கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
சங்கடங்களைத் தீர்த்து சகல காரியங்களையும் சித்தி தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் , விநாயகருக்கான பிரத்தியேகமான விரதம். விநாயகப்பெருமானுக்குரிய மந்திரத்தில் அவரைப்பற்றி
” பிரசன்ன வதனம் சதுர்புஜம் “என்று வருகிறது அல்லவா.அவர் நாற்கரங்களோடு , தேஜோ மயமான முகத்தோடு இருப்பதை, நான்காம் திதியான சதுர்த்தசி திதியில் வணங்கவேண்டும். இதனால் நன்மைகள் கூடிவரும் .
சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் காலை முதல் விரதமிருந்து, விநாயகருடைய பெருமையை எண்ணி, மாலை அவருடைய திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல் மாலை கட்டி அவருக்குச் சமர்ப்பிக்கவேண்டும் . எல்லா விநாயகர் ஆலயங்களில் அபிஷேக ஆராத னைகள் நடக்கும். அதற்கு உதவலாம்.
விநாயகர் கவசம், விநாயகர் நான் மணிமாலை, விநாயகர் அகவல் முதலிய நூல்களைப் பாராயணம் செய்ய லாம். இதனால் காரியங்களில் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். நவ கிரகங்களில் கேதுவால் ஏற்படும் அத்தனை தடைகளும் விலகும்.
அன்று சொல்ல வேண்டிய கணபதி மந்திரங்கள்
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
பொருள்: வாசனை பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,
பெருமலரை உடைய திருமகளின் அருளும் , ஆரோக்கிய வாழ்வும்
கிடைக்கும்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
இயல் – பால்; இசை – தெளி தேன்; நாடகம் – பாகு; அறிவியல் – பருப்பு
கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே.
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
மேற்படி மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்
