பண்பும் பொறுமையும் அன்பும் கொண்ட பரணி நட்சத்திர நேயர்களே, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல வீரியமான பலன்களைத் தர இருக்கிறது. முழு மூச்சில் நீங்கள் முன்னேறக் கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உரிய பலாபலன்கள் கிடைக் கும். நீங்கள் மற்றவர்களைப் பற்றி அவர்களது குறைகளைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தாமல் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்து வதன் மூலம் உங்களுடைய முன்னேற்றம் தடையில்லாமல் இருக்கும். இனிமையான பேச்சினை கைக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுக்கிரன் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள் அல்லவா, எப்பொழுதும் யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொடர்ந்து பதட்டப்படாமல் சீரான முறையில் உங்கள் செயல்பாடு அமைந்தால் பிறரும் பாராட்டும்படியாக உயர்வு கிடைக்கும். உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு தரும் நிலையில் தான் இந்த சனிப்பெயர்ச்சி அமைந்திருக்கிறது .
சனியின் பார்வை உங்கள் நட்சதிரம் அமைந்த ராசியில் பதிவதும் அடுத்த 11 மாதங்கள் ஜென்மத்தில் ராகு குரு அமைந்திருப்பதும் சில வேலைகளைத் தாமதப்படுத்தும். எனவே கவனமாகச் செய்ய வேண்டும். முடிவெடுப்பதில் சற்று தாமதம் செய்யும் நீங்கள், எந்த முடிவை எடுத்தாலும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
சனி பெயர்ச்சியின் முதல் பகுதி உங்களுக்குச் சற்று இடைஞ்சலாக இருந் தாலும் சனி பெயர்ச்சியின் இரண்டாவது பகுதி உங்களுக்குச் சிறப்பாகவே இருக்கிறது .குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு இப்பொழுது சரியான கிரக நிலைகள் அமைந்திருக்கின்றன. முதல் பகுதியில் சற்று விரயங்கள் கூடு தலாக ஆனாலும் அடுத்த பகுதியில் உங்களுக்கு சேமிப்பு கையில் தங்க ஆரம் பித்து விடும். சுபத் தடைகள் விலகி திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிச் சயமாகும் தருணம் இது.
பெண்களுக்கு
குடும்பத்தில் உங்கள் கௌரவம் பொங்கும். அதே நேரம் நீங்கள் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குழு பணபரிவர்த்தனை (மற்றவர்கள் பணம் ) முதலிய விஷயங்களில் சற்று சுணக்கமாக இருந்தாலும் பெரும் சிக் கலில் மாட்டிக் கொள்வீர்கள் பழிச்சொல் வரும்படி நடந்து கொள்ளாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
கலைஞர்களுக்கு
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானங்கள் கூடும். விருதும் புகழும் உங்களைத் தேடி வரும் என்பதால் உங்கள் திறமை யை இந்த காலகட்டத்தில் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் .
மாணவர்களுக்கு
படிப்பில் சிறு சோம்பேறித்தனமும் அலட்சியமும் அவ்வப்பொழுது வரும். விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் உள்ள மாணவர்கள் மிகச் சிறப்பான இடத்தை பெறுவார்கள்.
மதிப்பெண்கள்
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 75 மதிப்பெண்களைத் தருகின்றது பெரும் பாலான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும் சில தடை களையும் நீங்கள் பொறுமையுடன் சமாளித்தால் அதையும் நீங்கள் வெற்றி கரமாக மாற்றிக் கொள்ளலாம்
பரிகாரம்
1.வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒரு அகல் விளக்கு ஏற்றி வையுங்கள்
2.துர்க்கை அம்மன் தொடர்ந்து வணங்கி வாருங்கள்
3.துஞ்சும் போது சுடர் வீடு சோதியை
நெஞ்சில் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி நான் மறக்கிற்பனே
என்ற பதிகப் பாடலை காலையிலும் மாலையிலும் பாராயணம் செய்யுங்கள்.
