கீர்த்தியோடு வாழ நினைக்கும் கிருத்திகை ராசி அன்பர்களே, நட்சத் திரத்திற்கு உரிய சூரிய பகவானுக்கு பகை கிரகம் சனி என்பதால், இந்தச் சனிப்பெயர்ச்சி மிகவும் துன்பத்தைக் கொடுக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் .
பஞ்சமாதிபதியான சூரியன் உச்சம் பெறும் நட்சத்திர ராசியில் இருப்பதால் உங்களுக்கு சனியினால் பெரிய அளவுக்கு இடர்பாடுகள் வராது. சனி பகவான் எந்த விதத்திலும் உங்களுடைய முயற்சிகளுக்கு தொல்லை தர மாட்டார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் விழிப்புணர்வோடு எந்தக் காரியத்தையும் செய்யுங்கள். உங்கள் தன்னம்பிக்கை இந்த சனிப் பெயர்ச்சியில் தலைதூக்கி நிற்கும். கூடுதல் பொறுப்புக்கள் வந்து குவிந் தாலும் அதை சரளமாக எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும் .புதிய வாய்ப்புகள் கிட்டுவதால் உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்தச் சமயத்திலும் நீங்கள் தாமதம் இன்றி செயல்படுவதை மட்டும் கைக்கொள்ளுங்கள். வீட்டில் விசேஷ காரியங் களும் சுப காரியங்களும் நடைபெறும் வாய்ப்பு உண்டு. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். தேவையில்லாத பொருட் களை வாங்கக் கூடிய சூழல் அமைந்து விரயத்தை கொடுக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்துங்கள் .பாதகத்தில் அமைந்து ராசியைப் பார்க்கும் சனி, அவ்வப்பொழுது சில பிரச்சனைகளை கொடுப்பார்.குறிப்பாக தகவல் பரிமாற்றம் இவற்றில் மிகுந்த கவனத்தோடு இருங்கள். உங்களுடைய எண்ணங்களைத் தெரிவிப்பதில் தாமதப்படுத்துவதால் நிலைமை உங்க ளுக்கு எதிராக மாறும் அல்லது நஷ்டத்தைக் கொடுக்கும். பிறருடைய பேச்சை நீங்கள் முழுவதுமாக நம்பி விடக்கூடிய சூழலில் பல தவறான தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். தகவல்களை முடிவெடுக்கும் முன் சலித்துப் பார்த்து ,விசாரித்துப் பார்த்து, ஒரு முடிவுக்கு வாருங்கள். உறவினர்களையும் முதியவர்களையும் உதாசீனப்படுத்த வேண்டாம். எப் பொழுதும் உங்கள் பொருள்களை பத்திரப்படுத்துங்கள். அவ்வப்பொழுது பொருள்கள் தவறுவதற்கும் உடைவதற்கும் வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு
குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த பெண்மணிகள் அதாவது மாமியார், தாயார், மூத்த உறவினர்கள் போன்றவர்களிடம் அன்போடு இருங்கள்.பகை பாராட்டாதீர்கள். வீட்டில் வேலை செய்ய வருகின்ற பெண்மணிகளால் சிறு சலசலப்புகளும் பிரச்சனைகளும் தோன்றலாம் என்பதால் அவர்களிடம் தேவையில்லாத விஷயத்தை பேசாதீர்கள். மூட்டு வலி மற்றும் சிறுநீரக தொற்று முதலிய ஆரோக்கிய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கவனமாக இருங்கள்.
கலைஞர்களுக்கு
உங்கள் வாய்ப்புகளை சரியான கவனியாததால் மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு பிறருக்கு தந்து விடுவார்கள் என்பதால் கவனம் தேவை.
மாணவர்களுக்கு
அதிகச் சோம்பலும் திட்டமிடாமல் இருப்பதாலும் பெரிய அளவில் மதிப் பெண்களில் கோட்டை விடும் அபாயம் உண்டு. எனவே எக்காரணத்தை முன்னிட்டும் படிப்பிலிருந்து கவனத்தை சிதற விட வேண்டாம்.
மதிப்பெண்கள்
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு 60 மதிப்பெண்கள் வரை தரலாம். மீதி உள்ள 40 மதிப்பெண்களுக்கு நீங்கள் கவனமாக இருந்து சிரமங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
1.லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்
2.தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை
விரை குழுவு மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடனும் மற்றவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
என்கின்ற பாசுரத்தை காலையிலும் மாலையிலும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். சனி பெயர்ச்சியின் தொல்லைகள் நீங்கும்.
