துடிப்பும் உழைப்பும் மிக்க ரோகிணி நட்சத்திரத்துக்காரர்களே, உங்களுடைய இனிமையான சுபாவத்துக்கு ஏற்றவாறு சனி பகவான் அடுத்த 2 1/2 ஆண்டுகள் அருளை அள்ளி வழங்க இருக்கிறார் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று, விரய ஸ்தானத் தையும், சுகஸ்தானத்தையும் அவர் பார்வையிடுகிறார். சேமிப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இயன்றால் வீடு முதலிய நிரந்தர சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். உத்தியோக உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. உறவுகளை பேணினால் மிகச் சிறந்த உயரத்தை அடையலாம். ஜீவனஸ்தானத்தில் சனி இருப்பதால் தொழிலை முறையாக நடத்துங்கள். முறை தவறிய தொழில் உங்களை பழிவாங்கி விடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் மதிப்போடு நடந்து கொள்ளுங்கள்.தர்மகர்மாதி யோகம் பெற்ற சனியால் தொழில் வளர்ச்சிக்கான காலகட்டம் வந்துவிட்டது. உங்கள் திட்டங்கள் அடுத்த ஆறு மாதங்களில் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனிக்குத் துணையாக விரைவில் ராகு பகவான் 11 இல் சஞ்சரிக்க இருக்கிறார்.அப்போது உங்கள் மனோரதங்கள் பூர்த்தியாகும். இத்தனை இருந்தாலும் தொழில் ஸ்தானத்தில் சனி இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல்களில் மிக மிக கவனம் வேண்டு.ம் மூன்றாம் மனிதரை நம்பி ஏமாந்து விடக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் அவ்வப் பொழுது பாதிப்புகள் ஏற்படும். பல விஷயங்களில் ஏன் இந்த காரியத்தை செய்தோம் என்கிற உணர்வும் ,டென்ஷன்,கோபமும் ஏற்படுவதை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு உத்தி யோக நெருக்கடிகளும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு
பெண்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிறரிடம் கடன் வாங்க வேண்டாம் சிறு சேமிப்பு முதலியவற்றை கையாளும் பொழுது ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். இல்லை எனில் வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள நேரும்.
மாணவர்களுக்கு
மாணவ மாணவியர்கள் மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டிய காலகட்டம் இது. அப்பொழுதுதான் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும் .தேவை யற்ற சகவாசங்களை விட்டுத்தள்ளுங்கள். கவனத்தை படிப்பில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் .
கலைஞர்களுக்கு
தற்சமயம் பெரிய மற்றம் இல்லை.அடுத்த ஒரு வருடத்தில் நல்ல வாய்ப்புக்கள் வரும்.
மதிப்பெண்கள்
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 70 மதிப்பெண்களைத் தருகின்றது பெரும் பாலான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். சில தடை களையும் நீங்கள் பொறுமையுடன் சமாளித்தால் அதையும் நீங்கள் வெற்றி கரமாக மாற்றிக் கொள்ளலாம்
பரிகாரம்
1.வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்து தொடர்ந்து வணங்கி வாருங்கள்
2.மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்ய மறக்காதீர்கள்
3.என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன் ஏதும் அருந்திலன்
என்னைத் தன்னடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தேனே
என்ற தேவாரத்தை தினம் காலையில் பாராயணம் செய்யவும்
