத்தலாம். பேச்சுவார்த்தையில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலையும் பலமாக இல்லை என்பதால் செலவுகளில் சிக்கனம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம்:
22:10.21 பிற்பகல் 2 மணி முதல் ஒன்றரை மணி வரை சந்திராஷ்டம காலம். இக்காலங்களில் இயன்ற அளவு கேட்கின்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அதிக வார்த்தைகளை விட வேண்டாம்.மாட்டிக் கொள்வீர்கள்.
பரிகாரம்
பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். அவசியம் சனிக்கிழமை அன்று துளசி மாலை சாற்றி வழிபட, துன்பங்கள் விலகும். இயன்றால், ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள்.
துலாம்
சாதகங்கள்:
ராசிநாதன் 2 இல் சஞ்சரிப்பதால் தனவரவுகள் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருப்பதோடு ஒருவருக்கு ஒருவர் ஆதாயம் உண்டு. தொழில் வகை இடமாற்றங்களும் உண்டு. சந்திரன் நிலையை கவனிக்கும் போது, இவ்வாறு முழுவதுமே அனுகூலமாகவே இருக்கிறார். உங்களுக்கு மன ஆறுதலையும் தெம்பையும் தருவது சந்திரன் மட்டுமே.குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால் இவ்வாரம் ஒரு முடிவு கிடைக்கலாம். சுப காரியங்களை எளிதில் நடத்தி விடலாம். கலைத்துறையினரும் அரசியல் வாதிகளும் ஆதாயத்தை அடைவார்கள்.
கவனம் தேவை
சூரியன் நிலையால் தந்தைவழி உறவுகளின் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுக ஸ்தானத்தில் உள்ள சனி சுகத்தைக் கெடுக்கும். சில ஆரோக்கிய குறைபாடுகள் வந்து சரியாகும். குறிப்பாக முழங் கால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று சிவன் கோயில்களில், நவகிரகங்களுக்கு விளக்கேற்றி பிரதக்ஷிணம் செய்யுங்கள். இயன்றால் ஏதேனும் ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.
—————————————————————————————————-
விருச்சிகம்
சாதகங்கள்:
ராசிநாதன் செவ்வாய் 11-ல் லாபஸ்தானத்தில் இருப்பதால் இவ்வாரம் ஏற்றமான வாரமே. எடுத்த காரியம் கைகூடும்.வருமானம் நன்றாக இருக்கும். சகோதரர்கள் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில், வணிகம் பிரச்சினையின்றி இருக்கும். உறவுகள் பலப்படும். ஆரோக்கியமும் நன்று. கலைத் துறையினர், அரசியல் துறையினர் சில நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்.
கவனம் தேவை
நட்பு, கணவன் மனைவி உறவுகள், மற்றும் உங்களை சந்திப்போர் ஆகியோருடன் 1ல் உள்ள கேது, ஏழில் உள்ள ராகு, இரண்டும் சிறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளும் வாய்ப்பினைத் தரும். அதிகம் பேசினால் உங்கள் பேச்சையும் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் திருப்புவார்கள். உங்கள் மனம் சஞ்சலப்படும் படி சில காரியங்கள் நடக்கும்.
பரிகாரம்:
சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். வியாழக்கிழமை ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். குரு ராகவேந்திரர் பக்கபலமாக இருப்பார்.

