
ஐப்பசி I வாரம் ராசி பலன் – பகுதி – 3 Aippasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 3
(16.10.2021 முதல் 22.10.2021 வரை) Raasi – Palan – Astrology predictions for Zodiac Signs in Tamil – Aippasi 1 rd Week – October 2021
தனுசு
சாதகங்கள் :
சந்திரனின் நிலையால் 16 ,17 மற்றும் 21 ,22 தேதிகளில் மிகுந்த நன்மை உண்டு. சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும். சொத்துக்களால் வருமானம் கூடும். புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம் உருவாகும். அரசாங்க உதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். குடும்ப ஒற்றுமையும் நன்றாக கலகலப்பாக இருக்கும். சுப நிகழ்வுகள், திருமணம், மழலைச் செல்வம் கிடைக்கும் காலமிது. கலைத் துறையினர் மற்றும் அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும்.
கவனம் தேவை:
வண்டி வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. அடிக்கடி மனம் சோர்ந்து போகும். இறைவனை வணங்குங்கள். தந்தையார் மூலம் சில பிரச்சனைகள் விரிசல்கள் ஏற்படலாம். 18 ,19, 20 தேதிகளில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியம் குறித்தும் கவனம் தேவை. சிறு பிரயாணம், இடமாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்
ஒரே பரிகாரம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தான். வில்லேந்திய வீரனான ஸ்ரீராமரை தினசரி பூஜை செய்யுங்கள். ராமாயணத்தில் ஏதாவது ஒரு அத்தியாயத்தை வாசியுங்கள்.
——————————————————————————————————————–
மகரம்
சாதகங்கள்:
ராசியில் உள்ள குருவும் சனியும் கலப்படமான பலன்களைச் செய்யும். ஜென்மச்சனி சில சிக்கல்களைத் தரும். பதினோராம் இடத்து கேது, அதைத் தாங்கும் வலிமையையும் தரும் என்பதால் அதிக கவலை வேண்டாம். சுக்கிரனால் சில மாற்றங்கள் நிகழும். அது அனுகூலமாக இருக்கும். குரு ,ராசிநாதனுடன் இணைந்து இருப்பதால் எதிலும் மனதைரியத்தை ஊட்டுவார். ” பார்த்துக் கொள்ளலாம்” என்ற தன்னம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குத் தாரக மந்திரமாக இருக்கும். எந்த விஷயத்திலும் அதிகமாக கவலைப் படவேண்டாம். அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். காரணம் கிரகநிலைகள் அனுகூலமாக இல்லை.
கவனம் தேவை
மகரத்திற்கு பல கிரகங்கள் பலமின்றி ,சாதகமற்ற சாதாரணமான நிலையில் இருப்பதாலும், ஜென்மச் சனி நடப்பதாலும், இன்னும் கொஞ்ச காலம் அவர்கள் எல்லா விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சந்திரன் நிலையால் 21, 22 தேதிகளில் அதிக கவனமுடன் இருங்கள்.
பரிகாரம்
பூஜை அறையில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்த பரிகாரமாகும். சனிக்கிழமை பெருமாள் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
——————————————————————————————————————–
கும்பம்
சாதகங்கள்:
சனி ராசிநாதன். ஆனால், அவர் 12-ல் இருக்கிறார். வருமானமும் தருவார். செலவும் வைப்பார். தன காரகன் குருவும் விரயத்தில் இருப்பதால் உங்கள் காசு கையில் இருந்தால், அடுத்தது செலவுதான். அதை உடனடியாக எடுக்க முடியாதபடி, ஏதேனும் ஒரு விதத்தில் பத்திரப்படுத்தவும். கடன் கிடைக்கும் என்பதால் இப்போதைக்கு எச்சரிக்கையாக நேர்மறை முதலீட்டில் (வீடுகட்டுதல் பிளாட்) முதலீடு செய்யுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 16, 17, 21, 22 தேதிகளில் சாதகமான நாட்கள்.
கவனம் தேவை
வார்த்தைகளை சூடு பறக்க பேச வேண்டாம். அது உங்களுக்கு பாதகமான விளைவுகளைத் தரும். ஏமாற்றங்களும் எரிச்சலும் வரும். உறவுச் சிக்கல்கள் ஏற்படலாம். திட்டமிடாத செயலில் இறங்கினால் சிக்கல்தான். 18, 19, 20 தேதிகளில் அதிக கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம்.
பரிகாரம்:
கணபதியைக் கைதொழ எதுவும் கைமீறிப் போகாது. சதுர்த்தி விரதம் இருக்கலாம். அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாத்தி வழிபடுங்கள்.
——————————————————————————————————————–
மீனம்
சாதகங்கள்:
ராசிநாதனும் லாப விரயாதிபதியும் ஒன்றுகூடி இருக்கிறார்கள். மற்ற கிரகங்களும் ஓரளவு அனுகூலமான நிலை என்பதால், தொழில், வருமானம், லாபம் போன்றவை குறித்து கவலை கொள்ள வேண்டாம். சுமுகமாக இருக்கும். மற்ற உறவுகளும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சுப நிகழ்வுகள் உறுதியாகும். சிலருக்கு வேலை மாற்றங்கள் இருக்கும். 18 ,19, 20 தேதிகளில் சாதக மானவை. இவ்வாரமும் உங்களுக்கு ஓர் சீரான வாரமே.
கவனம் தேவை
ஏழில் செவ்வாய் இருப்பதால் நண்பர்களிடமும் பங்குதாரர்களிடமும் கவனம் தேவை. சகோதர உறவுகளிடையே சிறு உரசல்கள் வரலாம். வேலைகளில் தாமதம், சுணக்கம் ஏற்படலாம். கவனம் தேவை. வேலை நிமித்தமாக இட மாற்றங்கள் ஏற்படலாம். 16, 17, 21 22 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
அபிராமி அந்தாதி தினம் ஓரிரு பாடல்கள் பாராயணம் செய்யவும். வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.
