பொதுவாக கிரகங்களிலேயே நாம் அனைவரும் பயப்படும் கிரகம் சனி. அவர்தான் ஏழரைச் சனி, அஷ்டம சனி என்று பயமுறுத்துகிறார். ஆனால் ஏழரைச் சனியால் எத்தனையோ நன்மைகள் பலருடைய வாழ்க்கையில் நடைபெற்றிருக்கின்றன.
திருமணம் ஆகிறது. வேலை கிடைக்கிறது. தொழில் வளர்ச்சி நடக்கிறது. இதெல்லாம் கூட ஏழரை சனியில் நடக்கிறது.
எனவே, ஏழரை சனியோ, அஷ்டம சனியோ அது அவரவர் ஜாதகத்தில் சனியினுடைய அமைப்பினைப் பொறுத்து தான் இருக்கிறது .
தவிர எல்லோரையுமே ஏழரைச் சனி பயமுறுத்துவதில்லை. இன் னொரு விஷயம் .சனியை போன்ற நீதிமான் இல்லை என்பார்கள். ஒருவர் ஆரம்பத்தில் மிகுந்த அனுபவத்துடன், கஷ்டப்பட்டு, முன்னுக்கு வந்து நிறைய சம்பாதிக்கிறார் என்று சொன்னால், சனியின் பூரணமான ஆசி அவருக்கு இருக்கிறது. சனி தனது தசையில் படிப்பினையும் சொல்லித் தந்திருக்கிறார். பக்குவத் தையும் சொல்லித் தந்திருக்கிறார் .அதன் மூலமாக வாழ்க்கையில் வெற்றியையும் பெற வைத்திருக்கிறார் என்று பொருள்..
நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஐஸ்வரியத்தையும் தரக் கூடியவர் சனி. ஜாதகத்தில் சனிபகவான் பலம் குறைந்து இருந் தாலும், ராகு, கேது போன்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், ஆதிபத்திய விசேஷம் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் சனிக் கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும். மாலையில் பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். காகத்திற்கு எள் சாதம் வைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.யாரையும் ஏமாற்றக்கூடாது.தவறான சிந்தனை கூடாது. சனி காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம்.
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
